Friday, April 8, 2016

Join in Sri Sai Satcharithra Group Parayan ON 14/04/2016சாய் பக்தர்களே, மனோகரமான இந்த ஸ்ரீ சாய் சத்சரித்திரம் எல்லா கோரிக்கைகளை தீர்த்து வைக்கும். இதனைப் படிப்பவர்களின் தன்மையைப் பொறுத்து அவர்களுக்குப் பலன் வரும். ஆகையால் பக்தி சிரத்தையுடன் படித்தால் நீங்கள் வேண்டியது நிறைவேறும்.
பல ஜென்ம புண்ணியத்தினால் மட்டுமே ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கை என்பது ஒரு இடத்தில் மட்டுமே வைக்கும்போது மிகுதியான பலன் கிடைக்கும். அந்த நம்பிக்கையை பாபாவின் மீது வைத்து, அவரின் பாதகமலங்களைப் பூஜித்துக்கொண்டு பாபாவையே தியானித்துக்கொண்டு இருங்கள்.
ஸ்ரீ சாய் சத்சரித்திரம் என்ற புத்தகம் உண்மையில் கடவுளின் அவதாரமேயாகும். பாபாவின் சக்தி சத்சரிதத்தின் ஒவ்வொரு எழுத்தின் உள்ளேயும் பொதிந்து கிடக்கின்றன. சத்சரிதத்தை வாய்விட்டு உரக்கவோ, மனதிற்குள்ளாகவோ, மனமும் குரலும் சேர்ந்து உபன்யாசமாகவோ பக்தியுடன் பாராயணம் செய்யும் பொழுது ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யம் அந்த திசையை நோக்கி ஈர்க்கப்படும். ஒரு பக்தனின் அனைத்து உடல் சார்ந்த, உயிர் சார்ந்த, மானசீக நோய் சம்பந்தமான, தொந்தரவுகள், கஷ்டங்கள் அனைத்து அதிர்வுகளும் ஸ்ரீ சாய் சரித்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது அவை ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யத்தை சென்றடைகின்றன. அவை அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பாராயணம் செய்யும் பக்தரை ஸ்ரீ சாய்நாதரின் அருள் நிரம்பிய அலைகளாக திரும்ப வந்து சேருகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில் பக்தன் இகலோக சுகங்களையும் பரலோக சுகங்களையும் பெறுவான்.
பெரும்பான்மையான சாய் பக்தர்கள் ஸ்ரீ சாய் சத்சரிதத்ததை முழுமையாக படித்ததில்லை. சிலர் ஓரிரு முறை பாராயணம் செய்ததோடு நிறுத்திவிடுகின்றனர்.
உண்மையில் பாபாவை விரும்பும் பக்தர் தினமும் ஒரு அத்தியாயத்தையாவது படிக்கவேண்டும். உங்களின் சத்சரித்திர பாராயணத்தின் போது பாபா உங்கள் அருகிலேயே அமர்ந்து, மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருப்பார். இதுவரை ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்காதவர்கள், அல்லது சத் சரிதத்தை ஏழு நாட்களுக்குள் ( சப்த பாராயணம் ) செய்ய நினைப்பவர்கள், நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டில் இருந்தபடியே  வரும் வியாழன்  (14 /04/16 ) அன்று தொடங்குங்கள்.

சப்தாக ( ஏழு நாட்கள் ) பாராயண முறை ;

காலையில் எழுந்து நீராடி பாராயணம் செய்யும் இடத்தை சுத்தம் செய்து தீபத்தை ஏற்றி பூக்களுடன் அலங்கரித்து நூலினை சாயியின் ஸ்வரூபமாகவே பாவித்து சாய் அஷ்டோத்திரத்தை படித்து பாராயணம் ஆரம்பிக்க வேண்டும். அன்றைய பாராயணம் முடிந்தவுடன் ஆரத்தி எடுத்து வணங்க வேண்டும். ஏழு  நாட்கள் பாராயணம் முடிந்தவுடன் அவரவர் சக்திக்கு ஏற்ப அண்ண தானம் செய்ய வேண்டும். இப்படி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் தாங்கள் வேண்டியது நிறைவேறும். பாபாவின் அருளும் ஆசியும் கிடைக்கும்.

ஏழு  நாட்கள் பாராயணம் செய்ய வேண்டிய அத்தியாங்களின் விவரங்கள்;

14/04/16--- அத்தியாயம் 1 முதல் அத்தியாயம் 9 வரை.

15/04/16--- அத்தியாயம்  10 முதல் அத்தியாயம்   21

16/04/16---  அத்தியாயம்22 முதல்   அத்தியாயம் 29

17/04/16---  அத்தியாயம் 30  முதல்  அத்தியாயம் 36

18/04/16--- அத்தியாயம் 39 முதல் அத்தியாயம்  43

19/04/16---44 முதல்  முடிவுரை வரை.

சத் சரித்திர பாராயணத்தில் கலந்து கொள்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள FACEBOOK   LINKல்  MESSAGE செய்யவும்.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

இது ஸ்ரீ சாய் சத்சரித்திர பாராயணத்தை ஊக்குவிக்கும் முயற்சியே.

ஜெய் சாய்ராம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 7, 2016

நீ துவாரகாமாயியின் குழந்தை


எப்போதும் திருப்தி உள்ளவனாக இரு. சஞ்சலத்திற்கோ கவலைக்கோ எப்போதும் இடம் கொடுக்காதே. நீ துவாரகாமாயியின் குழந்தை. துவாரகாமாயியின் நிழலில் வாழ்பவர் சுகத்தையும் சாந்தியையும் அளிக்கும் சிம்மாசனத்தில் உட்கார்ந்தவர் ஆகிறார். - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 6, 2016

பாபா எப்போதுமே வாழ்கின்றார்" உடல் இருந்ததனால் பாபா வாழ்ந்து கொண்டிருந்தார். உடலை விட்டு விட்டதனால் இறந்துவிட்டாரா? இல்லை. பாபா எப்போதுமே வாழ்கின்றார். ஏனெனில் 'பிறப்பு இறப்பு' என்ற இருமையையும் கடந்தவர் அவர். எவனொருவன் ஒருமுறை முழுமனதுடன் அவரை நேசிக்கிறானோ  அவன், எந்த நேரத்திலும் எந்த இடத்திலும், அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான். நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும்  எடுத்துக் கொள்கிறார்.பிரியமுள்ள பக்தனிடத்துத்  தோன்றி அவனை திருப்திபடுத்துகிறார். "-ஸ்ரீ சாய் சத்சரித்திரம். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 5, 2016

பக்தனின் முதிர்ச்சி

அந்தேரியைச் சேர்ந்த பாலாபட் என்பவர் 1909ஆம் ஆண்டு தீபாவளி விழாவன்று பாபாவை தரிசித்தார். இரவு 8 மணிக்குமேல், பாபாவின் முன்னாள் அமர்ந்திருந்த அவர், தனக்கு உபதேசம் தந்து, தனது குருவாக இருக்கும்படி பாபாவைக் கேட்டுக் கொண்டார். அப்போது பாபா,

" ஒருவருக்குக் குரு இருக்கவேண்டும் என்பது அவசியம் அல்ல. எல்லாம் நமக்குள்ளேயே இருக்கிறது. நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதையே அறுக்கிறீர்கள். எதை கொடுக்கிறீர்களோ, அதையே அடைகிறீர்கள். ஒரு குரு வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லாம் உனக்குள்ளேயே இருக்கிறது. உள்நோக்கிக் கேட்பதற்கு முயற்சி செய்து, உனக்குக் கிடைக்கும் மாற்றத்தின்படி நட. நமது 'ஆத்மா' வைப் பார்க்க வேண்டும். அதுவே நமது சட்டாம்பிள்ளை, நமது குரு ஆகும்" என்றார்.

பாபா எப்போதும் பக்தனின் முதிர்ச்சியை அளவிட்டே, அவனுக்குத் தேவையான போதனையை அளித்துவருகிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, April 4, 2016

ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர சத நாமாவளி

ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர சத நாமாவளி


1. ஓம் ஸ்ரீ ஸாயீநாதாய நமஹ


2. ஓம் லக்ஷ்மீ நாராயணாய நமஹ


3. ஓம் கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நமஹ


4. ஓம் சேஷசாயினே நமஹ


5. ஓம் கோதாவரீ தட சிர்டீ வாஸினே நமஹ


6. ஓம் பக்த ஹ்ருதாலயாய நமஹ


7. ஓம் ஸர்வ ஹ்ருத் வாஸினே நமஹ


8. ஓம் பூதாவாஸாய நமஹ


9. ஓம் பூத பவிஷ்யத் பாவ வர்ஜிதாய நமஹ


10. ஓம் காலாதீதாய நமஹ


11. ஓம் காலாய நமஹ


12. ஓம் கால காலாய நமஹ


13. ஓம் கால தர்ப்ப த3மனாய நமஹ


14. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நமஹ


15. ஓம் அமர்த்யாய நமஹ


16. ஓம் மர்த்யாபய ப்ரதாய நமஹ


17. ஓம் ஜீவாதாராய நமஹ


18. ஓம் ஸர்வாதாராய நமஹ


19. ஓம் பக்தாவன ஸமர்த்தாய நமஹ


20. ஓம் பக்தாவன ப்ரதிஜ்ஞாய நமஹ


21. ஓம் அன்ன வஸ்த்ர தாய நமஹ


22. ஓம் ஆரோக்ய க்ஷேமதாய நமஹ


23. ஓம் தனமாங்கல்ய ப்ரதாய நமஹ


24. ஓம் ருத்தி ஸித்தி தாய நமஹ


25. ஓம் புத்ர மித்ர களத்ர பந்து தாய நமஹ


26. ஓம் யோக க்ஷேம வஹாய நமஹ


27. ஓம் ஆபத் பாந்தவாய நமஹ


28. ஓம் மார்க்கபந்தவே நமஹ


29. ஓம் புக்தி முக்தி ஸ்வர்காப வர்க தாய நமஹ


30. ஓம் ப்ரியாய நமஹ


31. ஓம் ப்ரீதி வர்த்தனாய நமஹ


32. ஓம் அந்தர்யாமிணே நமஹ


33. ஓம் ஸச்சிதாத்மனே நமஹ


34. ஓம் ஆனந்தாய நமஹ


35. ஓம் ஆனந்த தாய நமஹ


36. ஓம் பரமேச்வராய நமஹ


37. ஓம் பர ப்ரம்மணே நமஹ


38. ஓம் பரமாத்மனே நமஹ


39. ஓம் ஞான ஸ்வரூபிணே நமஹ


40. ஓம் ஜகதய் பித்ரே நமஹ


41. ஓம் பக்தானாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நமஹ


42. ஓம் பக்தா (அ)பய ப்ரதாய நமஹ


43. ஓம் பக்த பராதீனாய நமஹ


44. ஓம் பக்தாநுக்ரஹ காதராய நமஹ


45. ஓம் சரணாகத வத்ஸலாய நமஹ


46. ஓம் பக்தி சக்தி ப்ரதாய நமஹ


47. ஓம் ஞான வைராக்ய தாய நமஹ


48. ஓம் ப்ரேம ப்ரதாய நமஹ


49. ஓம் ஸம்சய ஹ்ருதய தௌர்பல்ய பாப கர்ம வாஸனா க்ஷய கராய நமஹ


50. ஓம் ஹ்ருதய க்ரந்தி பேதகாய நமஹ


51. ஓம் கர்ம த்வம்ஸினே நமஹ


52. ஓம் சுத்த ஸத்வ ஸ்திதாய நமஹ


53. ஓம் குணாதீத குணாத்மனே நமஹ


54. ஓம் அனந்த கல்யாண குணாய நமஹ


55. ஓம் அமித ப்ராக்ரமாய நமஹ


56. ஓம் ஜயினே நமஹ


57. ஓம் துர்தர்ஷா க்ஷோப்யாய நமஹ


58. ஓம் அபராஜிதாய நமஹ


59. ஓம் த்ரிலோகேஷூ அஸ்கந்தித கதயே நமஹ


60. ஓம் அசக்ய ரஹிதாய நமஹ


61. ஓம் ஸர்வ சக்தி மூர்த்தயே நமஹ


62. ஓம் ஸுரூப சுந்தராய நமஹ


63. ஓம் ஸுலோசனாய நமஹ


64. ஓம் பஹுரூப விச்வ மூர்த்தயே நமஹ


65. ஓம் அரூபா வ்யக்தாய நமஹ


66. ஓம் அசிந்த்யாய நமஹ


67. ஓம் ஸூக்ஷ்மாய நமஹ


68. ஓம் ஸர்வாந்தர்யாமிணே நமஹ


69. ஓம் மனோவாகதீதாய நமஹ


70. ஓம் ப்ரேம மூர்த்தயே நமஹ


71. ஓம் ஸுலப துர்லபாய நமஹ


72. ஓம் அஸஹாய ஸஹாயாய நமஹ


73. ஓம அநாத நாத தீன பந்தவே நமஹ


74. ஓம் ஸர்வ பார ப்ருதே நமஹ


75. ஓம் அகர்மானேக கர்ம ஸுகர்மிணே நமஹ


76. ஓம் புண்ய ச்ரவண கீர்த்தனாய நமஹ


77. ஓம் தீர்த்தாய நமஹ


78. ஓம் வாஸுதேவாய நமஹ


79. ஓம் ஸதாம் கதயே நமஹ


80. ஓம் ஸத் பராயணாய நமஹ


81. ஓம் லோகநாதாய நமஹ


82. ஓம் பாவனானகாய நமஹ


83. ஓம் அம்ருதாம்சவே நமஹ


84. ஓம் பாஸ்கர ப்ரபாய நமஹ


85. ஓம் ப்ரம்மசர்ய தபஸ்சர்யாதி ஸுவ்ரதாய நமஹ


86. ஓம் ஸத்ய தர்ம பராயணாய நமஹ


87. ஓம் ஸித்தேச்வராய நமஹ


88. ஓம் ஸித்த ஸங்கல்பாய நமஹ


89. ஓம் யோகேச்வராய நமஹ


90. ஓம் பகவதே நமஹ


91. ஓம் பக்த வத்ஸலாய நமஹ


92. ஓம் ஸத் புருஷாய நமஹ


93. ஓம் புருஷோத்தமாய நமஹ


94. ஓம் ஸத்ய தத்வ போதகாய நமஹ


95. ஓம் காமாதி ஸர்வ அஞ்ஞான த்வம்ஸினே நமஹ


96. ஓம் அபேதானந்தா நுபவ ப்ரதாய நமஹ


97. ஓம் ஸம ஸர்வமத ஸம்மதாய நமஹ


98. ஓம் ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தயே நமஹ


99. ஓம் வேங்கடேச ரமணாய நமஹ


100. ஓம் அத்புதானந்த சர்யாய நமஹ


101. ஓம் ப்ரபன்னார்த்தி ஹராய நமஹ


102. ஓம் ஸம்ஸார ஸர்வ துக்க க்ஷயகராய நமஹ


103. ஓம் ஸர்வவித் ஸர்வதோ முகாய நமஹ


104. ஓம் ஸர்வாந்தர் பஹிஸ்திதாய நமஹ


105. ஓம் ஸர்வ மங்கல கராய நமஹ


106. ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாய நமஹ


107. ஓம் ஸமரஸ ஸன்மார்க்க ஸ்தாபனாய நமஹ


108. ஓம் ஸ்ரீ ஸமர்த்த ஸத்குரு ஸாயீநாதாய நமஹ


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பூட்டியின் வாடா

                                 

             sai baba hd wallpaper


"எனக்குத் துவாரகாமாயியிலும், சாவடியிலும் இருந்து அலுத்து விட்டது. நான் பூட்டியின் வாடாவுக்குப் போகப் போகிறேன். அங்கே பெரிய மனிதர்கள் என்னைக் கவனித்துக் கொள்வார்கள் " - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா (பாபா சமாதி அடைவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு கூறியது...அந்த சமயத்தில் அவரது ஆரோக்கிய நிலை மோசமாக இருந்தது. அவர் காலை வேளைகளில் லென்டிக்குப் போவதையும், பிச்சை எடுப்பதற்காகப் போவதையும் நிறுத்திவிட்டு, மசூதியிலேயே அமர்ந்திருந்தார். காக்கா சாஹேப் தீட்சிதர், பூட்டி போன்றோர் எப்போதும் அவரருகிலேயே இருந்து, மசூதியிலேயே தினமும் உணவு உண்டு வந்தனர்.)

ஆராய்ச்சிக்குரிய கேள்வி என்னவென்றால், பாபா தம்மைப் பூட்டியின் வாடாவில் பெரும் புள்ளிகள் கவனித்துக் கொள்வார் என்று கூறினார். அது எவ்வளவு தூரம் உண்மையாயிற்று ?

பணத்தை அளவுகோலாகக் கொண்டு, பாபா பெரும்புள்ளி என்று கூறியிருக்க முடியாது. ஏனெனில், முற்றிலும் துறவியாக விளங்கிய அவர், பணத்தைத் துரும்பாகவே மதித்தார். அப்படியே அவர் கூறியதாகக் கொண்டாலும், பூட்டி எந்த விதத்திலும் 'சிறிய' மனிதரல்லர். இந்திய நாணயத்துக்கு அதிக மதிப்பிருந்த அந்த நாட்களில், சில இலட்சங்கள் மதிப்புள்ள கட்டிடம் என்பது அற்பமான விஷயமல்ல. மேலும் பணத்தை மட்டும் பொறுத்ததல்ல அதன் பெருமை. முரளீதரனுக்குக் கோவிலாக இருக்கவேண்டிய மாளிகை, சத்குரு அவுலியா சாயிநாதரின் சமாதி மந்திராக ஆயிற்று. இதைக் காட்டிலும் ஒரு சத்குருவுக்கு மேலான மரியாதை வேறு எதுவும் இருக்க முடியாது. மேலும், பூட்டியின் பணமும், அவரது தீர்மானமும் மட்டுமே இந்த மந்திரைக் கட்டும் நல்லதிருஷ்டத்தை அவருக்கு நல்கியது என்று கூற முடியாது. அவர் முதன்முதலில் ஷேகாமைச் சேர்ந்த ஸ்ரீ கஜானன் மகாராஜைத் தரிசித்தபோது, அவர் சாயிபாபாவுக்கு சேவை செய்யும்படி பூட்டியிடம் கூறினார். அதன்படி பூட்டியும் அவரது மனைவியும் தம் குழந்தைகளை எல்லாம் நாக்பூரில் விட்டுவிட்டுப் பாபாவின் சேவையில் ஈடுபட்டு, பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஷீரடியில் தங்கினர். இந்தக்காலத்தில், பாபா கூறினாலன்றி அவர்கள் துவாரகாமாயியைவிட்டு வெளியேறியதே இல்லை. பாபா எதை கொடுத்தாரோ, அதை மட்டுமே உண்டனர். இந்த பக்தியே அவருக்கு மேற்கூறிய நற்பேற்றை அருளியது.

                                   


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, April 1, 2016

பாபா கரை சேர்த்தார்

                 


சில  சமயம் பாபாவின் சொற்கள் புரிந்துகொள்ள முடியாதவையாக .இருக்கும். ஒருநாள், பாபா எவ்விதக் காரணமுமின்றி 'ஓ ' என்று கத்தினார். அடுத்த நிமிடம், அவரது தலையில் அணிந்திருந்த துணியும் கப்னியும் திடீரென்று நனைந்து காணப்பட்டன. அவற்றிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. துவாரகாமாயியில் இருந்த சிறு இடம் ஒரு நீர்க் குட்டையாக மாறியது. பக்தர்கள் மிகவும் வியப்படைந்தவர்களாக , மௌனமாகத் தண்ணீரைப் பெருக்கித் தள்ளிவிட்டுப் பாபாவின் துணிகளை உலரச் செய்தனர். இதற்கு மூன்றாவது நாள், ஜஹாங்கீர்ஜி ப்ராமி தருவாலா என்ற அவரது பக்தரிடமிருந்து தம்மைக் காப்பற்றியதற்காகப் பாபாவுக்கு நன்றி தெரிவித்து ஒரு தந்தி வந்தது.

நடந்த கதை வருமாறு ; ரஷியாவுக்கும் ஜப்பானுக்குமிடையே நடந்துகொண்டிருந்த  யுத்தம் மிகக் கடுமையாக இருந்த நேரம் அது. மேற்கூறிய பக்தர் ஒரு காப்டனாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். மூன்று நீராவிக் கப்பல்களைத் தவிர, மற்ற எல்லாக் கப்பல்களும் நீரில் மூழ்கடிக்கப்பட்டுவிட்டன. அவருடைய கப்பல் உட்பட மீதமிருந்த மற்ற மூன்று கப்பல்களும் விரைவில் அதே நிலையை அடைய இருப்பதை உணர்ந்த பக்தர், தமது சட்டைப் பையிலிருந்து பாபாவின் படத்தை எடுத்துக் கண்களில் நீருடன் தம்மையும் மீதியுள்ள மூன்று நீராவிக் கப்பல்களையும் காப்பாற்றுமாறு பிரார்த்தித்தார். உடனே பாபா அங்கே தோன்றி மூழ்கிக்கொண்டிருந்த கப்பல்களைக் கரை சேர்த்தார். ( Sri Sai The Superman என்ற புத்தகத்திலிருந்து)


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...