Friday, April 29, 2016

என்னையே தியானி


மன சாந்தி இல்லாத என்ற ஒரு அங்குல இடம் கூட இவ்வுலகில் எங்கும் கிடையாது. உன் பாரத்தை என் மேல் வை. என் மீது உன் பார்வையை திருப்பு. என்னையே தியானி, நிச்சயமாய் நான் உனக்கு சாந்தியை அளிப்பேன்.- ஷிர்டி ஸ்ரீ  சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 28, 2016

அதிர்ஷ்டசாலிகள்


யாருடைய பாவங்களெல்லாம்  மறக்கப்படுகிறதோ அந்த அதிர்ஷ்டசாலிகளே என்னை வணங்கும் பாக்கியத்தை பெறுவார்கள்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 27, 2016

துவாரகாமாயிஸ்ரீ சாய்பாபா ஷீரடிக்கு வந்த ஆரம்ப காலத்தில், அவருக்குப் பின்புறம் நீண்டு தொங்கும் முடி இருந்தது. பச்சை நிறத்தில் நீண்ட அங்கியும், தலையில் முதலில் ஒரு குல்லாயும், அதன்மேல் காவி நிறத்தில் தொப்பியும் அணிந்திருந்தார்.  அவர்தம் கையில் ஒரு தண்டத்தையும் புகைக்குழாய், தீப்பெட்டி ஆகியவற்றையும் வைத்திருப்பார். அவர் பிச்சையெடுத்து உண்டு வந்தார்.
ஷீரடிக்கு வந்த நாலைந்து மாதங்களுக்குப்பின், பாபா வெள்ளை அங்கியும், வெண்மையான தலை உடைகளையும் அணியத்தொடங்கினார். இரண்டாவதுமுறை ஷீரடிக்கு வந்த பிறகும் கூட, பாபா சிறிதுகாலம் வேப்பமரத்தடியிலேயே வாழ்ந்ததாகத் தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் காரணமாகத்தான், அவர் தமது வாசத்தைக் கிராமத்திலுள்ள ஒரு பழைய பாழடைந்த மசூதிக்கு மாற்றிக் கொண்டார்.

மசூதிக்கு ( துவாரகாமாயி ) மாறியது.

ஒருமுறை ஷீரடியிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் அடைமழை பெய்தது. அதன் பெரும்பகுதி வெள்ளக் காடாகிவிட்டது. நீண்ட நேரத்துக்குப்பின் பாபாவின் ஆரம்பகால பக்தர்கள் சிலர், வீடற்ற பக்கீரின் ஞாபகம் வந்தவர்களாய், அவர் இந்த மலையிலிருந்து எங்கு ஒதிங்கியுள்ளார் என்று காண விரும்பினார்கள். மஹல்சபதியும் மற்றும் சிலரும் வேப்ப மரத்துக்கு விரைந்தனர். அங்கே சாயிபாபா அதே மரத்தடியில் பாதி சாய்ந்தவராகக் சமாதி நிலையில் இருப்பதைக் கண்டு செயலற்றுப் போயினர். அவர் மேல் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாவிதமான குப்பைகூளங்களும் அவர் உடல்மேல் சேர்ந்திருந்தன. அவரை அந்த நிலையிலிருந்து எழுப்ப அவர்களுக்குத் துணிவிருக்கவில்லை. அவர்கள் காத்துக் காத்துப் பார்த்துப் பின் சற்று நேரத்துக்குப்பின் வரலாமென்றெண்ணித் திரும்பச் சென்றனர். சில மணி நேரத்துக்குப் பின், தண்ணீர் முழுதும் வடிந்தபின் அவர்கள் வந்து பார்த்தபோது, அவர் இன்னும் ஈரத் தரையிலேயே கிடப்பதைக் கண்டனர். அவரது உடலும் முகமும் முற்றிலும் மண்ணால் மூடப்பட்டிருந்தன. தமக்குத் துன்பங்கள் வந்துற்றபோது தமது ஒரே பாதுகாப்பாளராகவும், வழிகாட்டியாகவும் இருந்த அவரை ஒரேயடியாகக் கவனிக்காமல் இருந்துவிட்டதைக் குறித்து, அவர்கள் குற்ற உணர்வு அடைந்தனர். பின்னர் அவர் சாதாரண உணர்வு நிலைக்குத் திரும்பியவுடன் அந்த பக்தர்கள், அவரைக் கிராமத்திலுள்ள ஒரு சிறிய பழுதடைந்த மன்கட்டிடமான மசூதியில் தங்குமாறு செய்தனர். சாயிபாபா ஒரு முஸ்லீம் ஆகையால், அவர் ஜானகிதாஸ், தேவிதாஸ் போன்ற மற்ற மகான்களைப் போல் இந்துக்களின் கோவில்களில் தங்குவது சரியல்ல என்று கிராமத்தின் இந்துக்கள் கருதியே இவ்வாறு செய்திருப்பார் போலும். அப்போதிலிருந்து அவர் மசூதியில் சிறிது நேரமும், வெப்ப மரத்தடியில் சிறிது நேரமும் இருப்பார். பின் சிறிது காலத்தில் அவர் மசூதியையே தமது முக்கிய, முழுநேர இருப்பிடமாக்கிக் கொண்டார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 26, 2016

