Thursday, July 7, 2016

உனது கர்மவினைகள் எரிக்கப்படும்


உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும். ஆனால் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால், எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதைப் போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 6, 2016

ஸ்ரீ ஸ்ரீ பாத ஸ்ரீவல்லபர்ஸ்ரீ ஸ்ரீ பாத ஸ்ரீவல்லபர்


ஆதி குரு ஸ்ரீ குருதேவதத்தர். பிரம்மா விஷ்ணு சிவனின்  அவதாரமே ஸ்ரீ தத்தர். குருவிற்க்கெல்லாம் குருவானவர். எப்போதும்வாழும் அவதாரமும் ஆவார். குருபரம்பரை என்பது  தத்தாத்திரேயரின் அவதாரத்துக்குப் பிறகேதோன்றின.அவரே குரு பரம்பரை என்பது துவங்க வழி வகுத்தார். திருமூர்த்திகளின் அவதாரமான அவரே குருக்களுக்கு எல்லாம்குருவான சத்குரு ஆவார்.  இந்த பூமியில் குரு மற்றும் சிஷ்யர்களுக்கு இடையே எப்படிப்பட்ட  உறவு  இருக்க வேண்டும், ஒரு குருவின்மூலமே மக்களின் மன நிலையை ஆன்மீக வழியில் செலுத்திகலிகாலத்தில் கலியின் தாக்கத்தின ல் விளையும் தீமையை எப்படிஅழிக்க வேண்டும் போன்றவற்றை  நடைமுறையில் எடுத்துக்காட்டவே தத்தாத்திரேயர் தாமே ஒரு குருவாக பல அவதாரங்களைஎடுத்துக் காட்டி உள்ளார்.  தத்தாத்திரேயரே ஸ்ரீ பாத ஸ்ரீவல்லபாவாகவும், ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளாகவும்,ஸமர்த்த ஸ்வாமிகளாகவும், ஷீரடி சாயிபாபா, மானிக் பிரபு போன்றபல ரூபங்களில் தோன்றி முதல் குரு பரம்பரையை உருவாக்கினார்.


ஸ்ரீ தத்தாத்ரேயரின் முதல் அவதாரம் ஸ்ரீ ஸ்ரீ பாத ஸ்ரீவல்லபர் ஆவார். அவருடைய வாழ்க்கையைப் பற்றி வெளிஉலகிற்கு தெரிந்துள்ள விபரங்கள் மிக குறைந்த அளவே ஆகும்.

கி.பி. 1320 ஆண்டு  ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் ப்ரம்மஸ்ரீ கண்டிகோட்டா  அப்பலராஜ சர்மா அவர்களுக்கும் அகண்ட லக்ஷ்மி சௌபாக்யவதி சுமதி மஹா ராணிக்கும் மூன்றாவது குழந்தையாக ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிதாபுரம் என்னும் ஊரில் பிறந்தார்.
ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் தான் பிரபஞ்சத்திலிருக்கும் ஸ்தாவர, ஜங்கம வஸ்துக்கள் அனைத்திற்கும் மூல காரணம். அவர் ஒரு ஆலமரம் போன்றவர். அவரது துணை, அம்ச/பின்ன அவதாரங்கள் அந்த மரத்தின் கிளைகள் போன்றவையாகும். ஆலமரத்தின் வேர்கள் கிளைகளிலிருந்து தலைகீழாக தோன்றினாலும் தாய் மரமே எல்லாவற்றிற்கும் அடிப்படையாகும். தேவர்கள் முதல் பூத பிசாசுகள் வரை உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அவரே அடைக்கலம் கொடுப்பவர். புகலிடம் கொடுப்பவர். அனைத்து சக்திகளும் அவரிடமிருந்தே தோன்றி அவரையே தஞ்சம் புகுகின்றன.
அநேக ஜென்மங்களில் செய்த பாவங்கள் ஒழிந்த பிறகு புண்ணியங்கள் பலன் கொடுக்கத் துவங்கும் பொழுது தான் ஒருவருக்கு தத்தரிடம் பக்தி பிறக்கும். தத்தரிடம் பரிபூரண பக்தி ஏற்படும்பொழுது  ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர் தரிசனம், தொட்டு ஆசிர்வதித்தல், பேசுதல் இவற்றால் அருட்ச் செல்வத்தை எந்த வயதிலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பெறலாம்.

