Tuesday, June 7, 2016

சீரடி சென்றுதான் ஆகவேண்டுமா?சாயிபாபாவின் அருள்கிட்ட, அவரிடம் பக்தி வளர, சீரடி சென்றுதான் ஆகவேண்டுமா? அவசியமேயில்லை. பக்தர்கள் நினைக்குந்தோறும், நினைக்கும் இடமெல்லாம் பாபா தோன்றுகிறார். மனதை ஒருமுகப்படுத்தி பாபாவை தியானம் செய்தால் போதுமானது. ஆனால் சீரடி சூழ்நிலை, தொடர்பு யாவும் பாபாவிடம் பக்தி வளர உதவும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 6, 2016

முக்தி நிச்சயம்தினமும் சித்தர்கள், சாதுக்கள் ஆகியோரை தரிசனம் செய். தூய வாழ்க்கை நடத்து. இங்ஙனம் இறக்கும்போது தூய்மையாக இருக்கக்கூடும். இறக்கும் தருணத்தில் எந்த ஆசையும் இருக்கக்கூடாது. உன்னுடைய இஷ்ட தெய்வத்தின் மீது மனதைச் செலுத்து. மனதை ஈசனிடம் ஒருமைப்படுத்தியிருக்கும் போது, சாவு வருமானால் முக்தி நிச்சயம். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா ( பாபா தனது பக்தரான நானாவிடம் கூறியது )

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 5, 2016

சண்டை போடவேண்டாம்


யாராவது நம்மீது பத்து வார்த்தைகள் பேசினால், நாம் ஒரே வார்த்தையில் பதில் சொல்வோம். யாருடனும் சண்டை போடவேண்டாம். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 4, 2016

நானிருக்க பயமேன்இது ( மசூதி ) நம் வீடு. இந்த வாடா நம் வீடு. நான் இங்கிருக்கும்போது ஏன் பயப்பட வேண்டும்? இந்த வீட்டை உன் வீடாகவே கருதவேண்டும். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 3, 2016

கடவுளைக் காண்பதெப்படி


நானா ( பக்தர் ) : பாபா, கடவுளைக் காண்பதெப்படி?

பாபா : மனம் முரட்டுத்தனமானது. கட்டுக்கடங்காதது. அதை அடக்க முயல வேண்டும். ஒரு ஈயானது எப்படி எல்லாப் பொருள்கள் மீதும் உட்கார்ந்துவிட்டு, தீயையணுகும்போது பறந்துவிடுகிறதோ, அதைப் போன்று மனமானது இந்திரிய சுகங்களை நாடி அவற்றை அனுபவித்து, அவற்றுள் மூழ்கி, தெய்வீகத்தைக் காணும்போது வேறு பக்கம் திரும்பிவிடுகிறது. கட்டுக்கடங்காத இந்த மனம் கடவுளிடம் ஒன்றுபடாத வரையில், சம்சாரம், பிறவிப் பெருங்கடல் தவிர்க்க முடியாததே. மனதை ஜெயிக்காத வரையில் மீண்டும் பிறந்தேயாக வேண்டும். ஆனால் பிறவிகளில் மானிடப்பிறவியே மிகச்சிறந்தது.
ஆகவே, மூர்த்தி பூஜை செய். அதாவது கடவுளை உருவங்களில் வழிபட்டு மனதை ஒரு நிலைப்படுத்து, சிலையும் கடவுளே. உருவ வழிபாட்டைப் புறக்கணிக்காதே. ஒரு உருவச்சிலை ஆழ்ந்த பக்தியுடன் பூஜிக்கப்படும் பொழுது, மனது லயத்தைப் பெறுகிறது.
பின்னர், மனனம் (அதாவது) கடவுளின் லீலைகளை எண்ணுவது, தியானம் இவற்றைக் கடைப்பிடி. புராணங்கள், சாத்திரங்கள் ஆகியவற்றைப் பாராயணம் செய். அவற்றுள் கூறியிருப்பதைக் கடைப்பிடி. ஆத்ம வித்யை எல்லா ஞானத்திலும் சாலச்சிறந்தது. அதில் தேர்ந்துவிட்டால் முக்தி கிடைத்து விடுகிறது.  கடவுளே நம் வசப்படுகிறார். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 2, 2016

கடவுள் யார், நாம் அவரை எப்படிக் காண்பது?


நானா ( பாபாவின் நெருங்கிய பக்தர் ) ; பாபா! கடவுள் யார்? எதைப் போன்றிருப்பார்? எங்கே உள்ளார்? நாம் அவரை எப்படிக் காண்பது?

