Friday, May 31, 2013

உறுதியாக இரு

மீதமுள்ள தீவினையின் காரணமாகவே இந்த உடல் கிடைத்துள்ளது.உடல் வாய்த்த காரணத்தால் கர்மா அதன் வேலையைச் செய்யாமலிராது.அந்தக் கர்மம் இன்பவடிவம் கொண்டிருந்தாலும் துக்க வடிவம் கொண்டிருந்தாலும் பாதிக்கப்படாமல் இருங்கள்.கர்மா அப்படிச் செயல்படும் என்று அறிந்து,பயமின்றி அவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்.வானம் இடிந்து மேலே விழுந்தாலும் உன் நிலையில் நீ உறுதியாக இரு,தாங்கும் சக்தியை நான் கொடுக்கிறேன்.உன் முன்னும் பின்னும் நானே ரட்சனையாக இருப்பேன்.மீதமுள்ள தீவினை அழியாவிடில் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டியிருக்கும்.இதைத் தவிர்க்க முடியாது.உங்களுக்கு அந்தச் சக்தி எப்படிக் கிடைக்கும் என்ற சந்தேகம் வேண்டாம்.என் நாமஸ்மரணையில் உள்ள சக்தி அத்தகையது.சுயநலமின்றி என்னை ஆராதித்து வந்தால்,ஸ்மரணை செய்துவந்தால்,ஜெபம் செய்துவந்தால்,அப்படிப்பட்ட அனுபூதி உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.இந்த உண்மையை நீங்களே உணர்வீர்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/ 

Thursday, May 30, 2013

நான் உன்னுடன் இருப்பேன்

பாபாவிற்கும் பக்தர் ரேகேவிற்குமான  உரையாடல்.

பாபா: என் கஜானாவின் சாவி இப்போது உன் கைகளில்.எது வேண்டுமோ கேள்.மாதந்தோறும் ரூபாய் ஐந்து முதல் நூறு வரையோ அல்லது எது வேண்டுமோ,எதுவாயினும் நான் உனக்கு அளிக்கிறேன்.

பக்தர் (ரேகே) கேட்க மறுக்கிறார்.

பாபா:ஏதாவது கேள்.உனக்கு ஏதாவது கொடுக்க நான் ஆவலுடன் உள்ளேன்.

பக்தர் (ரேகே):நான் எது கேட்பினும் தாங்கள் கொடுப்பீர்கள் என் ஒத்துக் கொள்ளப்பட்டது தானே?

பாபா: ஆம்.

பக்தர் (ரேகே): பாபா,அப்படியானால் நான் விரும்புவது இதுதான்.இப்பிறவியிலோ,இனி எனக்கு நேரக் கூடிய பிறவிகளிலோ,தாங்கள் என்னைவிட்டு பிரியக்கூடாது.எப்போதும் தாங்கள் என் கூடவே இருக்கவேண்டும்.

பாபா; அப்படியே ஆகட்டும்.நான் உன்னுடன் இருப்பேன்.உன் உள்ளே இருப்பேன்,புறத்தே இருப்பேன்.நீ எப்படியிருந்தாலும்,என்ன செய்தாலும் அவ்வாறு இருப்பேன்.
http://www.shirdisaibabasayings.com

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, May 29, 2013

நவவித பக்தி

பக்தியின் வெளிபாடுகளைப்பற்றி இவ்விதம் அறிவீராக.-

முதலாவதாக, சிரவணம் (சாயியின் பெருமையை கேட்டல்),
இரண்டாவதாக, கீர்த்தனம்(சாயியின் லீலைகளைப் பாடுதல்),
மூன்றாவதாக, ஸ்மரணம்(சாயியை நினைத்தால்),
நான்காவதாக, பாதசேவனம்(பாதங்களைக் கழுவுதல்-பிடித்து விடுதல்),
ஐந்தாவதாக, அர்ச்சனம்(மலர்களால் அர்ச்சனை செய்து பூஜித்தல்),
ஆறாவதாக, வந்தனம் (பணிதல்-நமஸ்காரம் செய்தல்-வணங்குதல்),
ஏழாவதாக, தாஸ்யம் (அடிமைபோல் சாயிக்கு சேவை செய்தல்),
எட்டாவதாக, ஸக்யம் (சாயியிடம் தோழமை கொள்ளுதல்),
ஒன்பதாவதாக,ஆத்மநிவேதனம் (தன்னையே சாயிக்கு அர்ப்பணம் செய்தல்).