ஸ்ரீ ஸ்ரீபாதர் சத் புருஷர்களுக்கு  எளிதாக கிடைக்ககூடிய தங்கச் சுரங்கம். பாவம் செய்பவர்களுக்கோ, தர்மத்தை மீரியவர்களுக்கோ அவர் ஒரு யமதர்மராஜா மாதிரி. ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீவல்லபரின் பெயரைச் சொன்னாலேயே, நாம் உறுதியாக அவரது அருளைப் பெறலாம். நாம் அனைத்து துன்பங்களிலிருந்தும் இழப்பிலிருந்தும் விடுதலை பெறலாம்.  

ஸ்ரீ பாதரின் பக்தர்களுக்கு ' முடியாத காரியம் ' என்று ஒன்று இல்லவே இல்லை. நெற்றியில் எழுதியுள்ளத் தலை எழுத்தை மாற்றி எழுதும் வலிமை வேறு எந்த தெய்வத்துக்கும் இல்லை. அனால் ஸ்ரீ தத்தாத்ரேயரின் அவதாரமான ஸ்ரீ ஸ்ரீபாதர், தன் பக்தனின் துன்பத்தைக் கண்டு மனம் இறங்கி பிரம்மாவை அவன் தலை எழுத்தை அழித்துவிட்டுப் புதிய தலையெழுத்தை எழுதுமாறு உத்தரவிடுவார்....
."இன்று என் பக்தன் இறக்க வேண்டிய நாளாகும். நான் அவனது ஆயுளை மேலும் இருபது ஆண்டுகள் நீட்டித்துள்ளேன். இந்த முடிவை அவனுடைய பக்தியின் காரணமாக அளிக்கிறேன் ."- ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர்.


ஸ்ரீ பாதரின் சத்திய வார்த்தைகள் சில...

