Thursday, January 14, 2016

உண்மையான பக்தன்


சாய்பாபா ஓர் பூரணமான லீலாவதாரி; நினைத்தமாத்திரத்தில் எங்கும் சஞ்சாரம் செய்யக்கூடியவர். போவதும் வருவதும் மனிதப் பிறவிகளுக்கே. அவரோ எல்லாப் பொருள்களிலும் உள்ளும் புறமும் நிறைந்தவர். அவர் அங்கிருந்து இங்கே வருவது, இங்கிருந்து அங்கே திரும்பி போவது, ஆகிய இரு செயல்களையும் வானமும் அறியாது. ஏனெனில்,அவர் வானத்திலும் நிரம்பி   இருக்கிறார். பாபாவின் சஞ்சாரம் புரிந்துகொள்ள முடியாதது. நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் அவர் நிரம்பியிருக்கிறார். இவ்வாறிருக்க, அவர் வருவதென்ன, போவதென்ன! உண்மையான பக்தன் பாபாவை நினைத்தமாத்திரத்தில் நிச்சயமாக அவர்முன் தோன்றுகிறார்..-ஸ்ரீ சாயி இராமாயணம் .

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 13, 2016

ஷிர்டி


பக்தர்: பாபா என்னை ஏன் இங்கு (ஷிர்டி) வரவழைத்தீர்கள்?

பாபா : ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கின்றனர். நான் அவர்களை  எல்லாம் இங்கு அழைப்பதில்லை. நீரும் நானும் பல ஜன்மங்களாக நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள். நீர் அதை அறிய மாட்டீர். ஆனால் நான் அறிவேன். நேரம்  கிடைக்கும் போதெல்லாம், ஷிர்டி வந்து போய் கொண்டிரும்.
                                                                             -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவின் திருமொழிகள்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 12, 2016

நான் யார்
முக்தி என்பதே உண்மையான ஆனந்தம் அல்லது சந்தோஷம். சம்சாரத்தில் தோன்றும் இன்பங்களும் துன்பங்களும் உண்மையானதல்ல. உலக நடவடிக்கைகளை மகிழ்ச்சியுடன் கவனித்து வா. ஆனால் கடவுளை மறந்து விடாதே. இந்த சம்சாரம் என்னுடையதல்ல, கடவுளுடையது என்பதை நினைவில் கொள். எப்போதும் ' நான் யார் ' என்று மனத்தினுள் விசாரம் செய்து கொண்டிரு. - ஸ்ரீ சாயி பாபாவின் சாஸனாம்ருதத் திருமொழிகள். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, January 11, 2016

நலம் உண்டாகச் செய்கிறேன்

நானா(பாபாவின் பக்தர்); பாபா, தாங்கள் எல்லாவற்றையும் அறிவீர்கள். தங்களுடைய பாதுகாப்பிலிருந்தும் கூடவா எங்களுக்கு இந்த துக்கங்கள் நேரவேண்டும்? [உறவினர்களின் பிரிவு, இழப்பு போன்றவை ]

பாபா: உமக்கு நெருக்கமானவர்களின் நலனை எண்ணிக் கொண்டு அதன் பொருட்டு நீர் இங்கு வருகிறீரென்றால், அது தவறு. இவற்றிற்காக நீர் எம்மிடம் வரவேண்டியத்தில்லை. இவை என் சக்திக்கு உட்பட்டவை அல்ல.
இவை (குழந்தை பிறப்பது,உறவினர் இறப்பது போன்றவை) ஊழ்வினையைப் பொருத்தது. தேவாதி தேவனானவரும், உலகையே படைத்தவருமான,
பரமேச்வரனால் கூட இவற்றை மாற்றிவிட முடியாது. அவரால் சூரியனையோ சந்திரனையோ நோக்கி, 'வழக்கமாக உதிக்கும் இடத்திலிருந்து இரண்டு கஜம் தள்ளி உதிப்பாய்'  எனக் கூற இயலுமா? இயலாது, ஏனெனில் அவரால் முடியாதது மட்டுமின்றி, அவர் அப்படி செய்யவும் மாட்டார்.அ து  ஒழுங்கின்மை, குழப்பம் விளைவிக்கும்.

