Saturday, December 12, 2015

நம்பிக்கை வேண்டும்

  

விரும்பிய வேஷத்தை அணிந்து கொண்டு எங்கு நினைக்கிறாரோ அங்கெல்லாம் தோன்றுகிறார். பக்தர்களுக்கு நல்லது செய்வதற்காக எங்கெல்லாமோ அலைகிறார். பக்தருக்குத்தான் (அடையாளம் கண்டுகொள்ள) நம்பிக்கை வேண்டும். - ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, December 11, 2015

திடமான விசுவாசம்


ஒருவருடைய குரு எவராக இருந்தாலும் அவர்மீது திடமான விசுவாசம் வைக்கவேண்டும். வேறெங்கிலும் அவ்விசுவாசத்தை வைக்கலாகாது. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, December 10, 2015

கற்பனைசெய்து பார்க்கமுடியாததையும் அளிப்பவர் பாபா.



காமதேனு (தேவலோகத்துப் பசு) நாம் விரும்பிய பொருளை உடனே அளிக்கும். காமதேனுவைவிடச் சிறந்தவர் குருதேனு. நம்மால் சிந்தனைசெய்து பார்க்கமுடியாத பதவியையும் (வீடுபேறு நிலையையும்) அளிப்பார் ! வேறு யாருக்கு 'கற்பனைசெய்து பார்க்கமுடியாததையும் அளிப்பவர்' என்னும் பட்டம் பொருந்தும்?

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 9, 2015

கவலை கொள்ளாதீர்கள்


நான்  உங்களிடத்து இல்லையென்பதாகக் கவலை கொள்ளாதீர்கள்.  ஆனால்  என்னையே எப்போதும் நினைவு  கூறுங்கள். உள்ளம் உயிர் இவற்றால்  என்னை நம்புங்கள். அப்போதுதான் நீங்கள் மிகுந்த பலனை அடைவீர்கள். - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா [ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, December 8, 2015

திருப்திப் படுத்துகிறார்


எவன் ஒருவன் பாபாவை முழு மனத்துடன் நேசிக்கிறானோ அவன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான். நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் அவர் எடுத்துக் கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனை திருப்திப்படுத்துகிறார்.-ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா அத் 33. 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, December 7, 2015

எங்கும் இருக்கிறேன்


நான் எங்கும் இருக்கிறேன் - நீரிலும், நிலத்திலும், காய்ந்துபோன கொம்பிலும், மனிதர்களிடையேயும், வனத்திலும், இந்த தேசத்திலும், வெளிதேசங்களிலும் எங்கும் இருக்கிறேன். நான் எந்த தேசத்தின் எல்லைகளுக்கும் உட்பட்டவன் அல்லன். -  ஸ்ரீ  ஷிர்டி சாய்பாபா . 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, December 6, 2015

விபத்துக்களும் இன்னல் தரும் நிகழ்ச்சிகளும் விலகும்.

                                            
எதெல்லாம் நடக்கவேண்டுமோ, அதெல்லாம் அதன்வழி நடக்கட்டும். ஆனால், நம்முடைய நல்வாழ்வு பாபாவை பற்றிய சிந்தனையில்தான் இருக்கவேண்டும். அப்படியிருக்க, விதியால் நிர்ணயிக்கப்பட்ட விபத்துக்களும் இன்னல் தரும் நிகழ்ச்சிகளும் விலகும்.! இளகிய மனம் படைத்த சாயி பக்தர்களின் எண்ணங்களைக் கண்டு அவர்களுடைய நம்பிக்கை (பக்தியை) பாராட்டும் வண்ணம் ஒன்றன்பின் ஒன்றாகச் சீரிய அனுபவங்களை அளிக்கிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நானே உங்களைக் காப்பாற்றி, கவனித்துக் கொள்கிறேன் !

உங்களுக்கு நேரிடும் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுங்கள்!   நானே தீர்ப்பவன் ! நானே காப்பவன் ! என்னையே எப்போதும் நினையுங்கள். நானே உங்களைக் காப...