*  நானே அனைத்து ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் வடிவம் ஆவேன்.
* என் செயல்கள் யாவும் உங்கள் குணம் சத்கர்மா, பாவ புண்ணியங்களுக்கு  ஏற்பவே அமையும். என்னை முழுமையாக சரணடைந்த பக்தனை நான்  ஒருபோதும் கை விடமாட்டேன். வெகுதூரத்தில் வசிக்கும் என் பக்தனையும்    என் ஷேத்திரத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்து வந்து விடுவேன். ரிஷி  மூலம் நதி மூலம் கேட்கக் கூடாது.
* நான் தான் ஸ்ரீ தத்தாத்ரேயர். என் தத்துவம் மட்டுமே கோடான கோடி  அண்டங்களில் வியாபித்து உள்ளது. திசைகளே எனக்கு ஆடைகள். நான் ஒரு  திகம்பரர். எவனொருவன் உடல் மனம் சொல் தூய்மையுடன் " தத்த திகம்பரா!  ஸ்ரீபாத ஸ்ரீ வல்லப  திகம்பரா! நரசிம்ம சரஸ்வதி திகம்பரா ! " என்று  கூறுகிறானோ அங்கு நான் சூக்ஷ்ம ரூபத்தில் இருப்பேன்.
* எவனொருவன் நான் பிறந்த புனிதமான வீட்டில் தங்குகிறானோ அவன் நிச்சயமாக பரிசுத்தனாக மாறிவிடுவான். அவனின் முன்னோர்கள் புண்ணிய லோகங்களை அடைவார்கள் .
* பல்வேறு பிறவிகளில் செய்த புண்ணியத்தின்  விளைவாகவே ஒருவன் பீடிகாபுர அக்ரஹாரத்தில் அடியெடுத்து வைக்கிறான்.
என்னுடைய சக்தியைத் தெரிந்துக்கொள்ள முதலில் நீங்கள் ஆன்மீகத் தேடுதலில் தீவிர ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும். அதன் பின்னரே என் சக்தி, இரக்கம், கருணை, அன்பு, பாதுகாப்பு, நான் பாவங்களிலிருந்து மீட்பதை நன்கு தெரிந்து கொள்ள முடியும்.
* நீங்கள் அனைவரும் என் விருப்பப்படியே அந்த அந்த நிலையில்  இருக்கிறீர்கள். நான் நினைத்தால் ஆண்டியையும் அரசனாக்குவேன்.  அரசனை ஆண்டியாக்குவேன். என்னை நம்பியுள்ள பக்தனுக்கு அவன் என்ன  கேட்டாலும் தருவேன். நான் 'தேவை' என முடிவு செய்து விட்டால்    மண்ணையும் விண்ணாக்குவேன். விண்ணையும்  மண்ணாக்குவேன்.
* என்னுடையவன் என எனக்கு யாரைப் பிடிக்குமோ அவனை தலை முடியைப்  பிடித்து பீடிகாபுரத்திற்கு இழுத்து வந்து விடுவேன். என்னுடைய விருப்பம்  இன்றி எவரும் என் பீடிகாபுரம் சமஸ்தானத்திற்கு வர இயலாது. அவர்  எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் மிகப் பெரிய யோகியாக இருந்தாலும்  சரி. இது உறுதியான சத்தியமாகும். நான் மட்டுமே யார் எப்பொழுது எத்தனைப்  பேராக எந்த மாதிரி பயணம் செய்து என்னை தரிசிக்க வரவேண்டும் என்பதை  முடிவு செய்வேன்.அது என் விருப்பமே.
* இந்தப் பிரபஞ்சப் படைப்பில் ஒவ்வொரு மனிதனும் ஒரு கூலிக்காரன்தான்.    நான் தான் முதலாளி. நான் மகிழ்ச்சியடைந்தால் உங்களுக்கு உரியதைவிட  மிக மிக அதிகமாகவே தருவேன். நான் கோபம் அடைந்தால் எவ்வளவு  குறைத்துக்கொண்டு மிதத்தை மட்டும்  தான் தருவேன்.
 மனமுருகி நான் பாவங்களிலிருந்து விடுபட்டவன் என உணர்ந்து, என்னை  அடைக்கலம் அடைந்து என்னை அன்புடன் , தத்த திகம்பரா ! ஸ்ரீபாத வல்லப  திகம்பரா ! என்ற அழைத்தால் அந்தச்   க்ஷ்ணத்திலிருந்தே உங்களது  பாவங்களை எரித்துப் பொசுக்கி உங்களை புண்ணியவான் ஆக்குவேன்.
* நான் என்னுடைய பக்தர்களுக்கு தாசானுதாசன் ஆவேன். என்னை தன்    மனதில் சிறை பிடிப்பவனே மிக மிகச் சிறந்த சக்ரவர்த்தி ஆவான்.  அப்படிப்பட்ட பக்தனுக்கு மூவுலகங்களையும் ஆளும் ஸ்ரீ பரமேஸ்வரனே கூட  வேலைக்காரன் போலச் சேவை செய்வார்.
* நான் ஒருவனே அனைத்து தர்மங்கள் மதங்கள் தத்துவங்கள் அனைத்திலும்  சுயமாகப் பிராகாசிப்பவனாவேன். அனைத்து தெய்வங்களிலும் தெய்வீக  சக்திகளிலும் நுணுக்கமாகப் பிரகாசிப்பவன் நானேயாவேன். நான் ஒருவனே  உங்கள் அனைவரின் வேண்டுதல்களையும் பிரார்த்தனைகளையும் அந்தந்த  உருவங்களின் மூலம் பெற்றுக் கொள்பவன் ஆவேன். நான் ஒருவனே தான்  அனைவருக்கும் அருள் பாலிப்பவன்.
* என் புனித வரலாற்றை (ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப சரித்ராம்ருதம் ) படித்தால் ஆசைகள் நிறைவேறும். எல்லாத்  தடைகளும் விலகும். இந்த சரித்ராம்ருதத்தை ஒரு சராசரிப் புத்தகம் என்று  நினைத்துக் கொள்ளாதே. இது ஒரு தெய்வீகச் சைத்தன்யத்தின் உயிருள்ள  சக்திப் பிராவகம் ஆகும். நீ பக்தியுடன் இதைப் பாராயணம் செய்யும்போது  அந்த எழுத்துகளின் வலிமையானது என்னுடைய மானசீக  சைத்தன்யத்திற்குள் பாயும். உனக்கு தெரியாமலேயே உனக்கு என்னுடன்  ஒரு தொடர்பு எற்பட்டுவிடுவதால் உன்னுடைய நியாயமான கோரிக்கைகள்,  பிரார்த்தனைகள் ஆசைகள் அனைத்தும் என்னுடைய கருணையால்  நிறைவேற்றப் பட்டுவிடும். இந்த புத்தகத்தை பூஜை ஆறையில்  வைத்திருந்தால் துரதிர்ஷ்டமும் தீய சக்திகளும் அங்கிருந்து  துரத்தி  அடிக்கப்பட்டுவிடும்.ஷீரடி சாயி அவதரித்தல்
ஹனுமனுக்கும் ஸ்ரீபாதருக்கும் நடந்த உரையாடல்;

ஸ்ரீபாதர் ; நீ கோடி கோடியாக இராம நாமாக்களை ஜெபித்துக் கொண்டிருக்கிறாய். ஆகையால் நீ காலத்தைக் கடந்தவன். நீ ' காலத்மகன்' ஆகிவிட்டாய். நீ ஒரு முறை கலியுகத்தில் அவதாரம் செய்ய வேண்டும். புலன்கள் ஆசையை அடக்க வல்லவனாய் இருப்பதால் ' சாயி' என்ற பெயரால் நீ புகழ்பெற்று விளங்குவாய்.

ஹனுமன் ; பிரபோ ! உடல் ரீதியாகவோ நான் உங்களுக்கு ஒரு சேவகன் தான். உயிர் சக்தியின் அடிப்படையால் நான் உங்களின் ஒரு பகுதியே ஆவேன். ஆத்மாவின் நோக்கில் நானே நீயாவேன். ஆகையால் நான் எந்த ரூபத்தில் அவதரிக்க வேண்டும் என்று கூறுங்கள்.

ஸ்ரீ பாதர் ; சிவனின்  மூலத்திலிருந்து நீ தோன்றியிருந்தாலும் நீ இராம பக்தனாகிவிட்டாய். அரபு மொழியில் "அல்" என்றல் சக்தி என்று பொருள்.ஆஹா என்றால் சாக்த, சக்தியை தாங்குபவன் என்று பொருள். ஆகையால் " அல்லாஹ்" என்பதன் பொருள் சிவனும் சக்தியும் சேர்ந்த ரூபமாகும். ஆகையால் இனிமேல் என்னை சிவ சக்தியாக " அல்லாஹ் " என்று பெயரை கூறுவதன் மூலம் பிற நாட்டவரும் ஏற்று கொள்ளும் வகையில் அழைத்து பூஜிப்பாயக.

ஹனுமன் ; நான் எடுக்கவிருக்கும் அம்சாவதரமானது இடைவிடாது எப்பொழுதும் மூலதத்துவமாகிய உம்முடன் தொடர்பு கொண்டும் அந்த பழைய மூல தத்துவம் பெற்றிருக்கும் அனைத்து வளங்களையும் சக்தியையும் பெற்றிருப்பதாகவும் இருக்கவேண்டும்  என்று வேண்டினார்.

அதற்கு ஸ்ரீ பாதர். " என் அருமை ஹனுமனே! நீ மிகவும் புத்திசாலி . என்னுடைய அனைத்து சக்திகளும் என்னுடைய அனைத்து வகையான சிறப்புகளும் உன்னுள்ளும் விளங்கட்டும்.  நான் கதலி வனத்தில் ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதியின் உடலில் மறைந்து 300 ஆண்டுகளுக்கு யோகா சமாதியில் இருப்பேன். பின்னர் நான் சுவாமி சமர்த்தர் என்ற பெயரில் ப்ரஞாபூரில் அவதரிப்பேன்.என்னுடைய பூத உடலை நீக்கும் சமயம் வரும்போது நான் உன்னுள்  " சாயி"யாக அவதரிப்பேன்.  என் அவதாரம் உன்னுள் உள்ளதாக பகிரங்கமாக அறிவிப்பேன்.  நீ என்னுடைய சர்வ சமர்த்த சத்குரு அவதாரமாகப் புகழ் பெருவை என்று கூறினார்.