பாபாவும் தத்தாத்ரேயரும் ஒருவரே

                           பாபாவும் தத்தாத்ரேயரும் ஒருவரே

                                     

பாபாவின் மஹாசமாதிக்கு நீண்டகாலத்துக்குப் பின் நிகழ்ந்தது (1918இல்). ரயில்வே இலாக்காவில் குமாஸ்தாவாக இருந்த விநாயக் தாஜிபாவே என்பவர், தமக்கு ஒரு குரு கிடைக்கவேண்டுமென்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். எனவே, அவர் இவ்விஷயத்தில் விரைவில் பலன்தரக்கூடிய 'குருகீதை' பாராயணத்தைத் தினமும் பக்தியோடு செய்ய தொடங்கினார். ஒரு மாதத்துக்குப் பின் ஒரு வியாழக்கிளமையன்று அவர் தத்தரின்  கோவில் ஒன்றுக்குச் சென்றார். ஆனால் அங்கே தத்தரின் விக்ரஹத்துக்குப் பதிலாக, ஒரு சமாதியைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். மறுநாள் காலை அவர் முதன்முறையாக, ஸ்ரீ தாபோல்கர், சாயிபாபாவைப் பற்றி எழுதிய புத்தகத்தைப் பார்க்கும்படி நேரிட்டது. அதில் சாயிபாபாவின் சமாதியின் படத்தைக் கண்டார். உடனே, தாம் தத்தருடைய கோயிலில் கண்ட அதே சமாதி தான் என்பதை அறிந்து, சாயிபாபாதாம் தமது குரு என்பதையும் புரிந்து கொண்டார். சிறிது காலம் அவர் பாபாவின் உதியை உபயோகித்தும், அவரைப் பற்றிய புத்தகங்களைப் படித்தும் வந்தார். கொஞ்ச காலத்துக்குப்பின் சமாதி குருவாக இருக்க முடியாது என்றும்,நேரில்  பேசமுடிகின்ற, உயிரோடு உள்ள குருவுக்கு அது எவ்விதத்திலும் ஈடாகாது என்றும் அவருக்குச் சந்தேகம் எழுந்தது. எனவே, மீண்டும் குருகீதையை ஒரு வாரத்துக்குப் பாராயணம் செய்தார். அப்போது கேட்கான்பெட் என்னும் இடத்தைச் சேர்ந்த நாராயண மஹராஜ் என்ற பெரும் மஹான்  அவரது கனவில் தோன்றினர். அதிலிருந்து நாராயண மஹராஜ் தான் தமது குரு என்று ஊகித்து அவர் கேட்கான்பெட்டுக்குச் சென்றார். அங்கே ஸ்ரீ நாராயண மஹராஜ் அவரது கனவில் தோன்றி, "நானும் சாயிபாபாவும் ஒருவரிலிருந்து மற்றவர் வேறுபட்டவர் அன்று. நீ ஏன் அங்கே செல்லவில்லை? " என்று கேட்டார். இவ்வாறு உறுதியானவுடன், தாஜிபாவே சாயிபாபாவைத் தம் குருவாக ஏற்றார்.
        1900 ஆம் ஆண்டு, நானா சாஹேப் சந்தோர்க்கரின் நெருங்கிய உறவினரான பாலாசாஹேப் பின்னேவாலா என்பவர், சாயிபாபாவைக் காணச் சென்றார். அவருக்குப் பாபாவிடம் நம்பிக்கை இல்லை. நானாசாஹேப்பைத் திருப்திபடுத்துவதற்காகவே அவர் அங்கே சென்றார். அவர் தத்தாத்ரேயரைப் பூஜிப்பவர். அவர் சாயிபாபவைத் தரிசித்தபோது, பாபா தத்தரின்  மூன்று தலைகளோடு காட்சி கொடுத்தார். உடனே சாயிபாபா தத்தரே என்று உறுதியடைந்த பாலா சாஹேப்,தமது இறுதிக்காலம் வரை பாபாவின் திடபக்தராக இருந்தார். பாபாவும் தத்தாத்ரேயரும் ஒருவரே என்ற உண்மையைச் சந்தேகத்துக்கிடமின்றி இந்த நிகழ்வுகள்  நிலை நாட்டுகிறது.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, April 25, 2016

அற்புதமான சக்தி
ஒருவர் பாபாவிடம் பக்தி  செலுத்தலாம், செலுத்தாமலும் இருக்கலாம்; தக்ஷிணை கொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம், ஆயினும், தயாசாகரமும் ஆனந்த ஊற்றுமாகிய சாயி எவரையும் வெறுத்து ஒதுக்குவதில்லை. பூஜை செய்யப்படுவதால் அவர் ஆனந்தமடைவதில்லை, அவமதிப்பு செய்யப்படுவதால் துக்கப்படுவதுமில்லை. எங்கே ஆனந்தத்திற்கு இடமில்லையோ, அங்கே துக்கம் எவ்வாறு இடம்பிடிக்க முடியும்? இது பரிபூரணமாக இரட்டைச் சுழல்களிலிருந்து விடுபட்ட நிலையன்றோ! மனதில் எந்த எண்ணத்துடன் ஒருவர் வந்தாலும், சாயி அவருக்கு தரிசனம் தந்து அவருடைய பக்தியை வென்றுவிடுகிறார். இது சாயியின்
அற்புதமான சக்தி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, April 24, 2016

சாவடிசாவடி, ஷிர்டி கிராமத்துப்  பெரியோர்கள் கூடிப் பொதுநலத்தைப் பற்றிய விஷயங்களை விவாதிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கட்டிடம். ஒருமுறை பலத்த மழையின்போது மசூதி  (துவாரகாமாயி ) முழுதும் ஈரமாகிவிட்டது. பாபாவும் அவரது பக்தர்களும் அமர்வதற்கு ஒரு சிறு உலர்ந்த பகுதிகூட இருக்கவில்லை. இப்போது போன்ற அந்த நாட்களில் முன்னாலுள்ள முற்றத்துக்குக் கூரை கிடையாது என்பதை நினைவில் கொள்வோமானால், அப்போது நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று அறிந்துகொள்ளலாம். தரையிலும் கற்கள் பதித்திருக்கவில்லை. அது ஒரு மண் கட்டிடம்; அதன் தரை அவ்வப்போது பசுஞ்சாணியினால் மெழுகப்படும், அவ்வளவே! அன்று, நாராயனதேலி என்பவர், மழைக்குப் பாதுகாப்பான சாவடிக்கு எல்லோரும் போகலாமென்று பாபாவிடம் கூறினார்.
   பாபா தமது வழக்கப்படி தாம் போகமருத்துத் தமது பக்தர்கள் யாவரும் அங்கே போகலாமென்று கூறினார். பக்தர்கள் அவரை விடாப்பிடியாக வற்புறுத்தி, இறுதியில் துணிந்து அவரது கைகளைப் பற்றிக்கொண்டு, எப்படியோ ஒரு வழியாக அவரைச் சாவடிக்குக் கொண்டுவந்து சேர்த்தனர். ஒருமுறை அங்கு தூங்கியதும், சாவடியில் இரவைக் கழிப்பதை ஒரு விதியாகவே ஆக்கிக் கொண்டுவிட்டார். அவர் சாவடிக்குப் போகும்போதும், சாவடியிலிருந்து வரும்போதும்  அவரைத் தொடர்ந்து பக்தர்களின் ஊர்வலம் எல்லாவிதமான கேளிக்கைகளோடும் இசையோடும் செல்லும்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, April 23, 2016

பாக்கியசாலி

                                          
"அடிமைகளுக்கு அடிமையாகிய நான் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்; உங்களுடைய தரிசனத்தை நாடுகிறேன். உங்களுடைய மஹா கருணையினால்தான் நான் உங்களை சந்திக்க நேர்ந்தது. உங்களுடைய மலத்தில் இருக்கும் புழு நான். இந்த அந்தஸ்தினால் நான் சிருஷ்டியிலேயே மிக்க பாக்கியசாலி." 
                                                                   -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவால் அருளப்பட்ட அத்தனையும் நன்மைக்கே !

பாபாவால் நமக்கு அருளப்பட்ட அத்தனையும் நிச்சயமாக நன்மைக்காகவே ஆனது என்னும் உறுதியான நம்பிக்கையுடன் பாபா அருளிய யாவற்றையும் மகிழ்ந்து அனுபவிக்...