Thursday, February 28, 2013

சந்தேகமற்ற சுகம்

ஓ, குருநாதா, இகத்திலும், பரத்திலும் எந்தெந்தப் பொருட்களைச் சுகம் என்று என்மனம் சந்தேகமறக் கருதுகின்றதோ அவற்றையெல்லாம் நீரே நிறைவேற்ற வேண்டும். உமது கருணையினால் இவ்வாறு செய்துவிடும், எனது மனதை அடக்கிவிடும்.  எனது எல்லாக் குற்றங்களையும் மன்னிக்க வேண்டுமென்று வேண்டுகிறேன். பக்தியின்மை, சந்தேகங்கள் போன்ற அலைகளை விரைவில் நீக்குவீராக. - ஸ்தவன மஞ்சரி-யில்,  ஸ்ரீ தாஸ்கணு மகாராஜ், 1840 வருடம்.



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, February 27, 2013

கண்காணிப்பு




அயராத கண்காணிப்புடன் கூடிய எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும். செய்வது யாதாயினும், எங்கு இருப்பினும், எப்போதும் இதை நினைவில் வை. உனது ஒவ்வொரு செயலையும் நான் அறிவேன். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil


Tuesday, February 26, 2013

பக்தர் நெருங்கிய பக்தர் யார்.

வேறெதிலும் ஈடுபடாத  விசுவாசத்துடன்,மனம்,வாக்கு,உடல்,செல்வம்,அனைத்தயும் சாயி பாதங்களில் சமர்ப்பணம் செய்துவிடுபவரே  பாபாவுக்கு மிக நெருங்கிய பக்தராகிறார்.-ஸ்ரீ சாயி இராமாயணம்.பக்தர் நெருங்கிய பக்தர் யார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, February 25, 2013

நான் அங்கு இருப்பேன்

சிருஷ்டியின் எந்த மூலைக்கு  வேண்டுமானாலும் செல்லுங்கள்.கிட்டவோ, எட்டவோ எழுகடல் தாண்டியோ செல்லுங்கள்.எனது பக்தர்களின்மேல் உண்டான பிரேமை எல்லை அறியாதது.ஆகவே,கவலையின்றி எங்கும் செல்லுங்கள்.நீங்கள் செல்லும் இடத்திற்கு உங்களுக்கு முன்பாகவே சென்று நான் அங்கு இருப்பேன்.-ஷீரடி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, February 24, 2013

குருவின் திருவாய்மொழி

யார் எதைச் சொன்னாலும் சொல்லட்டும்.அவையனைத்தையும் நாம் கேட்டுக்கொள்ளலாம்.ஆனால்,நம்முடைய  லட்சியப்பாதையிலிருந்து தடம்புறளகூடாது .நம் குருவின் வார்த்தைகளை மறந்துவிடக்கூடாது.
குருவின் திருவாய்மொழிதான் நமக்கு பரம மங்களங்களை விளைவிக்கும்.அதுதான் நம் போதியும் புராணமும் அனுஷ்டானமும் ஜபமும் தவமும்-அனைத்தும் ஆகும்.-ஸ்ரீ சாயி இராமாயணம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, February 23, 2013

இயல்பு

'உன்னுடைய இயல்பு நிர்ணயிக்கும் வழியில் நீ நட;மற்றவருடைய இயல்பு நிர்ணயிக்கும் வழியில் அவர் நடக்கட்டும்.பிறரை பின்பற்றும் முயற்சியில் உன் இயல்புக்கு எதிராக செயல்படாதே'.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, February 22, 2013

அபிமானம்

எல்லாச் செயல்புரியும் சக்திகளையும் சாயி பாதங்களில் சமர்ப்பித்துவிடுங்கள்.பிறகு அவர் ஆணையிட்ட ரீதியிலேயே செயல்படுங்கள்.சாயி சர்வசக்தியும் நிரைந்தவரென்பதை அறிந்துகொள்ளுங்கள்.பாரத்தை அவர்மீது போட்டுவிட்டு அபிமானம் கொள்ளாது செயல் புரியுங்கள்;எல்லா சித்திகளையும் பெறுவீர்கள்.
மாறாக,மிகச் சிறிய அளவில் அபிமானம் ஒட்டிகொண்டிருந்து,'நான்தான் செய்கிறேன்' என்று நினைத்தால் ஒரு கணமும் தாமதமில்லாது உடனே அதனுடைய விளைவு தெரியும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவால் அருளப்பட்ட அத்தனையும் நன்மைக்கே !

பாபாவால் நமக்கு அருளப்பட்ட அத்தனையும் நிச்சயமாக நன்மைக்காகவே ஆனது என்னும் உறுதியான நம்பிக்கையுடன் பாபா அருளிய யாவற்றையும் மகிழ்ந்து அனுபவிக்...