நவவித பக்திகளில் ஏதாவது ஒன்றையாவது பூரணமான பா(BHA)வத்துடன் கடைப்பிடித்தால்,வேறெதையும் வேண்டாத ஸ்ரீ சாயிபாபா,பக்தனுக்கு தம்மை வெளிப்படுத்துவார். 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, May 28, 2013

விந்தைகள் நிகழ்கின்றன

இந்த மசூதியில் உள்ள பக்கீர் தயை நிறைந்தவர்.யாரையும் நிராசையுடன் திரும்பிச் செல்லும்படி விடமாட்டார்.உன் ஆனந்தத்தில் நான் இருக்கிறேன்.உன் மகிழ்ச்சிக்காகவே நான் இவ்வளவு சிரமப்படுகிறேன்.உன் விஸ்வாசத்தை ஸ்த்ரமாக்கவே இங்கு விந்தைகள் நிகழ்கின்றன.இம்மசூதி நம்மைப் பெற்றெடுத்த தாய் இதன் படியேறியவர்கள் யாராயினும் கூட,அவர்கள் துக்க சாகரத்தில்  மூழ்கியிருந்தாலும், அவர்களுடைய சஞ்சித கர்ம வினை பலமானதாக இருப்பினும் அவர்களும் நிச்சயமாக ஆனந்த வெள்ளத்தில் மிதப்பார்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, May 27, 2013

மேன்மை உண்டாகும்

துன்பம் வந்த நேரத்தில் ஒரு நன்மை விரும்பி,நல்ல ஆலோசனையை சொல்பவர் யாராயினும் அவர்கள் இறைவனின் வடிவங்களே.இறைவனின் சங்கல்பம் இல்லாமல்,அவர்கள் அந்த நன்மை நல்கும் ஒன்றைச் சொல்லமாட்டார்கள்.இவ்விஷயத்தை அனைவரும் நன்கு நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்.அந்த அறிவே இருக்க வேண்டும்.ஆகையால் அப்படிப்பட்டவர்கள் கூறும் இதமானவற்றைத் தள்ளி விடவேண்டாம்.கேட்டு கடைப்பிடிக்க வேண்டும்.துன்பங்கள் வராமலிருக்காது.வரும்.வந்தபோது நிலைமையை இன்னும் மோசமாக்கலாகாது.நல்லவற்றைக் கூறுபவர்களின் பேச்சை ஏற்று பின்பற்ற வேண்டும்.அப்போதுதான்
மேன்மை உண்டாகும்.-ஸ்ரீ சாயி திருவாய்மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, May 26, 2013

பாபாவை எப்படி அணுகுவது

பாபாவை அணுக விசேஷமான வழி முறைகள் ஏதுமில்லை.நம் தாயை எப்படி அணுகுவோம்?இம்மாதிரி ஒரு கேள்வி கேட்பது மடத்தனமானது.அன்பு என்ன என்று குழந்தை உணருவதற்கு வெகு நாட்கள் முன்னதாகவே தாய் தன் குழந்தைகள் மீது அன்பைப் பொழிந்து வருகிறாள்.அதே போல் பாபா குழந்தைகள் மீது அன்பைப் பொழியும் ஒரு கண்ணுக்குத் தெரியாத அன்னையின் பாத்திரத்தை ஏற்று,முற்பிரவிகளிலிருந்தே தொடர்ந்து தம் பக்தர்களாகிய குழந்தைகள் மீது அன்பைப் பொழிகிறார்.ஆனால் அவர்கள் இப்போது பாபாவை எப்படி அணுகுவது?அவர்கள் பாபாவை அணுகவேண்டும் என் மனப்பூர்வமாக விரும்பட்டும்.உடனே அணுகுமுறை துவங்கிவிட்டது.அக்கணத்திலிருந்தே அவர்கள் நிலையில் முன்னேற்றம் ஆரம்பமாகிவிட்டது.அவர்கள் மேலும் மேலும் உற்சாகமடைகின்றனர்,மேன்மேலும் பலனடைகின்றனர்.முதலில் ஒரு வித நன்றியுணர்வையும்,நாளடைவில் பிரேம பக்தியையும் அவர்கள் பெறுகிறார்கள்.பக்தர்கள் பாபாவின் திருவுருவை தங்களிடம் உள்ள லாக்கெட்டுகள் ,படங்கள் ஆகியவற்றில் அடிக்கடி பார்த்து,பாபாவின் திருவுருவை தினமும் மனதில் கொண்டுவரட்டும்,கவிஞனின் கற்பனைகள் எல்லாவற்றையும் விட திறன்படைத்த பாபாவின் அத்புத லீலைகளை [ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]படிக்கட்டும்.பாபாவின் குணாதிசயங்களை நினைவுபெற பாபாவின் அஷ்டோத்திர சத நாமாவளி[108 நாமாக்கள்]மிக்க சக்தி வாய்ந்த சாதனம்.ஆர்வமுள்ள பக்தர்கள் ஒன்று கூடி செய்யும் பூஜைகள்,பஜனைகள் ஆகியவற்றில் பங்கு கொள்ளட்டும்.ஆர்வமுள்ள சாதகனுக்கு பாபாவே மேற்கொண்டு உள்ள வழிகளைக் காட்டுவார்.ஒவ்வொரு உண்மையான பக்தனுக்கும் பலவித வழிகளில் பாபாவுடன் மேற்கொண்டு தொடர்பு எப்படி வைத்துக் கொள்வது,அதை எப்படி வளர்த்துகொள்வது என்பது பற்றி பாபாவே உணர்த்துவார்.பாபா கடைபிடிக்கும் முறைகள் பலவகைப்படும்.உணர்ச்சிமிக்க துடிப்புள்ள சில பக்தர்கள் இன்றும் பாபாவைக் காண்கிறார்கள்,விழிப்புடன் இருக்கும்போதே அவருடன் பேசவும் செய்கிறார்கள்.சிலருக்கு கனவுகளில் இந்த அனுபவம் கிட்டுகிறது.பாபாவே தெய்வம் என்ற திடமான நம்பிக்கை கொண்ட சாயி பக்தர்கள் எண்ணற்றவர்கள்,அவர்கள் தங்கள் பிரார்த்தனைகள் பாபாவால் ஏற்கப்பட்டு பலன்களைப் பெறுகிறார்கள்.-பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, May 25, 2013

பாதகமலங்களை வழிபடுங்கள்

சாய்பாபாவின் கிருபையும் காதலையும் பெறுவதற்கு அவருடைய பாதகமலங்களை வழிபடுங்கள்.ஒவ்வொரு கட்டத்திலும் அவர் அருளும் நலந்தரும் போதனையை ஏற்பதற்கு இதயத்தில் இடம் செய்துகொள்ளுங்கள்.இந்திரிய சுகங்களை யதேச்சையாக அனுபவிக்கும் போதுங்கூட உள்ளுக்குள்ளே எப்பொழுதும் சாயிபிரிதி  இருக்கட்டும். ஏனெனில்,அதுவே உலகியல் விஷயங்களுக்கும் ஆன்மீக விஷயங்களுக்கும் அபயமளிக்கும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா  https://youtu.be/R528Bcsq50c http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaib...