Friday, October 7, 2016

பயப்படத் தேவையில்லைவும், பகலும் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ எவன் ஒருவன் என்னைப் பற்றி நினைத்து வருகிறானோ, அவன் இனிப்பும் சர்க்கரையும்போல, அலையும் கடலும் போல, கண்ணும் ஒளியும்போல என்னுடம் முழுமையாக இணைகிறான். அப்படிப்பட்டவன் எதற்கும் பயப்படத் தேவையில்லை. - மாண்பு மிகு மகான்கள்.     


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, October 6, 2016

குரு


ஒரு பக்தனுக்கு தனது குருவின் திருவடிவே தியானத்திற்கு மூலமாகவும், குருவின் பாதங்களே அனைத்துப் பூஜைகளுக்கும் உரிய மூலப்பொருளாகவும், குருவின் திருவாய் மொழிகளே அனைத்து மந்திரங்களிலும் சிறந்த மூல மந்திரமாகவும், குருவின் திருவருளே முக்திக்கு மூலமாகவும் விளங்குகிறது. - அக்கல்கோட் ஸ்ரீ சுவாமி சமர்த்தர்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, October 5, 2016


என்னுடையவனான ஒருவனை என்னை விட்டு விலகிச் செல்லும்படி விடமாட்டேன் - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, October 4, 2016

இடைவிடாத சாயி நாமஜெபம் " சமாதியிலிருந்தும் ஊக்கத்துடனும் சுறுசுறுப்புடனும் இருப்பேன். மஹாசமாதிக்குப் பின்னரும், நீ நினைத்த மாத்திரத்தில், நீ எங்கிருந்தாலும், நான் உன்னுடன் இருப்பேன். நேசத்துடன் ஒரு பக்தன் என்னை அழைத்த மாத்திரத்தில் நான் தோன்றுவேன்.  பயணம் செய்ய புகைவண்டி எதுவும் தேவையில்லை".

சாயிபாபா உடலோடு வாழ்ந்த போது பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்தார். ஆனால் மஹாசமாதி அடைந்த பிறகும், அதே போன்ற பாதுகாப்பு கிடைக்குமா என சந்தேகப்படுபவர்கள் பாபாவை சரியாக புரிந்து கொள்ளாத ஜனங்களே. அப்படி சந்தேகப்படுவது பாபாவிடமும் அவரது திருமொழிகளிலும் நம்பிக்கையின்மையை காட்டுகிறது. சாயியிடம் மனதை ஒருமைப் படுத்தவேண்டும் என்ற ஆர்வம் பக்தனிடம் இருந்தால் போதும். இப்போதும் சாயி பேசுவதை கேட்கலாம், அவருடன் பழகலாம், இதற்கு அசாதாரணமான சமத்காரங்கள் தேவையில்லை. இடைவிடாத சாயி நாமஜெபம் ஒன்றே போதும். இதற்கு யாருடைய உதவியும் தேவையில்லை. இது விசுவாசம் பற்றிய விஷயமே ஆகும். விசுவாசம் திடமாக இருந்தால் பிரதிபலன் விரைவில் கிட்டும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil


Monday, October 3, 2016

எங்கும் இருக்கிறேன்


நான் எங்கும் இருக்கிறேன் - நீரிலும், நிலத்திலும், காய்ந்துபோன கொம்பிலும், மனிதர்களிடையேயும், வனத்திலும், இந்த தேசத்திலும், வெளிதேசங்களிலும் எங்கும் இருக்கிறேன். நான் எந்த தேசத்தின் எல்லைகளுக்கும் உட்பட்டவன் அல்லன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, October 2, 2016

இவற்றிற்காக நீர் எம்மிடம் வரவேண்டியதில்லை


நானா(பாபாவின் பக்தர்); பாபா, தாங்கள் எல்லாவற்றையும் அறிவீர்கள். தங்களுடைய பாதுகாப்பிலிருந்தும் கூடவா எங்களுக்கு இந்த துக்கங்கள் நேரவேண்டும்? [உறவினர்களின் பிரிவு,இழப்பு போன்றவை]

பாபா: உமக்கு நெருக்கமானவர்களின் நலனை எண்ணிக் கொண்டு அதன் பொருட்டு நீர் இங்கு வருகிறீரென்றால், அது தவறு. இவற்றிற்காக நீர் எம்மிடம் வரவேண்டியதில்லை. இவை என் சக்திக்கு உட்பட்டவை அல்ல.
இவை(குழந்தை பிறப்பது, உறவினர் இறப்பது போன்றவை) ஊழ்வினையைப் பொருத்தது. தேவாதி தேவனானவரும், உலகையே படைத்தவருமான, பரமேச்வரனால் கூட இவற்றை மாற்றிவிட முடியாது. அவரால் சூரியனையோ சந்திரனையோ நோக்கி, 'வழக்கமாக உதிக்கும் இடத்திலிருந்து இரண்டு கஜம் தள்ளி உதிப்பாய்' எனக் கூற இயலுமா?இயலாது, ஏனெனில் அவரால் முடியாதது மட்டுமின்றி, அவர் அப்படி செய்யவும் மாட்டார். அது  ஒழுங்கின்மை, குழப்பம் விளைவிக்கும்.

