Monday, February 29, 2016

நம்பிக்கை எப்பொழுதும் குறையவே கூடாதுபாபாவிடம் எனக்குள்ள நம்பிக்கை எப்பொழுதும் குறையவே கூடாது. இந்தக் குறிக்கோளை அடைவதில் நான் வெற்றிக் காண்பேனா? 

பதில் : பாபாவைப் பற்றியே படியுங்கள், சிந்தியுங்கள், பேசுங்கள், கேளுங்கள், எழுதுங்கள், அவரையே தியானியுங்கள். உங்களின் அனைத்து சக்திகளையும் ஒட்டுமொத்தமாக பாபாவிடமே செலுத்துங்கள். முயற்சி செய்யுங்கள். முயற்சி செய்து கொண்டே இருங்கள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, February 28, 2016

பாபாவிடம் இன்னும் நெருக்கமாக இருப்பதற்கு ஆசைப்படுகிறேன்வழிபாட்டின் மூலமாகவும், தியானத்தின் மூலமாகவும் பாபாவிடம் இன்னும் நெருக்கமாக இருப்பதற்கு நான் மிகவும் ஆசைப்படுகிறேன். பல சமயங்களில் எல்லாம் சுமூகமாக நடந்தபோதிலும், மாயையின் பிடியில் அடிக்கடி சிக்கித் தவிக்கிறேன். இதை தவிர்ப்பது எப்படி ?

மாயை என்று அழைக்கப்படும் இவ்வுலக வாழ்க்கை நிகழ்வுகளுக்கு நடுவில் வாழும் வரை இந்நிலைமையை ஒருவரால் தவிர்க்க முடியாது. இவ்வுலக நடவடிக்கைகளை முற்றிலும் துறந்து ஒரு யோகி அல்லது சன்னியாசியாக மாறினால்தான் இந்த நிலையை தவிர்க்க முடியும். அதே சமயத்தில் ஒருவர், பாபாவின் நாமத்தை ஜெபிப்பது, பாபாவை பற்றி மற்றவர்களிடம் பேசுவது, பாபாவைப் பற்றி படிப்பது, பாபாவையே நினைப்பது போன்ற சில வழிகளில் எப்போதும் பாபாவையே இறுகப் பற்றிக்கொண்டால், மாயையின் தாக்குதல்களை எதிர்க்கும் மனோபலத்தை வளர்த்துக் கொள்வதற்க்கு பாபாவின் உதவி நமக்குக் கிடைக்கிறது. தினமும் சாய் சத்சரிதத்தின் ஒரு அத்தியாயத்தையாவது படியுங்கள்.  நேரம் கிடைக்கும்போதெல்லாம் சாய் நாமத்தை சொல்லுங்கள் ( ஓம் சாய், ஸ்ரீ சாய், ஜெய் ஜெய் சாய் ). எவ்வளவுக்கெவ்வளவு பாபாவின் மீது உள்ள ஈடுபாடு அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மாயத்தோற்றமான இவ்வுலக நடவடிக்கைகளில் ஈடுபாடு குறைகிறது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, February 27, 2016

பாபாவை ஏன் அடையமுடிவதில்லை

பாபா நமக்குள்ளே உறைகிறார் எனில் நாம் ஏன் அவரை அடையமுடிவதில்லை ?

 யாவும் கடந்த உண்மை நிலையில், கடவுள், குரு, ஆத்மா இவையாவும் மாறுபடாத ஒன்றேயான நிலையான விழிப்புணர்வாகும். 'அந்தர் சாட்சி ' என நாம் அழைக்கும் சூட்சும வடிவத்தில், பாபா நம் ஆன்மாவினுள் நம்மை முழுவதும் அறிந்தவராய் உறைகிறார். நம்முள் அவர் சுயம் பிரகாசமாய் திகழ்கிறார். நம் மனதுள் நற்சிந்தனைகளை உருவாக்குகிறார். அவரை ஒளி வடிவமாய் பார்க்கக்கூடிய  ' அந்த சக்தி அல்லது ஞான திருஷ்டி ' நம்மிடத்தில் இல்லை. யோகிகள், ஜென்ம ஜென்மங்களாய் செய்யும் இடைவிடா முயற்சியின் காரணமாக ஞான திருஷ்டியைப் பெறுகிறார்கள்.

   அந்த ஞான திருஷ்டியின் மூலமாக பாபாவின் உண்மை உருவை தமக்குள்ளே ஒளிவடிவமாக அவர்களால் காணமுடிகிறது. அன்பு மற்றும் பக்தி என்ற உணர்வுகளின் மூலம் நாமும் சில சமயம் பாபாவை ஆத்மாவினுள் உணர்கிறோம். ஆனால், பெரும்பாலான நேரங்களில் நாம் பாபாவை மானசீகமாக அல்லது கற்பனையில் மட்டும் தரிசித்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் பாபாவின் புகைப்பட உருவம், அவர்தம் சொற்கள், செயல்கள் ஆகியவற்றை நினைவு கூர்ந்த வண்ணம் உள்ளோம். படிப்படியாக முன்னேறி நம்மை சூழ்ந்து கவ்விக்கொண்டிருக்கும் அஹங்காரம், ஆசைகள் இவற்றினின்று விடுபட்டு காமம், கோபம், வெறுப்பு ஆகியவனற்றை நம் கட்டுக்குள் கொண்டு வந்து முழு பற்றற்ற நிலையை அடையும்போது அவரது உண்மை வடிவம் நம்முள் துலங்கும். நம் மனம் சலனமற்ற நிலையை அடைந்து இதயம் நிர்மலமான பின்புதான் பாபாவின் இத்தகைய உண்மை வடிவம் நமக்குள் புலப்படும். நீர் கலங்கிய நிலையில் இருக்கும்போது அல்லது அலைகள் நீர்நிலையை அலைக்கழித்துக் கொண்டிருக்கும்போது
அது ஆகாயத்தை பிரதிபலிப்பதில்லை.
அதேபோல மனம் முழுவதும் அடங்கி நிலைபெற்று ஆன்மாவிற்குள் ஒன்றி அடங்கிப்போனால் அன்றி பாபாவின் இந்த நிஜ ஸ்வரூபம் காணக்கிடைப்பதில்லை. இந்நிலையை அடைய பெருமுயற்சி அவசியம், பாபாவையே சதா  தியானம் செய்யவேண்டும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, February 26, 2016

பாபாவிடமிருந்து எனக்கு ஏன் எந்த உதவியும் கிடைக்கவில்லைநான் சிலகாலமாக மிகுந்த கஷ்டத்தில் இருந்து வருகிறேன். என்னுடைய பிரார்த்தனைகளுக்கு பாபா செவி சாய்க்காததால் பல சமயங்களில் என்னுடைய நம்பிக்கையை இழக்கிறேன். பாபாவின் உதவியை நாடி நான் பிரார்த்தனை செய்தபோதிலும், பாபா அதற்க்கும் செவி சாய்த்ததாகத்  தெரியவில்லை. பாபாவிடமிருந்து எனக்கு ஏன் எந்த உதவியும் கிடைக்கவில்லை.? 

எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால், தன பக்தர்களுக்காக பாபா செய்யும் எல்லா செயல்களையும் அந்த பக்தர்கள் அந்த நேரத்தில் அறியமாட்டார்கள். பக்தருடைய முன்வினைகளை ( முந்தைய கர்மாக்களை ) நன்கு அறிந்த பாபா, அமைதியாக பக்தரிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். கால ஓட்டத்திலும், மேலும் பாபாவால் நிர்ணயிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட நேரத்திலும் பாபாவின் ஆசிகளின் பலனை ஒருவர் பெறவேண்டுமானால் அதற்கு மிகுந்த நம்பிக்கையும், பொறுமையும் தேவைபடுகிறது.  இக்காரணத்தினால்தான் சிரத்தாவுடன் கூடிய சபூரி அதாவது நம்பிக்கையுடன் கூடிய பொறுமை என்பதை பாபா முக்கிய தகுதிகளாகக் கூறியுள்ளார். ஒன்று,
மற்றொன்று இல்லாமல் நிலைக்க முடியாது. ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தை தினமும் படியுங்கள், பக்தர்களின் இதுபோன்ற கேள்விகளுக்கு பாபா தனக்கே உரித்தான முறையில் பதில் கூறியுள்ளார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, February 25, 2016

நம்பிக்கை நிலைகுலைந்து போகிறது

காற்றடித்தால் கலைவதைப் போல  பாபா மீதான என் நம்பிக்கை நிலைகுலைந்து போகிறது. இதைத் தடுப்பது எப்படி ? இது மீண்டும் நடக்காமலிருக்க என்ன வழி? 

பாபாவிடம் இன்னும் நெருக்கமாக வரவேண்டும் என்று விரும்புபவர்களுக்கான ஒரே வழி எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் அவரிடம் அசைக்க முடியாத, மாறாத நம்பிக்கை கொள்வது மட்டுமே. ஆனால் சிலர் உலகியல் ஆதாயங்களுக்கான ஆசைகளுடன் பாபாவை நாடி வருகின்றனர். அல்லது இதுபோன்ற எதிர்பார்ப்புகளுடன் தங்களது பக்தியை வெளிபடுத்துகின்றனர். சில சமயங்களில் அவர்களது ஆசைகள் பூர்த்தி அடையாவிட்டாலோ அல்லது அவர்களது முன்வினைகளின் பலனாக கஷ்டப்பட நேர்ந்தாலோ, அவர்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கத் தொடங்குகின்றனர்.
எந்த ஒரு அவதாரம் அல்லது சத்குருவின் காலத்திலும் எல்லா மனிதர்களுடைய எல்லா ஆசைகளும் எப்போதுமே நிறைவேறியதில்லை. பக்தர்கள் இறைவனை அடைய தடையாய்  இருக்கும் எந்தவிதமான ஆசைகளையும் சத்குரு நிறைவேற்றுவதில்லை. இதுபோன்ற ஆசைகள் நிறைவேறாமல் போவதன் பின்னணியிலும் பாபாவே உள்ளார். எனவே இன்பத்திலும், துன்பத்திலும் என இரண்டிலுமே பாபாவைக் காணக்கூடியவர் யாரோ அவரே உண்மையான பக்தராவார். இன்பத்தை மட்டுமே நாடுபவர்கள் பாபாவை விட்டு விலகிச்செல்லவே நேரிடும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, February 24, 2016

ஒருமுகபடுத்தி பாபாவை வணங்க முடியவில்லைநான் ஒரு சாயி பக்தன். ஆனால் சில சமயங்களில் என்னால் மனதை ஒருமுகபடுத்தி பாபாவை வணங்க முடியவில்லை. இன்னும் அதிக சிரத்தையுடன் பாபாவை வழிபடுவது எப்படி ?

பாபா கூறியது போல் பெரிய காரியங்கள் செய்யும்போது மட்டுமல்லாமல், சிறு சிறு வேலைகள் செய்யும் போதும் கூட பாபாவை நினைத்துக் கொள்ளுங்கள். உறங்கப் போவதற்குமுன், உறங்கி விழித்தபின், சாப்பிடுவதற்கு முன், புதிய பொருட்களை உபயோகிப்பதற்கு முன், புதிய வேலைகள் ஆரம்பிப்பதற்கு முன் என இவ்வாறான  எல்லா நேரங்களிலும் பாபாவை நினையுங்கள். நாம் பாபாவை நினைத்துக் கொள்வதற்கும், நம் அன்றாட வாழ்வில் பாபாவின் நினைவுடன் எல்லா செயல்களையும் செய்வதற்கும் காலம், இடம் அல்லது சூழ்நிலை என்ற கட்டுப்பாடுகளோ, வரையறைகளோ கிடையாது. இதுதான் பக்தியின் சுலபமான வழியாகும். இவ்வாறாக தொடர்ந்து செய்யும்போது மனதை ஒருமுகப்படுத்தும் தன்மை நம்முள் வளர்கிறது. மற்றும் பாபாவுடன் ஒரு உள்ளார்ந்த தொடர்பும் ஏற்படுகிறது.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, February 23, 2016

எவ்விதமாக பாபாவின் நல்ல பக்தனாக ஆக முடியும்
ஒரு மனிதன் எவ்விதமாக பாபாவின் நல்ல பக்தனாக ஆக முடியும் ?

' தான் ' என்ற அகம்பாவத்தை விடுத்து, கருணை, மன்னிக்கும் தன்மை, சேவை மனப்பான்மை, அஹிம்சை போன்ற தெய்வீக குணங்களை ஒருவர் தமக்குள்  கொண்டுவர முடிந்தால் பாபா அவருடனேயே இருந்து வழிநடத்திச் செல்கிறார். பாபாவிடம் முழுமையாக சரணடைந்தவர்கள் பாபாவிற்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தார்கள் என்பது சாயி சத்சரித்திரத்தை படிக்கும்போது தெளிவாகத் தெரிகிறது. பூஜை, புனஸ்காரங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் இவையாவும் நம் மனதை நாம் தூய்மைப் படுத்துவதற்கான வழிமுறைகள் மட்டுமே. இருப்பினும், உள்மனது பரிசுத்தமானதாக இல்லையென்றால், எவ்வளவு தான் வழிபாடுகள் செய்தபோதிலும் சாயி பக்தர் என்ற தகுதியை அடைய முடியாது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...