Saturday, January 7, 2012

நம்பிக்கை வையுங்கள்


அல்லாவிடம் நம்பிக்கை வையுங்கள். இங்கு (துவரகமாய்) வந்தவர் நிவாரணம் பெறவில்லை என்பது, சென்ற காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய முக்காலங்களிலும் நடக்காத விஷயம்." - ஷிர்டி சாய்பாபா. 

Friday, January 6, 2012

ரூஸோ மம ப்ரியாம்பிகா...


எனது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், சகோதர, சகோதரி, மாமனார், மாமியார் எவர் என்மீது கோபப்பட்டாலும் குருவான தாய் சாயிமாத்திரம் என்மீது எப்போதும் கோபப்படாமல் இருக்கட்டும். - ஸ்ரீ குருப்ரசாத யாசன தசகம். 

Thursday, January 5, 2012

தாரக மந்திரம்


ஆன்மிகப் பாதையில் முன்னேற முயற்சிக்கும் லெளகீக (சாதாரண) மக்களை கர்மவினை, சிறிய மற்றும் பெரிய சம்பவங்களை தடைகளாக ஏற்படுத்தி, அச்சம்பவங்களின் பிடியில் மனதை சிக்க வைத்து வாழ்வின் சில காலத்தை விழுங்கி விடுகிறது. இச்சம்பவங்கள் நமது சக்தியையும் அறிவின் எல்லையையும் மீறி வாழ்க்கை துன்பங்களால் வெவ்வேறு ரூபங்களில் நம்மை கட்டுப்படுத்துகிறது.  இதற்காக பாபாவால் அறிவுறுத்தப்பட்ட தாரக மந்திரமே "நம்பிக்கை" மற்றும் "பொறுமை" ஆகும். 

லெளகீக (சாதாரண) மக்களுக்கு பாபாவால் அளிக்கப்பட்ட ஒரே சக்தி துன்ப வேளையில் பொறுமை காத்து, பாபாவின் மேல் நம்பிக்கை சிதறாமல் போராடுவதுதான்.

   

Wednesday, January 4, 2012

மகிழ்ச்சிப்பாதையில் நடப்பார்கள்


"ஒருவர் எவ்வளவு அநீதி இழைத்திருந்தாலும், கொடுமையை செய்திருந்தாலும், எனது மசூதியில் கால் வைத்த உடனே, அவர் மகிழ்ச்சிப்பாதையில் நடப்பார்கள்." - ஷிர்டி சாய்பாபா

மேற்கூறிய பாபாவின் உத்திரவாதப்படி எண்ணற்ற பக்தர்கள், பாபாவின் மசூதியில் காலடி வைத்து பாபாவின் தரிசனத்தை பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை தழுவியுள்ளனர். பாபாவின் மசூதி அமைப்போடு கூடிய ஆன்மிகச் சிறப்பு ஈடு இணையற்ற அம்சமாகும். இந்து-முஸ்லீம் மதங்கள் சங்கமிக்கும் இடமாக தனது மசூதியினை பாபா அவர்கள் வெளியுலகிற்கு அடையாளம் காட்டியுள்ளார்.   

Tuesday, January 3, 2012

உதவி கிடைக்கும்

துன்பம் வந்தபோதும் கூட என் மீது நம்பிக்கை குறைவுபடாமல் இருந்தால் அவர்களுக்கு என் உதவி கண்டிப்பாக கிடைக்கும்.-ஷிர்டி சாய்பாபா

Monday, January 2, 2012

பாபா விரும்புவது


ஒருமுறை ராம் பாபா என்ற மகா யோகி ஷீரடிக்கு பாபாவை தரிசிக்க வந்தார். அவர் யோகாவை நன்கு கற்றுத் தேர்ச்சிப்பெற்றவர். ஆகவே தனது சமாதி நிலைக்கு பாபா உதவுவார், அருள் புரிவார் என்றுதான் ஷீரடிக்கு வந்தார். அங்கே பாபா மக்கிப் போன ரொட்டியையும், வெங்காயத்தையும் சாப்பிட்டுகொண்டிருந்தார். இதைப் பார்த்த யோகி, இவரா எனக்கு சமாதிநிலையை கற்றுத்தரமுடியும் என சந்தேகித்தார். இவரது எண்ணத்தை அறிந்த பாபா, வெங்காயத்தை சாப்பிட்டு யாரால் செரிக்க முடியுமோ அவர்கள் மட்டுமே அதை சாப்பிடவேண்டும் என்றார். இதைக்கேட்ட யோகி பாதத்தில் வீழ்ந்து பணிந்தார். 

வைதீகம், பட்டினி, சிலவற்றை ஒதுக்கி வைக்கும்முறை - இவற்றுக்கு பாபா முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அவர் விரும்புவது எல்லாம் தன் பக்தனிடம் உளப்பூர்வமான நம்பிக்கையை மட்டுமே.   

Sunday, January 1, 2012

விருப்பங்கள் நிறைவேறுதல்


விருப்பங்கள்  நிறைவேறுவதற்காக நாம் பாபாவை பார்க்கிறோம், வேண்டுதல் வைக்கிறோம், ஆசி பெறுகிறோம். பல சமயங்களில் நிறைவேறும் வேண்டுதல்கள் சில சமயங்களில் கேட்க்கப்படுவதில்லை. அப்படியானால் நம் வேண்டுதல்களை அவர் நிராகரிக்கக் காரணம் என்ன? இந்த வேண்டுதல்களின் பலன் நமக்கு வேண்டாம் என பாபா தீர்மானிப்பதுதான். அந்த தீர்மானத்தை கண்டிப்பாக நிறைவேற்றிக்கொள்ள விரும்பினால், பாபா இந்த பொருளை அடைவதற்கு என்னை தகுதிபடுத்து, இந்த பொருள் என்னிடத்தில் வந்தால் அதை வைத்துக் காப்பாற்றும் மன திடத்தையும் வேறு வழி வகைகளையும் உருவாக்கிக்கொடு என்று வேண்டுதல் வையுங்கள்.       

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா  https://youtu.be/R528Bcsq50c http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaib...