Wednesday, August 31, 2016

செயல்கள் அனைத்தும் வெற்றியடையும்பாபாவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர்  தூயவரானாலும் சரி, கபடரானாலும் சரி, கடைசியில் கரையேற்றப்படுவார். செயல் புரியும் கடமை மாத்திரம் என்னுடையது; பலனை அளிப்பவர் 'எல்லாம் வல்ல சாயிபாபா' என்னும் திடமான நம்பிக்கை எவரிடம் உள்ளதோ, அவருடைய செயல்கள் அனைத்தும் வெற்றியடையும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, August 30, 2016

குருபக்தி

தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும். 

உதாரணத்திற்கு, பாபாவின் நெருங்கிய பக்தரான சாமாவை ஒருமுறை நச்சுப் பாம்பு ஒன்று கடித்துவிட்டது. வலி கடுமையாக இருந்தது. விஷம் மெல்ல உடல் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது. சாமாவும் பயத்தில் மிரண்டு போயிருந்தார். உடல் முழுவதும் சிவந்து போயிருப்பதைப் பார்த்த அருகிலிருந்தவர்களில்  ஒவ்வொருவரும் மருத்துவரிடமும் செல்லவும், விரோபா கோயிலுக்கு (பாம்பு கடித்தவர்களை இக்கோயிலுக்கு  சென்றால், உயிர் பிழைத்து விடுவதாக ஷிர்டி மக்கள் நம்பினர்) செல்ல சொன்ன போதும் சாமா " எனக்கு எல்லாமே பாபாதான். அவரிடமே நான் செல்ல விரும்புகிறேன். ஒருவேளை எனது உயிர் போவதாக இருந்தாலும் அது எனது ஒரே அடைக்கலமான பாபாவின் மசூதியிலேயே போகட்டும் என்று கூறி அழுதபடி பாபா வாழ்ந்து வந்த மசூதிக்கு (துவாரகாமாயி) ஓடிச் சென்று பாபா பாதத்தில் வீழ்ந்து பணிந்தார் (உயிர் பிழைத்தார்) இதற்குப் பெயர் தான் குருபக்தி.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 29, 2016

பாபாவுக்கு சமமானவர் எவரும் இல்லை.எவர் எனக்கு சமமானவர் என்று எவரையும் அரியமாட்டாரோ, எவர் எனக்குப் பின்னரே பசியாறி தாகம் தீர்த்துக்கொள்கிறாரோ, அவரையே நான் எப்பொழுதும் தியானத்தில் வைக்கிறேன்; நான் அவருடைய ஆதீனத்தில் வாழ்கிறேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil


Sunday, August 28, 2016

முழுமையான பக்தி


"சாயி சாயி"என்று எப்போதும் கூறிக் கொண்டிருப்பீர்களானால் நான் உங்களை ஏழு கடலுக்கு அப்பால் எடுத்துச் செல்வேன். இம்மொழிகளை நம்புங்கள். நீங்கள் நிச்சயம் நன்மையடைவீர்கள். வழிபாட்டின் உபசாரங்கள் எட்டோ பதினாறோ எனக்கு தேவையில்லை. எங்கு முழுமையான பக்தி இருக்கிறதோ அங்கு நான் அமர்கிறேன். - ஸ்ரீ சாயி  சத்சரித்திரம் [அத்தியாயம்13]


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, August 27, 2016

ஜோதிட பூர்வமான தடைகளையும் மீறி புத்திரப்பேறு அருளினார்


ஹர்தாவைச்  சேர்ந்த சிந்தே என்பவருக்கு ஏழு புத்திரிகள், ஒரு புத்திரன் கூட இல்லை.1903-ம் ஆண்டில் அவர் கங்காபூருக்குச்  சென்று ஒரு புத்திரனை வேண்டி தத்தரிடம் பிரார்த்தனை செய்து கொண்டார். 12 மாதங்களுக்குள் ஒரு மகன் பிறந்து விட்டால், குழந்தையுடன் தரிசனம் செய்ய கங்காபூருக்கு வருவதாக நேர்ந்து கொண்டார். அவருக்கு 12 மாதங்களில் மகன் பிறந்தான்; ஆனால்  அவர் குழந்தையை எடுத்துக் கொண்டு கங்காபூருக்கு  செல்லவில்லை. 1911-ம்  ஆண்டு நவம்பர் மாதம் அவர் ஷிர்டிக்கு  பாபாவிடம் வந்தார்.
பாபா : என்ன! திமிறு  ஏறி விட்டதா உனக்கு? உன் பிராரப்தத்தின்  படி (விதிப்படி)உனக்கு ஏது ஆண் குழந்தை? நான் இந்த உடலை (தமது உடலைக் காட்டி) கிழித்து உனக்கு ஒரு ஆண் மகவு அளித்தேன்.

பாபாவின் மற்றொரு அடியவரான தாமோதர ராசனே சம்பந்தப்பட்டவரை கூட, பாபா ஜோதிட பூர்வமான தடைகளையும் மீறி புத்திரப்பேறு அருளினார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, August 26, 2016

பத்து நிமிடமாவது பாபாவுக்காக ஒதுக்குங்கள்
ஸ்ரீ சாய் சத்சரித்திர பாராயணம் சித்தத்தை தூய்மைப்படுத்தி ஆன்மீக நல்வாழ்வை அளிக்கும். விரும்பாதவைகளும் இன்னல்களும் விரட்டியடிக்கப்படும். விரும்பினவும் நன்மைகளும் விளையும். பாபாவினுடைய அற்புதமான சக்தியையும் ( நம்பிக்கையுடன் பாராயணம் செய்தால் ) அனுபவிக்கலாம். பக்தியுடன் பாராயணம் செய்வதால், உங்களுடைய அபூர்வமான இச்சைங்களுங்கூடப் பூர்த்திசெய்யப்படும். கடைசியில் நீங்கள் எதையும் வேண்டாதவராக ஆகிவிடுவீர்கள். இவ்வாறாக நீங்கள் எளிதில் கிடைக்காத ஸாயுஜ்ய முக்திநிலையை ( பாபாவுடன் ஒன்றிவிடுதல் ) அடைவீர்கள். அகண்டமான சாந்தியும் திருப்தியும் உங்கள் இதயத்தை நிரப்பும். சாய் பக்தர்கள் தினம் ஒரு அத்தியாமாவது பாராயணம் செய்யவேண்டும். தினமும் குறைந்தது ஒரு பத்து நிமிடமாவது பாபாவுக்காக ஒதுக்கி சாயி நாமஜபம் ( சாயி, சாயி, சாயி என்று சொன்னாலே போதும் ....வேறு விசேஷமான மந்திரங்கள்  தேவையில்லை ) செய்தும் ஒரு அத்தியாயம்  பாராயணம் செய்யுங்கள். நிச்சயம் பாபா உங்கள் அருகிலேயே அமர்ந்து பாராயணத்தை கேட்பார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 25, 2016

செல்வம் என்றுமே நிரந்தரமில்லை


"செல்வம் என்றுமே நிரந்தரமில்லை. சரீரமோ ஒரு நீர்க்குமிழி. மரணம் எப்பொழுதுமே பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறது என்பதை அறிந்து தருமவழியில் நடப்பீராக". - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவால் அருளப்பட்ட அத்தனையும் நன்மைக்கே !

பாபாவால் நமக்கு அருளப்பட்ட அத்தனையும் நிச்சயமாக நன்மைக்காகவே ஆனது என்னும் உறுதியான நம்பிக்கையுடன் பாபா அருளிய யாவற்றையும் மகிழ்ந்து அனுபவிக்...