நானா:அப்படி என்றால்,ஒருவரிடம் "உனக்கு குழந்தை பிறக்கும்" என தாங்கள் கூறுகிறீர்கள், அவருக்கு குழந்தை பிறக்கிறது. மற்றொருவரிடம் "உனக்கு வேலை கிடைக்கும்" என் சொல்லுகிறீர்கள், அவருக்கு வேலை
கிடைக்கிறது. இவை எல்லாம் தங்களுடைய அற்புதங்கள் அல்லவா?

பாபா: இல்லை, நானா. நான் எந்த சமத்காரமும் செய்வதில்லை. கிராமத்து ஜோதிடர்கள் சில தினங்கள் முன்னதாகவே பின்னர் நடக்கப் போவதைக் கூறுகிறார்கள். அவற்றுள் சில பலிக்கின்றன. நான் அவர்களை விட எதிர்காலத்தை தீர்க்கமாகப் பார்க்கிறேன். நான் கூறுவதும் நடக்கிறது.என் வழியும் ஒருவகை ஜோதிடத்தைப் போன்றதே. உங்களுக்கெல்லாம் இது புரிவதில்லை. உங்களுக்கு.என் சொற்கள் அற்புதங்களாகத் தோன்றுகின்றன; ஏனெனில் நீங்கள் எதிர்காலத்தை அறியமாட்டீர்கள். ஆகையால் நிகழ்ச்சிகளை  நீங்கள் எமது அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தியாக முடிவு செய்து, எம்மிடம் மதிப்பும் மரியாதையும் காட்டுகிறீர்கள். பதிலுக்கு நான் உங்கள் பக்தியை இறைவனிடம் திருப்பி உங்களுக்கு நலம் உண்டாகச் செய்கிறேன்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, October 1, 2016

பாபாவை அணுக விசேஷமான வழி முறைகள்

            பாபாவை அணுக விசேஷமான வழி முறைகள் 


பக்தன் பாபாவை அணுகவேண்டும் என மனப் பூர்வமாக விரும்பட்டும். உடனேயே அணுகுமுறை துவங்கிவிட்டது. அக்கணத்திலிருந்தே அவர்கள் நிலையில் முன்னேற்றம் ஆரம்பமாகிவிட்டது. அவர்கள் மேலும் மேலும் உற்சாகமடைகின்றனர், மேன்மேலும் பலனடைகின்றனர். பக்தர்கள்பாபாவை அணுக விசேஷமான வழி முறைகள் ஏதுமில்லை. பக்தர்கள் தங்களிடம் உள்ள பாபாவின் படத்தை பார்த்து தினமும் பாபாவின் திருவுருவை  மனதில் கொண்டு வரட்டும். கவிஞனின் கற்பனைகள் எல்லாவற்றையும் விட திறன்படைத்த பாபாவின் அத்புத லீலைகளை படிக்கட்டும். பாபாவின் குணாதிசயங்களை நினைவுற பாபாவின் அஷ்டோத்திர சத நாமாவளி (108 நாமாக்கள்) மிக்க சக்தி வாய்ந்த சாதனம். ஆர்வமுள்ள பக்தர்கள் ஒன்று கூடி செய்யும் பூஜைகள், பஜனைகள் ஆகியவற்றில் பங்கு கொள்ளட்டும். தான் காணும் ஒவ்வொரு மனிதன், ஜந்து ஆகியவற்றின் உள்ளே பாபா உறைகிறார் என்ற நோக்குடன், பாபாவை மகிழ்விக்கும் பொருட்டு ஒவ்வொருவரும் மனித சகத்திற்கும் ஜீவராசிகளுக்கும் அன்புடன் சேவை செய்யட்டும். ஆர்வமுள்ள சாதகனுக்கு பாபாவே மேற்கொண்டு உள்ள வழிகளைக் காட்டுவார். ஒவ்வொரு உண்மையான பக்தனுக்கும் பலவித வழிகளில் பாபாவுடன் மேற்கொண்டு தொடர்பு எப்படி வைத்துக் கொள்வது, அதை எப்படி வளர்த்துகொள்வது என்பது பற்றி பாபாவே உணர்த்துவார்.-பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி. 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவால் அருளப்பட்ட அத்தனையும் நன்மைக்கே !

பாபாவால் நமக்கு அருளப்பட்ட அத்தனையும் நிச்சயமாக நன்மைக்காகவே ஆனது என்னும் உறுதியான நம்பிக்கையுடன் பாபா அருளிய யாவற்றையும் மகிழ்ந்து அனுபவிக்...