பின்னர் ஹனுமன் பணிவுடன் " பிரபுவே ! உடல் ரீதியான நிலையிலிருந்து பார்க்கும் போது நான் உங்கள் சேவகன். ஆகையால் நான் ' அல்லா மாலிக்' என  பெயர் சொல்லிக் கொண்டு திரிவேன் . உங்களுடைய பேரொளியின் ஒரு பொறியைக் கொண்ட குரு ரூபமாக நான் விளங்குவேன். ஆனால் அது சாக்ஷாத் ஸ்ரீ பாதர் அல்ல. நம்மிருவரிடத்தில் இந்த வேறுபாடு தேவைதானா ? தயை கூர்ந்து என்னை ஸ்ரீ தத்தாத்ரேய ஸ்வரூபமாக உருமாற்றம் செய்து மாற்றி விடுமாறு  கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
பின்னர் ஸ்ரீபாதர், கால புருஷனை தன் முன் வருமாறு உத்தரவிட்டார்.  " கால புருஷரே! இந்த ஹனுமனை நான் என்னுடன் ஐக்கியமாக்கி கொள்ள விரும்புகிறேன். அவருக்கு ' நாத்' என்ற பட்டத்தையும் அளிக்கிறேன். ஆகையால் இவர் " சாயி நாதர்" என்ற பெயராலேயே அழைக்கப்படுவார். ஹனுமனில் உள்ள சைதன்ய அறிவானது ஏற்றபடி உருமாற்றமடைந்து  சாக்ஷாத் தத்தாத்ரேய ஸ்வரூபமாக மாற வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

மேலும் ஹனுமனிடம், உன் மனதை எப்பொழுதும் என் நினைவிலேயே ஒன்றி வைத்திருப்பாயாக ! உனக்கு குருவாக ' கோபால்ராவ்' என்பவர் அளிக்கப்படுவார். அவர் ஒரு வெங்கடேஸ்வர பக்தராக ' வெங்குசா ' என்று அழைக்கபடுவார் என்றார்.

ஸ்ரீ ஸ்ரீபாதர் தன் பக்தர்களுக்கு அளித்த பன்னிரண்டு வாக்குறுதிகள் .

1. என் வாழ்க்கை சத்சரித்திரத்தை பக்தியுடன் படிக்கும் ஒவ்வொரு இடத்திலும் நான் சூக்ஷ்ம ரூபத்தில் இருப்பேன்.

2. மனம், சொல், செயல் இவற்றால் என்னை பக்தியுடன் சரண் அடைந்தவனை நான் கண் இமை கண்ணைக் காப்பது போலக் காப்பேன்.

3. தினமும் மதியம் பீடிகாபுரத்தில் நான் பிக்ஷை எடுப்பேன். என் வருகை ரகசியமானது.

4. என்னை இடைவிடாது தியானிப்பவர்களின் அனைத்து கர்மக் குவியல்களையும் எரித்து சாம்பலாக்கிவிடுவேன். பல்வேறு ஜென்மங்களில் சேர்த்து வைத்திருந்த கர்மாக்களையும் எரித்துப் பொசுக்கிவிடுவேன்.

5. " ஓ ! ராமச்சந்திரா! சாப்பாடு போடு!" என்று பிக்ஷை கேட்பவருக்கு உணவு அளித்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

6. நான் ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் ! ஸ்ரீ மஹாலக்ஷ்மி அனைத்து சொவ்பாக்யங்களுடன் என் பக்தர்கள் வீட்டில் பிரகாசமாக ஜொலிப்பாள்.

7. உங்கள் மனம் தூய்மையாக இருந்தால் என் அருள் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு.

8. எந்த ஒரு கடவுளை வழிபட்டாலும், எந்த ஒரு சத்குருவின் வழி  நடந்தாலும் எனக்கு சம்மதமே.

9. உங்களின் அனைத்து பிரார்த்தனைகளும், வேண்டுதல்களும் ,என்னை வந்தடையும். என்னுடைய அருளானது உங்களுக்கு நீங்கள் வழிபடும் தெய்வம் வழியாகவோ, உங்களுடைய சத்குருவின் வழியாகவோ உங்களை வந்தடையும்.
10. ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் இந்த பெயருக்கும் உருவத்திற்கும் மட்டுமே கட்டுப்பட்டவர் அல்ல. என்னுடைய தெய்வீக விஸ்வ ரூபத்தை அனைத்து தெய்வங்களின் உருவமாகவும் என் உடல் பகுதிகளை அனைத்து சக்திகளாகவும் ஆன்மீக யோக சாதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

11. என்னுடையது அவதாரம் முழுமையான யோக அவதாரமாகும். மிகச் சிறந்த யோகிகளும், சித்தர்களும் என் மீது இடைவிடாது தியானம் செய்து கொண்டிருப்பார்கள்.

12. என்னுடைய ஆதரவை நாடினால் நான் உங்களுக்கு தர்மத்தின் வழியையும் கர்மத்தின் வழியையும் போதிப்பேன். உங்களை எப்பொழுதும் வீழ்ச்சியிலிருந்தும் துன்பத்திலிருந்தும் காப்பாற்றுகிறேன்.

                             ஸ்ரீ பாத ராஜம் சரணம் பிரபத்யே !

                 திகம்பரா திகம்பரா ஸ்ரீ  பாத ஸ்ரீ வல்லப திகம்பரா!

( இந்த மந்திரத்தை எப்பொழுதுவேண்டுமானாலும்  ஜெபித்தால் எல்லா துக்கங்களும் பாபங்களும் அழிந்து போய்விடும்)http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, July 5, 2016

பாபா எப்போதும் உன்னுடன் இருக்கிறார்.


ஒரு அடியவரை பாபா ஏற்றுக் கொண்டால், அவரை அவர் தொடர்கிறார். இரவும், பகலும், வீட்டிலும் வெளியிலும் அவருடனேயே இருக்கிறார். அவர் விரும்பியவாறு  எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். அறிவுக்கெட்டாத வகையில்  எதாவது  ஒரு ரூபத்தில் அவருக்கு முன்பாகவே சென்று பாபா அங்கு இருக்கிறார்.- ஸ்ரீ சாய் சத்சரித்திரம் 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 4, 2016

நாயும் நோய்வாய்ப்பட்ட சூத்திரனும்
ஒரு தினம் பாபாவின் பக்தரான காசிநாதர் ( உபாஸனி மஹராஜ் ) கந்தோபா ஆலயத்தில் ஆகாரம் தயார் செய்து கொண்டிருந்தபோது ஒரு கருப்பு நாய் அதை ஆவலுடன் உற்று நோக்கிக் கொண்டிருந்தது. தயார் செய்த ஆகாரத்தை பாபாவுக்கு சமர்ப்பித்து விட்டுப் பின்னர் பிரசாதமாக எடுத்துக் கொள்ள, காசிநாதர் மசூதியை நோக்கிச் செல்லலானார்.

அப்போது அந்நாய் அவருடன் சற்று தூரம் பின் தொடர்ந்து வந்து பின் மறைந்தது. பகவானுக்கு நிவேதனம் செய்யும் முன்பு ஒரு ஈன ஜந்துவான நாய்க்கு ஆகாரமளிப்பது சாஸ்திர விரோதம் என்று அவர் கருதினார்.

பட்டப் பகல் வெய்யிலில் மசூதியை அடைந்த அவரை,

பாபா ; எதற்காக இங்கு வந்தாய் ?

காசிநாதர் ; தங்களுக்கு நைவேத்தியம் தயார் செய்து கொண்டு வந்திருக்கிறேன்.

பாபா : நீ என் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டும்? நான் அங்கேயேதானே இருந்தேன் !

காசிநாதர் ; அங்கு ஒரு கருப்பு நாயைத் தவிர, வேறொருவரையும் பார்க்கவில்லையே ...

பாபா : அந்த கருப்பு நாய் நானே. நீ அங்கு உணவு அளிக்க மறுத்தமையால், இங்கும் நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

மனம் நொந்து திரும்பிய காசிநாதர் மறுதினம் அத்தவறு நடக்காமலிருக்க வேண்டும் என சங்கல்பம் செய்து கொண்டார். மறுதினம் ஆகாரம் தயார் செய்து கொண்டிருக்கும் போதே அந்த நாய் எங்காவது தென்படுகிறதாவென்று பார்த்தார். காணவில்லை. ஆனால் நோய்வாய்ப்பட்டு மெலிந்த சூத்திரன் ஒருவன் அங்கே சுவற்றில் சாய்ந்து கொண்டு அவர் ஆகாரம் தயார் செய்வதை உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

வைதீக பிராம்மணரான அவர் தாம் சமைக்கும் ஆகாரத்தை சூத்திரன் ஒருவன் பார்ப்பதால் திருஷ்டி தோஷம் வந்துவிடும் எனக் கருதி அவனை அங்கிருந்து விரட்டவே, அவன் போய்விட்டான்.