நானா:அப்படி என்றால், ஒருவரிடம் " உனக்கு குழந்தை பிறக்கும் " என தாங்கள் கூறுகிறீர்கள், அவருக்கு குழந்தை பிறக்கிறது. மற்றொருவரிடம் " உனக்கு வேலை கிடைக்கும் " என சொல்லுகிறீர்கள், அவருக்கு வேலை 
கிடைக்கிறது. இவை எல்லாம் தங்களுடைய அற்புதங்கள் அல்லவா?

பாபா:இல்லை, நானா. நான் எந்த சமத்காரமும் செய்வதில்லை. கிராமத்து ஜோதிடர்கள் சில தினங்கள் முன்னதாகவே பின்னர் நடக்கப் போவதைக் கூறுகிறார்கள். அவற்றுள் சில பலிக்கின்றன. நான் அவர்களை விட எதிர்காலத்தை தீர்க்கமாகப் பார்க்கிறேன். நான் கூறுவதும் நடக்கிறது. என் வழியும் ஒருவகை ஜோதிடத்தைப் போன்றதே. உங்களுக்கெல்லாம் இது புரிவதில்லை. உங்களுக்கு.என் சொற்கள் அற்புதங்களாகத் தோன்றுகின்றன; ஏனெனில், நீங்கள் எதிர்காலத்தை அறியமாட்டீர்கள். ஆகையால் நிகழ்ச்சிகளை  நீங்கள் எமது அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தியாக முடிவு செய்து, எம்மிடம் மதிப்பும் மரியாதையும் காட்டுகிறீர்கள். பதிலுக்கு நான் உங்கள் பக்தியை இறைவனிடம் திருப்பி உங்களுக்கு நலம் உண்டாகச் செய்கிறேன். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, January 10, 2016

முக்தி
ஏன் இந்த துயரம்? மாந்தர் பிறப்பது இறப்பதற்காகவே. ஒரு நாள் நாம் ஒவ்வொருவரும் இறப்போம். இறப்பும் வாழ்வும் இறைவனின்  லீலையின் வெளிப்பாடுகள். இரண்டையும் பிரிக்கமுடியாது. எல்லாவற்றிலும் நிறைந்து நிற்ப்பவர் ஈசன். எனினும், ( உண்மையில் பார்த்தால்) யாரும் பிறப்பதில்லை.
ஒருவரும் இறப்பதில்லை. உனது அகக்கண் மூலம் பார். அப்போது நீயே இறைவன், அவரிடமிருந்து வேறுப்பட்டவரல்ல என்பதை புரிந்துகொள்வாய். 
லாப நஷ்டம், பிறப்பு இறப்பு, இவை இறைவனின் கையில் இருப்பவை. ஆனால் எவ்வளவு கண்மூடித்தனமாக ஜனங்கள் இறைவனை மறந்து விடுகின்றனர்! உயிர் உள்ள வரை, வாழ்க்கையை கவனி, மரணம் வரும்போது துயருறாதே. இவ்வுடல் மண்ணால் ஆனது. பார், உண்மையில் எல்லாம் ஒன்றே. ஆகவே அது மண்ணுக்கே திரும்பச் சென்று விடுவது வருத்தப்பட வேண்டிய விஷயமல்ல.
 பிறப்பையும் இது போன்றே பார்க்க வேண்டும். ஒரு குழந்தை பிறந்தது பற்றி கொண்டாடி மகிழவேண்டாம். இது படைப்பின் போக்கு ( ஆதிகாலம் முதல் நிகழ்ந்து வருவது). அது உங்களை பாதிக்க வேண்டாம். எதற்கும் குதுகலிப்பதோ, விசனப்படுவதோ வேண்டாம். அப்படி இருந்தால் உங்களுக்கு துயரம் எங்கிருந்து வரும்?  துயரமின்மையே  முக்தி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, January 9, 2016

பகவான்

1911 - 1914 ஆண்டுகளில் ஷீரடியில் வாசம் செய்த காசிநாத் கோவிந்த உபாசினி மகராஜ் உணவு தயார் செய்து கொண்டிருப்பதை ஒரு கருப்பு நாய் கவனித்துக் கொண்டிருந்தது. அந்த நாய்க்கு உணவு எதுவும் அளிக்காமல் உபாசனி  மசூதிக்கு சென்று உணவை பாபாவுக்கு சமர்பித்தார்.

பாபா : ஏன் இதை இங்கே கொண்டு வந்தாய் ? நான் அங்கே இருந்தேன்.

உபசனி : பாபா! ஒரு கருப்பு நாய் தவிர வேறு ஒருவரும் அங்கே இருக்கவில்லையே?

பாபா : அந்த கருப்பு நாய் நான் தான்.

அன்று பாபா  உணவை ஏற்க மருத்துவிட்டார். மறுதினம் உபாசனி தனது இருப்பிடத்தில் நிவேதனம் தயார் செய்தார். நாய் எதுவும் காணப்படவில்லை. 
ஆனால் நோய் வாய்ப்பட்ட சூத்திரன் ஒருவன் சுவற்றில் சாய்ந்தவாறு உணவையே பார்த்துக் கொண்டிருந்தான். வைதீகரான உபாசனி அந்த இடத்திலிருந்து அவனை விரட்டி விட்டு உணவை பாபாவிடம் எடுத்துச் சென்றார்.

பாபா : நேற்று எனக்கு உணவு அளிக்கவில்லை. இன்றும் என்னை விரட்டி விட்டாய். ஏன் உணவை இங்கு கொண்டு வருகிறாய் ?

உபாசனி : பாபா ! அங்கே நீங்கள் எங்கிருந்தீர்கள் ?

பாபா : நான் சுவற்றின் மீது சாய்ந்தவாறு நின்றிருந்தேன்.

உபாசினி : என்ன ! தாங்கள் அத்தகைய மனிதனின் உள்ளும் இருக்கக்கூடுமா?

பாபா : ஆம், நான் எல்லாவற்றிலும், அவற்றிற்கப்பாலும் இருக்கிறேன்.

குறிப்பு : ஸ பூமிம் விச்வதோ(ஆ)வ்ருத்வா அத்யதிஷ்டத் தசாங்குலம்  (புருஷ ஸுக்தம்)

அதாவது, அவர் ( பகவான் ) வையகம் முழுவதும் வியாபித்து அதையும் கடந்து நிற்பவர்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, January 8, 2016

பொறாமை

பொறாமை என்கிற வேண்டாத குணத்தைப் பொறுத்த வரை நமக்கு எந்த விதமான (நேரிடை) லாபமோ, நஷ்டமோ கிடையாது. பொறாமை என்பது இன்னொருவருக்கு கிட்டியிருக்கும் லாபம் அல்லது வளம் கண்டு தாளாமை. வேறு ஒருவருக்கு ஒரு அதிருஷ்டமோ, செல்வாக்கோ கிட்டி விட்டால், நம்மால் அதை சகித்துக் கொள்ள முடியாமல், அவரை அவதூறாகப் பேசுகிறோம். அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டால் மகிழ்ச்சியடைகிறோம். இது நல்லதா? அந்த மனிதன் வளம் பெற்றால், நமக்கு என்ன நஷ்டம் ஏற்ப்பட்டுவிட்டது? ஆனால் ஜனங்கள் இந்த விதத்தில் சிந்திப்பதில்லை. அவனுக்கு நலம் கிட்டினால் (அவனுடன் சேர்ந்து) நாமும் மகிழ்வோமே. நமக்கும் நலம் கிட்டியது, நாமும் பாக்கியசாலிகள் என் எண்ணுவோமே, அல்லது அதே நலம் நாமும் பெறுவோம் அல்லது பெறுவதற்கு முயற்சி மேற்கொள்வோம். அதுவே நமது விருப்பமும், தீர்மானமுமாக இருக்க வேண்டும். நம்மிடமிருந்து அவன் எதை எடுத்துச் சென்றுவிட்டான்?ஒன்றுமில்லை. அவனுடைய கர்மாவின் பலனாக அவன் வளம் பெற்றான். அப்படியிருக்க அதைக் கண்டு நாம் ஏன் பொறாமை படவேண்டும்? ஆகவே, முதலில் 
பொறாமையை வென்றுவிடு. -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...