Showing posts with label saibaba tamil. Show all posts
Showing posts with label saibaba tamil. Show all posts

Monday, November 30, 2020

NOVEMBER 30






http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

உன்னுடைய எல்லா பொறுப்புகளும் என்னுடையவை, உனக்கு எந்த தீங்கும் நேராது




"காகா துலா கால்ஜி கஸ்லி மலா சாரா கல்ஜி ஆஹே "(மராத்தி மொழி), அதாவது, " காகா, உமக்கு ஏன் கவலையும் பொறுப்பும் ? எல்லா பொறுப்புகளும் என்னுடையவை " 

- ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா


 ( பாபா தனது பக்தரான எச்.எஸ். தீக்ஷித்திடம் கூறியது. திரு. தீக்ஷீத் பாபாவிடம் வைத்திருந்த திடமான விஸ்வாசத்திற்காக பாபா விசேஷமாக அருளிய வாக்கு இது. மானுட சக்திகளைக் கொண்ட எந்த ஒரு சாதாரண மனிதனும் அத்தகைய சாஸனத்தை அளிக்கமுடியாது. ஆனால், அதை அருளியது தெய்வீக அவதாரமான பாபா.)

பாபாவிடம் பூரண சரணாகதி அடைந்த எல்லா பக்தர்களுக்கும், பாபாவின் இந்த வாக்குறுதி பொருந்தும். அத்தகைய  பக்தன் மற்றும் அவனது குடும்பத்தினரின் எல்லா பொறுப்பும் பாபாவின் தெய்வீக தோள்களால் தாங்கப்படுகிறது, எந்த வித தீங்கு நேரும் என நினைக்கவும் அவசியமில்லை.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, November 28, 2020

தெய்வமும் பாபாவும் ஒன்றே




கண்டேபா கோவில் பூசாரியும் பாபாவின் மிக நெருங்கிய பக்தருமான மஹல்சபாதியின் மகன் ஸ்ரீமார்த்தாண்ட் என்பவர் ஒருநாள் கண்டேபா கோவில் வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.  அப்போது பாபா அங்கே வர மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று வணங்கினார்.

பாபா கண்டேபா கோவிலுக்குள் போவதை பார்த்துக் கொண்டிருந்தார்.  அப்போது திடீரென பாபா கண்டேபா சுவாமியின் விக்ரஹத்துக்குள் ஊடுறுவி விட்டார்.  மார்த்தாண்ட் விரைந்து சென்று விக்ரஹத்துக்கு முன்னாலும் பின்னாலும் பாபாவைத் தேடினார்.  ஆனால் பாபா அங்கே இல்லை.

'கோவிலுக்குள் வந்த பாபா எங்கே சென்றார்!'  என்று மார்த்தாண்ட் பிரம்மித்து நிற்கையிலே,  பாபா மீண்டும் கண்டேபா விக்ரஹத்தின் உள்ளிருந்து வெளிப்பட்டு மார்த்தாண்டை  புன்சிரிப்புடன் நோக்கிவிட்டு  கோவிலின் வெளியே சென்றார்.

அதுநாள்முதல் மார்த்தாண்ட், "தெய்வமும் பாபாவும் ஒன்றே!" என்பதை புரிந்துகொண்டார்.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, November 27, 2020

நம்பிக்கையுடன் அழைக்கும் பக்தன் முன் பாபா தோன்றுகிறார்


"உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன்" 
-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