பாபா : பக்தர்கள் ( அதாவது சம்சாரத்தில் கட்டுண்டவர்கள் ) சரியானது, தவறானது இரண்டுக்குள் உள்ள வித்தியாசத்தையோ, கடவுள் யார் என்பதையோ அறிவதில்லை. அவர்களிடம் தூய எண்ணங்கள் இருப்பதில்லை. எப்போதும் சம்சாரத்திலேயே மூழ்கி இதயத்தில் தூய்மையில்லாமல் சாதுக்களிடமும், சாஸ்திரங்களிலும் நம்பிக்கை இல்லாமல், அவர்கள் கடவுளை அடைவதில்லை. நரகத்தை நோக்கியே விரைகின்றனர்.
முமுக்ஷூக்கள், இந்த கட்டுண்ட நிலையை வெறுத்து விவேகத்தைக் கடைப்பிடித்து விசாரம் செய்து, கடவுளைக் காணவேண்டுமென்ற துடிப்பைப் பெறுகிறார்கள். அவர்கள் தெய்வ பக்தியுடன், நீதிக்குக் கட்டுப்பட்டவர்கள் ஆகின்றனர். நாம ஜபம், தியானம் இவற்றின் மூலம் மனதை இந்திரியங்களிடம் திருப்பி அவர்கள் சாதகர்கள் ஆகிறார்கள். சாதுக்களுடன் பழக ஆசைப்படுகிறார்கள்.
இவர்கள் தங்கள் தியானம், ஜபம் இவற்றில் பூரண லயத்தைப் பெற்று விடும்போது, சித்தர்களாகிறார்கள். புகழும், இகழ்ச்சியும் ஒன்றாகிவிடுகிறது. ஆசைகள் அகன்றுவிடுகின்றன. இவ்வுடல் நம்முடையது, உடல்தான் நாம் என்ற எண்ணங்கள் போய்விடுகின்றன. தமது ஆத்மாவும், கடவுளும் ஒன்று என்பதை அறிந்துவிடுகிறார்கள். "நானே பிரம்மன்" என்ற எண்ணம் வந்து விடுகிறது. இறுதியில் அசையும், அசையாப் பொருள் யாவற்றிலும் கடவுள் வியாபித்திருப்பதைக் காணலாம்.
கடவுள் எங்குமுள்ளார். அவர் இல்லாத இடம் கிடையாது. நம்மை ஈஸ்வரனைக் காணவொட்டாமல் தடுத்துவிடும் மாயையின் சக்தியைப் பார்! நான், நீ இவ்வையகம் முழுவதும் ஈஸ்வரனுடைய அம்சங்களே!

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 1, 2016

விதியை வெல்ல யாரால் முடியும்


விதியை வெல்ல யாரால் முடியும் ? பாபாவின் பக்தர்களை கேட்டால் தயங்காமல் பதிலளிப்பார்கள் " பாபாவால் " என்று. தம்மையண்டிய பக்தர்கள் விஷயத்தில் விதியையும் மாற்றியமைத்தார் பாபா. சிறந்த ஜோதிடர்கள் ஒரு பக்தருக்கு குழந்தையே இருக்காது என்றனர். பாபா அந்த பக்தருக்குப்  பல குழந்தைகள் பிறக்க அருளினார். ஒரு பக்தருக்கு குறிப்பிட்ட தினத்தில் பெரிய அபாயம் வரப்போவதாக ஜோதிட சாத்திரம் கூறியது. " என் பக்தனிடம் எந்த அபாயம் நெருங்கும்? " என்று முழங்கினார் பாபா. பக்தனை அன்று தீண்ட வந்த சர்ப்பம் ஒதுங்கிச் சென்றது ! ஜோதிடர்கள் வியந்தனர். ஆம், பாபாவுடைய பக்தனாக ஆனவுடன், உண்மையான பக்தனானவுடன், "என்னுடைய பொறுப்பெல்லாம் உன்னுடையது " என்று பூரணமாகச் சரண்புகுந்த பக்தனான பின்னர், பாபா அந்த பக்தனை எட்டு திசைகளிலிருந்தும் சூழ்ந்து நின்று காப்பாற்றுகிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவால் அருளப்பட்ட அத்தனையும் நன்மைக்கே !

பாபாவால் நமக்கு அருளப்பட்ட அத்தனையும் நிச்சயமாக நன்மைக்காகவே ஆனது என்னும் உறுதியான நம்பிக்கையுடன் பாபா அருளிய யாவற்றையும் மகிழ்ந்து அனுபவிக்...