ஆகாரத்தை எடுத்துக் கொண்டு பாபாவின் முன் சென்றார் காசிநாதர்....

பாபா ( மிகுந்த கோபத்துடன் ) :  நேற்றும் எனக்கு உணவளிக்கவில்லை. இன்றும் விரட்டிவிட்டாய் .

காசிநாதர் : ஆ ! தாங்களா அந்த நோய்வாய்ப்பட்ட சூத்திரன் ?

பாபா : ஆம் ! எல்லாவற்றினுள்ளும், அவற்றைக் கடந்தும் வியாபித்து நிற்கிறேன்.

" இங்கு நீங்கள் பார்க்கும்  மூன்று முழ சரீரம் தான் சாயி  என்று நினைத்துவிடாதீர்கள்.எனது உண்மையான பக்தன் எல்லா இடங்களிலும் எனது இருப்பை உணர்வான்.எல்லா உயிர்களிலும் என்னை காண்பான்.-    ஸ்ரீ ஷீரடி சாய்பாபா "

         

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 3, 2016

பாபா ஒருவராலேயே வழி நடத்த முடியும்
தேகத்துடன் இருந்தபோதும், தேகத்தை விடுத்த பின்னரும் (மஹா சமாதிக்குப் பின்) 'நிராகார'ராக ( அருவமாக ) இருந்தும், எந்த வேளையிலும் அவர் 'ஸகார'ராகவும் ( உருவத்துடனும் ) இருக்க முடிந்தது.  இவ்வாறாக பாபா, உடலுடன் இல்லாவிடினும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டான  குருவாக தமது பக்தர்களுக்கு திகழ்கிறார். அவருடைய பழைய, புதிய பக்தர்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர் தமது பழைய திருவுடன் தோன்ற முடிகிறது. தோன்றியும் வருகிறார். உடலுடன் இல்லாத ஒருவர் தங்களுக்கு ஏற்றவரல்ல என பலர் எண்ணினார்கள், எண்ணுகிறார்கள். ஆனாலும் பாபாவின் திருவருளால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களை ( நாம் எல்லோருமே ), தமது சரணங்களை நோக்கி வருமாறு பாபாவால் இழுக்கப்பட்டு வருகின்றனர்.

பாபாவின் செயல் வெளிப்படையானதோ அல்லது காரணங்களை விளக்கி வாதிப்பதோ அல்ல; பேச்சில்லாத, கண்ணுக்குப் புலப்படாத உட்புறமானதொரு தாக்கம். எல்லாவிதமான குறைகாணும் மனப்போக்கையும் அகற்றி, அறவே எல்லா சுவடுகளையும் துடைத்து, பதிலுக்கு ஒரு பணிந்து போகும் மனப்பாங்கை தோற்றுவிக்கிறது. அந்த வினயம், " நான் ஒரு புழுவே, தாங்களே சர்வ சக்திமான், கருணாமூர்த்தி, காத்தருளவேண்டும், என் பாதையை ஒளிமயமாக்குங்கள். தங்கள் கரங்களிலே அடியேனை ஒரு ஆதரவற்ற குழந்தையாக எடுத்துக்கொண்டு, தங்கள் சங்கல்பப்படி செய்யவேண்டும் " என இறைஞ்சும். அந்த கண்முன் தோன்றா குரு ஜீவித்துள்ளார், சக்தி படைத்தவர், இலக்கை நோக்கி அவரே வழிநடத்துவார் ( பாபா ஒருவராலேயே வழி  நடத்த முடியும் ) என்ற உணர்வு அம்மனிதனின் உள்ளத்தில் தோன்ற ஆரம்பிக்கும் நிலை அது. அத்தகைய ஒருவருடைய முந்தைய குருமார்கள்,அவரை அந்த அளவு உணர்வு பெறச் செய்ததில்லை. பாபா அந்த பக்தனை மேலே உயர்த்தி, தம்மை பல வடிவங்களில் தோன்றும், பல பெயர்களால் அழைக்கப்படும் ஒரே ஸ்வரூபம் அல்லது ஆதாரசக்தி எனக் கண்டுகொள்ளும்படி செய்துவிடுகிறார்.

                                               *   ஜெய் சாயிராம் *
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 2, 2016

பாபாவே தெய்வம்
ஜி. ஜி. நார்கே, இங்கிலாந்தில் கல்வி பயின்ற முதுநிலை பட்டதாரி. பாபாவின் பக்தரான இவர் ஒருமுறை, ' பாபா ஒரு மனிதனே, தெய்வம் ஆகமாட்டார் ' எனக் கூறினார். இது பாபாவிடம் தெரிவிக்கப்பட்டது. லௌகீக நோக்கிலிருந்து அந்த கற்றறிந்த அறிவாளி கூறியது உண்மையே என  பாபா எடுத்துரைத்தார். அதாவது, பாபாவின் உடலை நீ பாபா என குறிப்பிட்டால், அது ஒரு மனித உடல், ஆகவே, பாபா ஒரு மனிதன் என்று சொல்வதில் தவறு எதுவுமில்லை. ஆனால், குறிப்பாக பாபாவிடமிருந்து தெய்வீகமான உதவியை எதிர்பார்க்கும்போது , அவரை ஜனங்கள் ஒரு மனிதனே என எண்ணிவிடுவது மிகப் பெரிய தவறு. மனித உடலின் அவயங்களான சதைகள், நரம்புகள், எலும்புகள் ஆகியவற்றிலிருந்து வரக்கூடியது அல்ல தெய்வீக உதவி; அது வருவது உள்ளே உறையும் ஆத்மாவிடமிருந்து, அந்த ஆத்மா தெய்வத்தன்மை வாய்ந்தது. ஆகவே தான் பாபா அவர்களிடம் கூறினார்.

" நீங்கள் அவ்வாறு பேசக்கூடாது. ( அதாவது நான் ஒரு பௌதீகமான மனிதப் பிறவியியே என ). ஏனெனில், நானே உங்கள் தந்தை, உங்கள் தேவைகளை எல்லாம் எல்லாம் நீங்கள் என்னிடமிருந்து பெறவேண்டியுள்ளது " 

பாபாவை தெய்வீகமாக பாவித்ததாலேயே, பல பக்தர்கள் பாபாவின் தடையில்லா அன்பையும், பாதுகாப்பையும், தேவைகளையும் பெற முடிந்தது;  அதாவது நாம் நினைவில் கொள்ளவேண்டியது அவரிடமுள்ள தெய்வீகத்தன்மையை; நிவாரணம் பெற வேண்டுமானால் மனித சரீரத்தை ஒதுக்கி அறவே மறந்துவிடவேண்டும். ஆகவே அவர்கள் காணும் மூணரை முழு உடலல்ல சாயிபாபா என்பது; அந்த உடலுக்குள் குடி கொண்டுள்ள பரமாத்ம  ஸ்வரூபம், அந்த உடலை விட்டு எத்தனை தொலைவிலிருந்தாலும் இயங்க வல்லது, அதுவே பாபா என பாபா அவர்களுக்கு எடுத்துக் காட்டினார். ஷீரடியில் அமர்ந்தவாறே ஆயிரம் மைல்களுக்குப்பால் உள்ள மாந்தரை வசப்படுத்தக்கூடியதும், சாகுந்தருவாயில் இருப்பவர்களின் ஆவிகளை தம்மிடம் வரவழைத்து தேவையான நல்ல கதி  கிடைக்கச் செய்யக்கூடியதுமான  சக்தி தம்மிடம் இருப்பதை பாபா வெளிப்படுத்தினார். இந்த ' பாபா சக்தி' யையே நாம் பாபா என அழைக்கின்றோம்.

                                                       * ஜெய் சாயிராம் *

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 1, 2016

பூரண சரணாகதி


எனக்கு தெரிந்தது ஒன்றே, என் குரு போதித்த சத்யம். பற்பல சாதனைகளும், புத்தகங்களும் தேவையில்லை. தேவையானது குருவிடம் பூரண சரண், பூரண பிரேமை  - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா  https://youtu.be/R528Bcsq50c http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaib...