Monday, April 4, 2016

பூட்டியின் வாடா

                                 

             sai baba hd wallpaper


"எனக்குத் துவாரகாமாயியிலும், சாவடியிலும் இருந்து அலுத்து விட்டது. நான் பூட்டியின் வாடாவுக்குப் போகப் போகிறேன். அங்கே பெரிய மனிதர்கள் என்னைக் கவனித்துக் கொள்வார்கள் " - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா (பாபா சமாதி அடைவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு கூறியது...அந்த சமயத்தில் அவரது ஆரோக்கிய நிலை மோசமாக இருந்தது. அவர் காலை வேளைகளில் லென்டிக்குப் போவதையும், பிச்சை எடுப்பதற்காகப் போவதையும் நிறுத்திவிட்டு, மசூதியிலேயே அமர்ந்திருந்தார். காக்கா சாஹேப் தீட்சிதர், பூட்டி போன்றோர் எப்போதும் அவரருகிலேயே இருந்து, மசூதியிலேயே தினமும் உணவு உண்டு வந்தனர்.)

ஆராய்ச்சிக்குரிய கேள்வி என்னவென்றால், பாபா தம்மைப் பூட்டியின் வாடாவில் பெரும் புள்ளிகள் கவனித்துக் கொள்வார் என்று கூறினார். அது எவ்வளவு தூரம் உண்மையாயிற்று ?

பணத்தை அளவுகோலாகக் கொண்டு, பாபா பெரும்புள்ளி என்று கூறியிருக்க முடியாது. ஏனெனில், முற்றிலும் துறவியாக விளங்கிய அவர், பணத்தைத் துரும்பாகவே மதித்தார். அப்படியே அவர் கூறியதாகக் கொண்டாலும், பூட்டி எந்த விதத்திலும் 'சிறிய' மனிதரல்லர். இந்திய நாணயத்துக்கு அதிக மதிப்பிருந்த அந்த நாட்களில், சில இலட்சங்கள் மதிப்புள்ள கட்டிடம் என்பது அற்பமான விஷயமல்ல. மேலும் பணத்தை மட்டும் பொறுத்ததல்ல அதன் பெருமை. முரளீதரனுக்குக் கோவிலாக இருக்கவேண்டிய மாளிகை, சத்குரு அவுலியா சாயிநாதரின் சமாதி மந்திராக ஆயிற்று. இதைக் காட்டிலும் ஒரு சத்குருவுக்கு மேலான மரியாதை வேறு எதுவும் இருக்க முடியாது. மேலும், பூட்டியின் பணமும், அவரது தீர்மானமும் மட்டுமே இந்த மந்திரைக் கட்டும் நல்லதிருஷ்டத்தை அவருக்கு நல்கியது என்று கூற முடியாது. அவர் முதன்முதலில் ஷேகாமைச் சேர்ந்த ஸ்ரீ கஜானன் மகாராஜைத் தரிசித்தபோது, அவர் சாயிபாபாவுக்கு சேவை செய்யும்படி பூட்டியிடம் கூறினார். அதன்படி பூட்டியும் அவரது மனைவியும் தம் குழந்தைகளை எல்லாம் நாக்பூரில் விட்டுவிட்டுப் பாபாவின் சேவையில் ஈடுபட்டு, பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஷீரடியில் தங்கினர். இந்தக்காலத்தில், பாபா கூறினாலன்றி அவர்கள் துவாரகாமாயியைவிட்டு வெளியேறியதே இல்லை. பாபா எதை கொடுத்தாரோ, அதை மட்டுமே உண்டனர். இந்த பக்தியே அவருக்கு மேற்கூறிய நற்பேற்றை அருளியது.

                                   


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, April 1, 2016

பாபா கரை சேர்த்தார்

                 


சில  சமயம் பாபாவின் சொற்கள் புரிந்துகொள்ள முடியாதவையாக .இருக்கும். ஒருநாள், பாபா எவ்விதக் காரணமுமின்றி 'ஓ ' என்று கத்தினார். அடுத்த நிமிடம், அவரது தலையில் அணிந்திருந்த துணியும் கப்னியும் திடீரென்று நனைந்து காணப்பட்டன. அவற்றிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. துவாரகாமாயியில் இருந்த சிறு இடம் ஒரு நீர்க் குட்டையாக மாறியது. பக்தர்கள் மிகவும் வியப்படைந்தவர்களாக , மௌனமாகத் தண்ணீரைப் பெருக்கித் தள்ளிவிட்டுப் பாபாவின் துணிகளை உலரச் செய்தனர். இதற்கு மூன்றாவது நாள், ஜஹாங்கீர்ஜி ப்ராமி தருவாலா என்ற அவரது பக்தரிடமிருந்து தம்மைக் காப்பற்றியதற்காகப் பாபாவுக்கு நன்றி தெரிவித்து ஒரு தந்தி வந்தது.

நடந்த கதை வருமாறு ; ரஷியாவுக்கும் ஜப்பானுக்குமிடையே நடந்துகொண்டிருந்த  யுத்தம் மிகக் கடுமையாக இருந்த நேரம் அது. மேற்கூறிய பக்தர் ஒரு காப்டனாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். மூன்று நீராவிக் கப்பல்களைத் தவிர, மற்ற எல்லாக் கப்பல்களும் நீரில் மூழ்கடிக்கப்பட்டுவிட்டன. அவருடைய கப்பல் உட்பட மீதமிருந்த மற்ற மூன்று கப்பல்களும் விரைவில் அதே நிலையை அடைய இருப்பதை உணர்ந்த பக்தர், தமது சட்டைப் பையிலிருந்து பாபாவின் படத்தை எடுத்துக் கண்களில் நீருடன் தம்மையும் மீதியுள்ள மூன்று நீராவிக் கப்பல்களையும் காப்பாற்றுமாறு பிரார்த்தித்தார். உடனே பாபா அங்கே தோன்றி மூழ்கிக்கொண்டிருந்த கப்பல்களைக் கரை சேர்த்தார். ( Sri Sai The Superman என்ற புத்தகத்திலிருந்து)


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, March 31, 2016

ஆண்டவன்
ஆண்டவன் தன் இஷ்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும்படி விட்டுவிடு. மௌனமாக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிரு. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, March 30, 2016

அளவற்ற பயனை எய்துவான்

குரு கீதையின் (குரு சரித்திரம்) ஜபத்தால் ஒருவன் அளவற்ற பயனை எய்துவான். இது எல்லா பாவங்களையும் போக்குவது, எல்லா ஏழ்மையையும் நாசம் செய்வது. அகால மரணத்தை தடுப்பது, எல்லா சங்கடங்களையும் நாசம் செய்வது. யக்ஷர், ராட்சதர், பூதங்கள்,திருடர்கள்,புலி முதலிய பயங்களை போக்குவது.  
கொடிய குஷ்டம் முதலிய உபத்ரவங்களையும் தோஷங்களையும் நிவாரணம் செய்வது. குருவின் சந்நிதியில் என்ன பலனோ அது படிப்பதாலேயே கிட்டும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, March 29, 2016

சர்வாந்தர்யாமிபாபா: நானா (பாபாவின் நெருங்கிய பக்தர்), எனக்கு பூர்ண போளி வேண்டும். அதை நைவேத்யமாக தயார் செய்து கொண்டு வா.
 
அதன்பிறகு நானா எட்டு பூர்ண போளிகளும் அதற்கேற்ற பண்டங்களையும் தயார் செய்ய வைத்து, பாபாவின் முன் கொண்டு வந்து சமர்பித்தார்.

நானா: பாபா உட்கொள்ளுங்கள்.

பாபா சற்று நேரம் தாமதித்தார். போலியின் மீது ஈக்களும் எறும்புகளும் மொய்க்கலாயின.

பாபா: நல்லது, இந்த தட்டுகளை எடுத்துச் செல்.

நானா: அவற்றை தொட்டுக் கூட பாராமல் தாங்கள் என்னை எடுத்துச் செல்லச் சொல்வது எப்படி? தாங்கள் ஒன்றையும் உண்ணப்போவதில்லை என்றால் என்னை ஏன் இதை தயாரிக்க சொல்லவேண்டும்? கொஞ்சமாவது எடுத்துகொள்ளாவிட்டால் ,நான் தட்டுகளை எடுத்துச் செல்லமாட்டேன். நானும் உண்ணமாட்டேன்.

பாபா: ஏதோ ஒரு நேரத்தில் நான் நீ கொண்டுவந்த போளியை சாப்பிட்டுவிட்டேன். பிடிவாதம் வேண்டாம். தட்டுகளை எடுத்துச் சென்று, உணவு உட்கொள்.

நானா சிணுங்கியவாறு மீண்டு சாவடிக்குச் சென்று விட்டார். மறுபடியும் பாபா அவரை வரவழைத்தார்.

பாபா: நானா! நீ என்னுடன் பதினெட்டு ஆண்டுகளாக பழகுகிறாய். இவ்வளவு தானா நீ அறிந்துகொண்டது! என்னைப் பற்றிய உனது கணிப்பு இவ்வளவுதானா! 'பாபா' என்றால் உனக்கு கண்முன் தோன்றும் இந்த எண் ஜாண் உடல்தானா!அவ்வளவுதானா?
இதோபார், நான் எறும்பு உருவிலும் உண்கிறேன். மொய்க்கும் ஈயின் வாயிலாகவும் சாப்பிடுகிறேன். எனக்கு தோன்றிய வடிவத்தை நான் எடுத்துக் கொண்டு அந்த வடிவத்தின் மூலம் உண்பேன். உன் போளியை  வெகுநேரம் முன்பே சாப்பிட்டு விட்டேன். அளவு கடந்த பிடிவாதம் பிடிக்க வேண்டாம்.

நானா: தாங்கள் இப்படிக் கூறினாலும், என்னால் எதையும் புரிந்து கொள்ளமுடியவில்லை. என்ன செய்யட்டும்? எனக்கு புரிய வைத்தீர்களானால், நான் தட்டுகளை எடுத்துச் செல்கிறேன்.சாப்பிடுகிறேன்.

அச்சமயம் பாபா ஒரு சமிக்ஞை செய்தார். அது நானா ஆழ்மனதில் வேறு யாருக்குமே தெரியாத ஒரு ரகசியத்தை புதைத்து வைத்திருந்ததை பற்றியது. அது பாபா தனது அந்தராத்மா எனவும், ஆகவே எல்லோரினுள்ளும், எறும்பு உள்பட உறையும் சர்வாந்தர்யாமி எனவும் நானாவுக்கு திடமாக புலப்படுத்துயது.

 பாபா: நானா, நான் செய்த இந்த சமிக்ஞையை எப்படிப் பார்த்தாயோ,அவ்வாறே நான் (எல்லா உருவங்களாகவும்) உண்கிறேன் என்பதை தெரிந்து கொள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, March 28, 2016

சாயி நாமம்


சாயி நாமம் நம்முள் எப்போதும் எதிரொலித்துக் கொண்டே இல்லாமல் இருப்பது ஏன் ? இவ்வாறு சாயி நாமம் நம்முள் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்க நாம் எவ்வாறு முயற்சி செய்ய வேண்டும்.?

நமது மூச்சுக்கு அஜபா ஜெபம் என்று பெயர். அதாவது இறைவனின் நாமத்தை நம் மூச்சுடன், நாம் உணராவிட்டாலும் கூட, நமக்குள் தொடர்ச்சியாகவும் இயல்பாகவும் திரும்பத் திருபக் கூறிக்கொண்டேயிருப்பது மூச்சுவிடுவதற்கு
நாம் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. அது தன்பாட்டிற்கு ஒரு சீரான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. இறைவனின் நாமத்தை சுவாசத்துடன் இணைக்கும்போது அது மிகவும் சக்தி வாய்ந்ததாகிறது. ஆனால் ஒரு குடும்பஸ்தர் இதனை அனுஷ்டிப்பது கடினம். ஏனென்றால் அவருக்கு பல்வேறு கடமைகள் உள்ளன. நம்மால் முடிந்த போதெல்லாம் ஒவ்வொரு மூச்சுக்கும் 'சாயி சாயி' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருப்பது அல்லது நாமத்தை ஜெபிக்காமல் சாயியின் நினைவை மனதில் கொள்வது இவையும் நன்றே. மெல்ல மெல்ல நமக்குள், நம்மையறியாமலேயே, உள்ளுக்குள் நிகழும் ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக இது மாறிவிடும். ஒவ்வொரு செயலும், எண்ணமும் பாபாவின் நினைவுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். இதையே மானசீக ஜபமாகக் கொள்ளலாம்.
                 
                            " ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி "http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, March 27, 2016

தெய்வபலம் அவசியம் வேண்டும்


ஒருவருக்கு இணையில்லாத புத்திசாதுர்யம் இருக்கலாம். ஆடாத அசையாத சிரத்தையும் இருக்கலாம். ஆயினும் சாயியைப்போன்ற பலமான குரு அமைவதற்கு தெய்வபலம் அவசியம் வேண்டும். - ஸ்ரீ சாயி இராமாயணம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா  https://youtu.be/R528Bcsq50c http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaib...