Thursday, January 7, 2016

அசைக்க முடியாத நம்பிக்கை


பாபாவின் அருகில் இருக்கும் பாக்கியம் நமக்கு கிடைக்க வேண்டும்; அதன்பிறகு, தாண்டமுடியாதது எதுவுமே இல்லை. கொஞ்சங் கொஞ்சமாக அனைத்து விஷயங்களும் ஓர் ஒழுங்கிற்கு வந்து நிற்கும். 
 ஓய்வெடுப்பதோ,பேசுவதோ,நடப்பதோ,எந்த வேலையை செய்தாலும் சரி,ஒவ்வொரு கணமும் ஓய்வெடுப்பதோ, பேசுவதோ, நடப்பதோ, எந்த வேலையை செய்தாலும் சரி, ஒவ்வொரு கணமும் அசைக்க முடியாத நம்பிக்கையை பாபாவிடம் கடைப்பிடித்தால், பக்தன் தான் விரும்பிய மனோரதங்கள் அனைத்திலும் நிறைவு பெறுவான்.
http://www.shirdisaibabasayings.comacebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 6, 2016

தக்ஷிணை


தனத்தையும், தானியத்தையும், வஸ்திரங்களையும் அளிப்பது மட்டும் தக்ஷிணை ஆகிவிடாது. குருவின் ஆணையை (பொறுமை, நம்பிக்கை)  நிறைவேற்றி அவரை சந்தோஷப்படுத்துவதும் தக்ஷிணையே.- ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 5, 2016

கடுமையான பரீக்ஷை


சில சமயம் பாபா தனது பக்தர்களை எல்லைவரை இழுத்துவிடுகிறார். அவனுடைய பக்திக்கும் பிரேமைக்கும் கடுமையான பரீக்ஷை வைத்துவிடுகிறார். அதன்பிறகே அவனுக்கு உபதேசமளிக்கிறார்.-ஸ்ரீ சாயி இராமாயணம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, January 4, 2016

நவவித பக்தி

    


            பக்தியின் வெளிபாடுகளைப்பற்றி இவ்விதம் அறிவீராக.-முதலாவதாக, சிரவணம் (சாயியின் பெருமையை கேட்டல்),
இரண்டாவதாக, கீர்த்தனம்(சாயியின் லீலைகளைப் பாடுதல்),
மூன்றாவதாக, ஸ்மரணம்(சாயியை நினைத்தால்),
நான்காவதாக, பாதசேவனம்(பாதங்களைக் கழுவுதல்-பிடித்து விடுதல்),
ஐந்தாவதாக, அர்ச்சனம்(மலர்களால் அர்ச்சனை செய்து பூஜித்தல்),
ஆறாவதாக, வந்தனம் (பணிதல்-நமஸ்காரம் செய்தல்-வணங்குதல்),
ஏழாவதாக, தாஸ்யம் (அடிமைபோல் சாயிக்கு சேவை செய்தல்),
எட்டாவதாக, ஸக்யம் (சாயியிடம் தோழமை கொள்ளுதல்),
ஒன்பதாவதாக,ஆத்மநிவேதனம் (தன்னையே சாயிக்கு அர்ப்பணம் செய்தல்).

நவவித பக்திகளில் ஏதாவது ஒன்றையாவது பூரணமான பா(BHA)வத்துடன் கடைப்பிடித்தால்,வேறெதையும் வேண்டாத ஸ்ரீ சாயிபாபா,பக்தனுக்கு தம்மை வெளிப்படுத்துவார். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, January 3, 2016

குருவின் ஆணை
குருவின் ஆணை தெளிவாக இருக்கும்போது, இது செய்யக்கூடிய செயலா, செய்யக்கூடாத செயலா, இது விரும்பத்தக்கதா, வெறுக்கத்தக்கதா என்றெல்லாம் கேள்வி எழுப்பும் பக்தன் கடமையிலிருந்து வீழ்ந்தவன் ஆகிறான். பாபாவின் பாதங்களிலேயே சித்தம் நிலைக்க வேண்டும்; உயிர் இருந்தாலென்ன, போனாலென்ன? எங்களுக்கு பாபாவின் ஆணையே பிரமாணம். தொடர்ச்சியாக ஏற்படப்போவதையும் கடைசியான முடிவையும் அவரே அறிவார்! - ஸ்ரீ சாயி இராமாயணம். 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, January 2, 2016

பாபாவை பார்க்கலாம்


பாபாவின் மரணம், லோகாசாரம் (உலகியல் நடப்பு) மட்டுமே. பார்வை பெற்றால், நகரும் நகராப்  பொருள்கள் அனைத்தினுள்ளும் பாபாவை பார்க்கலாம்.
ஒருவருடைய வழிபாட்டு நிலை எப்படியோ, அப்படியே அவருக்குக் கிடைக்கும் நித்திய அனுபவமும் அமைகிறது. உள்ளத்தில் சந்தேகம் எதையும் வைக்க வேண்டாம். சாயீ மரணத்திற்கு அப்பாற்பட்டவர். நம் ஊனக்கண்களுக்குத் தெரியாத போதிலும், அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். தம்மளவில் சூட்சுமமாக இருந்த போதிலும், நம்மை அவர்பால் வசிகரித்து இழுக்கிறார். அவருடைய மரணம் ஒரு பாசாங்கு மட்டுமே. நம்மை ஏமாற்றும் ஓர் உத்தியே. பூரணத்துவம் பெற்ற அவர் பல வேஷங்களில் நடிக்கிறார். உடலை இழந்த நிலையில் இருந்து அவர் அழிவற்ற நிலைக்குச் சென்றுவிட்டார். 
சமர்த்த சாயி தீனதயாளர்; பக்தியுடன் தன்னை வனங்குபவர்களை பாதுகாப்பவர். உயர்ந்த பிரேமைக்காகப் பசியோடிருப்பவர். அவருடைய இதயத்தில் கனிந்த அபரிமிதமான அன்பை கெட்டியாகப் பற்றிகொள்வோமாக! அவருடைய மார்கத்தை நன்கு புரிந்துகொண்டு காரியசாதனை பெறுவோமாக!   

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, January 1, 2016

பூரண சரணாகதி அடையுங்கள்

என்ன நடக்குமோ அது பாபாவின் ஆணைப்படியே நடக்கும். அவரே காரியங்களை செய்பவரும் செய்விப்பவரும் ஆவார். செயல்புரியும் அதிகாரத்தை பாபாவின் கைகளில் ஒப்படைத்துவிட்டு பூரண சரணாகதி அடையுங்கள். பக்தனின் கரைகாணாத அன்பும் அசையாத நம்பிக்கையால் பாபா குதுகலம் அடைகிறார்; பக்தனை கொண்டாடுகிறார். பக்தர்களில் எவரெல்லாம் முழுமையான சரணடைகிறார்களோ, அவர்கள் எல்லோருடைய நன்மையையும் கருதி சாயி அவர்களை சன்மார்க்கத்தில் செலுத்துகிறார். அளவற்ற புண்ணியத்தின் பலத்தால் மட்டுமே ஒருவர் சாயியின் தர்பாருக்குள் வரமுடியும். வந்தவர்கள், யாரையும் வெறும் கையுடன் பாபா அனுப்புவதில்லை. சாயி சாயி  என்று அவருடைய திவ்ய நாமத்தை நாம் கூறும்பொழுது அவர் நம் கண்ணிற்கு புலப்படாமல் அவர் அங்கேயே இருக்கிறார். இது சத்தியம். அவர் தனது சக்தியையும், நிலையையும் நமக்கு தெய்வீக அற்புதங்கள் மூலம் நிரூபித்துக் காட்டுகிறார். 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...