Tuesday, June 7, 2011

பிரச்சனை


உன் பிரச்சனை எதுவானாலும் அதற்க்கு பரிகாரம் என்னிடம் உண்டு. பரிகாரம் என்னிடம் இருக்கையில் , நீ எங்கோ ஓடிக்கொண்டிருந்தால் நான் என்ன செய்ய முடியும்? என்னை பரிபுரணமாக நம்பு, உன் உடல், மனம், செல்வத்தை என் பாதத்தில் வை. உன்னை விட்டு நான் எங்கே செல்வேன்? என் இருப்பிடம் உன் இதயமே. ஷிர்டி சாய்பாபா        

Monday, June 6, 2011

முட்களை நான் களைகிறேன்


அனைத்தையும் நானே (பாபா) நடத்துகிறேன் என்று திடமாக நம்பு. எனக்கு நானாகவே செய்கிறேன் என்ற எண்ணத்தை வரவிடாதே, நான் துணையாக இருப்பேன். நீ நடக்கும் பாதையில் முட்கள் இருந்தால் நானே முன்பாகவே களைந்து விடுகிறேன். நான் உன்னுடனேயே வந்து   கொண்டிருப்பதை நீ மறந்தால் நான் என்ன செய்யமுடியும்? -ஷிர்டி சாய்பாபா     

Sunday, June 5, 2011

சாயி யின் உருவம்


எந்த உருவத்தின் தரிசனம் தினமும் திருப்தியை அளித்ததோ, எந்த உருவத்தின் நட்புறவில் ஆனந்தத்தை அனுபவித்தோமோ, எந்த உருவம் நமக்கு பிறவி பயத்திலிருந்து சுலபமாக விடுதலை அளித்ததோ, எந்த உருவம் நம்மை ஆன்மிக பாதையில் செலுத்தியதோ, எந்த உருவம் வாழ்கையின் பயங்களையும் பீதிகளையும் நாசம் செய்ததோ, எந்த உருவம் சங்கடங்கள் வந்தபோது மனத்திற்கு தைரியத்தை கொடுத்ததோ, அந்த தெய்விகமான உருவமே சாயி யின் உருவம்.       

Saturday, June 4, 2011

பாவங்கள் அழிக்கப்பட்டனவோ


யாருடைய பாவங்கள் அழிக்கப்பட்டனவோ அந்த புண்ணியசாலிகளே என்னை அறிந்து கொள்கிறார்கள். சாயி, சாயி என்று எந்த நேரமும் என்னை மனத்தில் நினைத்தீர்களே ஆனால், நான் என்னுடைய அருளால் உங்களுக்கு ஏழு கடல்களையும் அளிப்பேன் (ஏழு கடல்களுக்கு அப்பாலும் வந்து உங்களை காப்பாற்றுவேன்) . -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா   

Friday, June 3, 2011

சாயியை நம்பியவர்களுக்கு


சாயியை நம்பியவர்களுக்கு  -  அழைக்காமலேயே வருவார், வேறு உருவத்தில் தோன்றுவார், தம் பக்தர்களுக்கு கடமைபட்டவராக இருப்பார், ஒவ்வொரு படியிலும் பக்தர்களுக்கு உணர்வுட்டி காப்பார். - ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.      

Thursday, June 2, 2011

சத்குரு

எவர், தம் சிஷ்யனிடமிருந்து சேவை பெறவேண்டுமென்று கனவிலும் நினைக்காமல், அதற்கு மாறாக, சிஷ்யனுக்காகத் தமது உடலை ஓடாகத் தேய்க்க விரும்புகிறாரோ அவரையே ஒரு சத்குரு என அறிவீராக. ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.  

Wednesday, June 1, 2011

செயல்கள் வெற்றியடையும்


செயல்  புரியும் கடமை மாத்திரம் என்னுடையது; பலனை அளிப்பவர் எல்லாம் வல்ல இறைவன் என்னும் திடமான நம்பிக்கை எவரிடம் உள்ளதோ, அவருடைய செயல்கள் அனைத்தும் வெற்றியடையும். -ஷிர்டி சாய்பாபா   

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...