Monday, July 7, 2014

உறுதி மொழியை நிறைவேற்றுவார்



பக்தர்களின் எண்ண ஓட்டங்களையும் உணர்வுகளையும் சமர்த்த சாயி மனக்கண்ணால் அறிவார். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து தமது உறுதி மொழியை நிறைவேற்றுவார். ஶ்ரீ சாயி தரிசனம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 6, 2014

ஆசிர்வாதம்


நீங்கள் அனுபவிப்பது, உங்களிடமிருப்பது, நான் உங்களுக்கு ஆசிர்வதித்து கொடுத்ததாகும் என்பதை நீங்கள் அறிந்தால் உங்களுக்கு சுபம் ஏற்படும்- ஷிர்டி சாய்பாபா.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 5, 2014

பெருங்கடலுக்கு அப்பால்



நாமஸ்மரணம், வழிபாடு அல்லது பக்தி போன்ற சாதனைகள் உங்களிடம் இல்லை என்றாலும், ஞானிகளிடம் உங்கள் முழு இதயத்தோடு சரணாகதி அடைவீர்களானால், இவ்வுலக வாழ்வு என்னும் பெருங்கடலுக்கு அப்பால், அவர்கள் நம்மை பத்திரமாக இட்டுச் செல்வார்கள். சாயி சத்சரித்திரம் - 10.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 4, 2014

இன்னல்கள் ஒழிந்துபோகும்.


பாபா-வின் திருவாய் முலம் உதிர்ந்த கதைகளை கேட்கவேண்டும். ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட அவருடைய லீலைகளை அனுபவிக்கவேண்டும். எத்தனை லீலைகளைச் சேகரிக்கமுடியுமோ அத்தனையையும் சேகரித்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். சாயியின் அற்புதமான சரித்திரத்தை பக்தியுடன் கேட்கப்பட்டால், எடுத்துச் சொல்பவர், கேட்பவர்கள், இவர்களுடைய இன்னல்களும், துயரங்களும் ஒழிந்துபோகும்.       

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 3, 2014

குரு சேவை

குரு சேவை செய்கிறேன் என்ற எண்ணத்தை என்றும் உங்களிடம் வளர்துக் கொள்ளாதிர்கள். அப்படி சேவை செய்யும் பாக்கியத்தை நானே தருகிறேன். சேவை செய்யும் பாக்கியமும் கூட யோகம் இருந்தாலன்றி  கிடைக்காது.- ஷிர்டி சாய்பாபா 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 2, 2014

இயற்கையாகவே வலுவிழந்துவிடும்


மனமும், புத்தியும், புலன் உறுப்புகளும் உலக இன்பங்களை துய்க்க ஈர்க்கப்படும்போது முதலில் என்னை நினை. பிறகு அவற்றை அம்சம் அம்சமாக எனக்கு சமர்ப்பணம் செய்வாயாக. இவ்வுலகம் அழியும் வரை புலன்கள் அவற்றுக்கு உரிய நாட்டங்களால் ஈர்க்கப்பட்டே தீரும். இதைத் தடுக்க இயலாது. ஆனால், அந்நாட்டங்களை குருவின் பாதங்களில் சமர்ப்பித்துவிட்டால் அவை இயற்கையாகவே வலுவிழந்துவிடும். ஶ்ரீ சாயி தரிசனம்.   

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, July 1, 2014

நம்பிக்கை எப்படியோ, அப்படியே அனுபவம்



பாபாவின் செயற்கரிய செயல்கள் கற்பனைக்கு எட்டாதவை. அவை மனதில் அழியாத சுவடுகளை பதிக்கும். இந்த அற்புதங்களை நாம் சொந்தமாக்கிட, பாபா ஒரு சாதனத்தை நமக்காகக் கொடுத்திருக்கிறார். அதுதான் அவரது யோக சக்தியால் உருவான துனியிலிருந்து வந்து கொண்டிருக்கிற உதி. இந்த உதி அனைத்து விஷயங்களையும் நமக்கு சாதகமாக்கிக் கொடுக்கும்.

மந்திரமாவது நீறு என்பார் சம்பந்தப் பெருமான். வல்வினை போக்குவதும், மந்திரமாவதும், நமது வேலைகளை முன் வந்து செயல்படுத்துவதும், அனைத்தையும் நமக்கு சாதகமாக மாற்றுவதும் இந்த உதியே என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஶ்ரீ சாயி தரிசனம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நானே உங்களைக் காப்பாற்றி, கவனித்துக் கொள்கிறேன் !

உங்களுக்கு நேரிடும் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுங்கள்!   நானே தீர்ப்பவன் ! நானே காப்பவன் ! என்னையே எப்போதும் நினையுங்கள். நானே உங்களைக் காப...