பக்தன் தன் முன்னிலையில் இருந்தாலும் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் பாபாவின் அன்பின் வேகமும் சக்தியும் ஒன்றுபோலவே இருக்கும். அவரது திருவருள் வெளிவருவதற்கு பக்தன் முறையாக பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒருவர் பாபாவின் அருளொளி வீசும் வட்டத்தினுள் நுழைந்துவிடட்டும் (அதாவது பாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கட்டும்), பின்னர் எங்கே அலைந்து திரிந்தாலும் தமது ரக்ஷிக்கும் தன்மையதான கிரணங்களை பொழிந்து அருள்புரியும் ஷீரடி இறைவனின் சக்தியை உணரமுடியும். பாபா உடலுடன் வாழ்ந்த காலத்தில், ஷீரடியில் அமர்ந்தவாறு தனி ஒருவராக பம்பாய், பூனா, உட்பட நாட்டின் பல்வேறு பாகங்கள் எங்கும் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களின் தேவைகளையும், நல்வாழ்வையும் பாபா கவனித்து வந்தது நன்கு விளங்கியது. இன்றும் நம்பிக்கையுடன் அழைக்கும் பக்தன் முன் பாபா தோன்றுகிறார். இதுவே தெய்வீகத்தின் அறிகுறி. உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். நமது சிந்தனை எல்லாம் பாபாவை பற்றியதாக இருக்கும்போது மற்ற எதை பற்றியும் பக்தன் கவலை கொள்ள தேவையில்லை.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, February 16, 2019

நீ ஒன்றுக்கும் கவலைப்படவேண்டாம், நான் கவனித்துக் கொள்கிறேன்

Image may contain: one or more people

1908க்குப்   பின்னர் ஒரு தினம், "சில நாட்களில் துன்பங்கள் ஏற்படலாம். ஆனால் நீ ஒன்றுக்கும் கவலைப்படவேண்டாம். நான் கவனித்துக் கொள்கிறேன் என்றார் பாபா மகல்சபதியிடம் . சில தினங்கள் கழித்து மகல்சபதியின் வீட்டில் முதலில் அவருடைய மனைவியும் பின்னர் ஒவ்வொருவராக மற்றவர்களும் நோய்வாய்ப்பட்டனர் .சீரடிக்கு பாபாவை தரிசனம் செய்ய வந்தவர்களில் சிலர் வைத்தியர்கள். அவர் நோய் தவிர்க்க அளித்த மருந்துகளை கொடுக்க வேண்டாம் என்றும் நோயாளிகள் படுக்கையில் படுத்து இருந்தால் போதும் என்றும் கூறிவிட்டார் பாபா. பின்னர் பாபா தாம் எப்போதும் கையில் வைத்திருந்த குறுந்தடியை  எடுத்துக்கொண்டு மசூதியை சுற்றிவந்து  "வா! பார்க்கலாம் உன் முழு சக்தியையும் காட்டு. என் குறுந்தடியின் முன் உன்னால் என்ன செய்துவிட முடியும் என்று பார்த்துவிடுகிறேன்!" என்று கர்ஜித்துக் கொண்டு  தம் தடியைச் சுழற்றலானார் . விரைவிலேயே ஒருவித மருந்துமே இல்லாமல் நோயாளிகள் குணமடைந்தனர்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, February 3, 2019

பாபாவிடம் சரணடைவது ஒன்றே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு

saibaba digital painting க்கான பட முடிவு

நம்பிக்கை என்பது இறுதியில் ஒன்றின் மீதுதான் இருக்க வேண்டும். பாபா நமக்குள் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு விட்டால் வேறெங்கு செல்வது என்ற கேள்வியே ஏன் எழப்போகிறது?. பாபாவிடம் சரணடைவது ஒன்றே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு. 
"உம்முடைய எல்லா பொறுப்புகளும் என்னுடையவை. உம்முடைய எல்லா காரியங்களையும் நானே முன் நின்று நடத்துகிறேன்" என்று பாபா கூறியதை நினைவில் கொள்ளுங்கள். பாபா மீது எந்தவித சந்தேகமும் இல்லாமல் நம்பிக்கை வைப்பதே மிகவும் முக்கியமானது. நம்பிக்கையில்லாத பூஜையும், விரதமும், ஆரத்தியும் வீண். குரு நம்பிக்கை பற்றி பாபா கூறியுள்ள வார்த்தைகளை கவனியுங்கள் ;
உங்கள் குருவிடம் அசைக்க முடியாத நம்பிக்கை, ஆழமான அன்பு கொள்ளுங்கள். இதைத் தவிர வேறு வழிபாடு வேண்டாம். குருவே கடவுள் என்பதில் உறுதியாக நில்லுங்கள். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்

பாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார்.  ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த...