Thursday, December 8, 2016

பாபா வழிநடத்திச் செல்கிறார்'தான் ' என்ற அகம்பாவத்தை விடுத்து, கருணை, மன்னிக்கும் தன்மை, சேவை மனப்பான்மை, அஹிம்சை போன்ற தெய்வீக குணங்களை ஒருவர் தமக்குள்  கொண்டுவர முடிந்தால் பாபா அவருடனேயே இருந்து வழிநடத்திச் செல்கிறார். பாபாவிடம் முழுமையாக சரணடைந்தவர்கள் பாபாவிற்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தார்கள் என்பது சாயி சத்சரித்திரத்தை படிக்கும்போது தெளிவாகத் தெரிகிறது. பூஜை, புனஸ்காரங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் இவையாவும் நம் மனதை நாம் தூய்மைப் படுத்துவதற்கான வழிமுறைகள் மட்டுமே. இருப்பினும், உள்மனது பரிசுத்தமானதாக இல்லையென்றால், எவ்வளவு தான் வழிபாடுகள் செய்தபோதிலும் சாயி பக்தர் என்ற தகுதியை அடைய முடியாது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 7, 2016

தைரியமாக இரு"ஏன் பயப்படுகிறாய்? தைரியமாக இரு. என்னை விரும்பி, என்னையே நம்பி இருக்கும் பக்தர்களின் மீது எப்போதும் என் கவனமும், கண்காணிப்பும் இருந்துகொண்டே இருக்கும். அச்சத்தைத் தவிர்" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.(பாபா தனது பக்தரான கபர்டேவிடம் கொடுத்த வாக்குறுதி இவை)

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, December 5, 2016

பாபா பார்த்துக்கொள்வார்.


நமக்கு எது தேவை, எது நல்லது என்பது பாபாவுக்குத் தெரியாதா? ஆகவே நமக்கு எதை அளிக்கவேண்டும், எதை அளிக்கக்கூடாது என்பதை பாபாவே தீர்மானித்துக் கொள்ளட்டுமே !. பாபா பக்தர்களின் ஒவ்வொரு செயலும், வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியும், பாபாவாலேயே கவனிக்கப்பட்டும், உருவாக்கப்பட்டும் வருகிறது... பாபா தன்னிடம்  பூரண சரணாகதி அடைந்த பக்தர்களிடம், "உம்முடைய எல்லா பொறுப்புகளும் என்னுடையவை. உம்முடைய எல்லா காரியங்களையும் நானே முன் நின்று நடத்துகிறேன்" என்று கூறியுள்ளார். பிரார்த்தனை நல்லதே..அது பக்தியை அதிகரிக்கச் செய்யும். ஆனால் நடந்த சம்பவங்களை எடுத்துக் கொண்டால், தன்  பக்தனுக்கு எது நன்மையோ, அதை மட்டுமே பாபா அளித்துள்ளார். பிரார்த்தனைகளை விடுத்து பாபாவிடம் பூரண சரணாகதி அடையுங்கள். மற்றவற்றை பாபா பார்த்துக்கொள்வார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, December 4, 2016

துவாரகாமாயிஸ்ரீ சாய்பாபா ஷீரடிக்கு வந்த ஆரம்ப காலத்தில், அவருக்குப் பின்புறம் நீண்டு தொங்கும் முடி இருந்தது. பச்சை நிறத்தில் நீண்ட அங்கியும், தலையில் முதலில் ஒரு குல்லாயும், அதன்மேல் காவி நிறத்தில் தொப்பியும் அணிந்திருந்தார்.  அவர்தம் கையில் ஒரு தண்டத்தையும் புகைக்குழாய், தீப்பெட்டி ஆகியவற்றையும் வைத்திருப்பார். அவர் பிச்சையெடுத்து உண்டு வந்தார்.
ஷீரடிக்கு வந்த நாலைந்து மாதங்களுக்குப்பின், பாபா வெள்ளை அங்கியும், வெண்மையான தலை உடைகளையும் அணியத்தொடங்கினார். இரண்டாவதுமுறை ஷீரடிக்கு வந்த பிறகும் கூட, பாபா சிறிதுகாலம் வேப்பமரத்தடியிலேயே வாழ்ந்ததாகத் தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் காரணமாகத்தான், அவர் தமது வாசத்தைக் கிராமத்திலுள்ள ஒரு பழைய பாழடைந்த மசூதிக்கு மாற்றிக் கொண்டார்.

மசூதிக்கு ( துவாரகாமாயி ) மாறியது.
ஒருமுறை ஷீரடியிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் அடைமழை பெய்தது. அதன் பெரும்பகுதி வெள்ளக் காடாகிவிட்டது. நீண்ட நேரத்துக்குப்பின் பாபாவின் ஆரம்பகால பக்தர்கள் சிலர், வீடற்ற பக்கீரின் ஞாபகம் வந்தவர்களாய், அவர் இந்த மலையிலிருந்து எங்கு ஒதிங்கியுள்ளார் என்று காண விரும்பினார்கள். மஹல்சபதியும் மற்றும் சிலரும் வேப்ப மரத்துக்கு விரைந்தனர். அங்கே சாயிபாபா அதே மரத்தடியில் பாதி சாய்ந்தவராகக் சமாதி நிலையில் இருப்பதைக் கண்டு செயலற்றுப் போயினர். அவர் மேல் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாவிதமான குப்பைகூளங்களும் அவர் உடல்மேல் சேர்ந்திருந்தன. அவரை அந்த நிலையிலிருந்து எழுப்ப அவர்களுக்குத் துணிவிருக்கவில்லை. அவர்கள் காத்துக் காத்துப் பார்த்துப் பின் சற்று நேரத்துக்குப்பின் வரலாமென்றெண்ணித் திரும்பச் சென்றனர். சில மணி நேரத்துக்குப் பின், தண்ணீர் முழுதும் வடிந்தபின் அவர்கள் வந்து பார்த்தபோது, அவர் இன்னும் ஈரத் தரையிலேயே கிடப்பதைக் கண்டனர். அவரது உடலும் முகமும் முற்றிலும் மண்ணால் மூடப்பட்டிருந்தன. தமக்குத் துன்பங்கள் வந்துற்றபோது தமது ஒரே பாதுகாப்பாளராகவும், வழிகாட்டியாகவும் இருந்த அவரை ஒரேயடியாகக் கவனிக்காமல் இருந்துவிட்டதைக் குறித்து, அவர்கள் குற்ற உணர்வு அடைந்தனர். பின்னர் அவர் சாதாரண உணர்வு நிலைக்குத் திரும்பியவுடன் அந்த பக்தர்கள், அவரைக் கிராமத்திலுள்ள ஒரு சிறிய பழுதடைந்த மன்கட்டிடமான மசூதியில் தங்குமாறு செய்தனர். சாயிபாபா ஒரு முஸ்லீம் ஆகையால், அவர் ஜானகிதாஸ், தேவிதாஸ் போன்ற மற்ற மகான்களைப் போல் இந்துக்களின் கோவில்களில் தங்குவது சரியல்ல என்று கிராமத்தின் இந்துக்கள் கருதியே இவ்வாறு செய்திருப்பார் போலும். அப்போதிலிருந்து அவர் மசூதியில் சிறிது நேரமும், வெப்ப மரத்தடியில் சிறிது நேரமும் இருப்பார். பின் சிறிது காலத்தில் அவர் மசூதியையே தமது முக்கிய, முழுநேர இருப்பிடமாக்கிக் கொண்டார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, December 3, 2016

செயல்கள் அனைத்தும் வெற்றியடையும்.


பாபாவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர்  தூயவரானாலும் சரி, கபடரானாலும் சரி, கடைசியில் கரையேற்றப்படுவார். செயல் புரியும் கடமை மாத்திரம் என்னுடையது; பலனை அளிப்பவர் 'எல்லாம் வல்ல சாயிபாபா' என்னும் திடமான நம்பிக்கை எவரிடம் உள்ளதோ, அவருடைய செயல்கள் அனைத்தும் வெற்றியடையும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, December 2, 2016

வேண்டுதல்களும் துயரங்களுக்கும் பாபா செவிசாய்க்கிறார்


பாபாவை, குறிப்பிட்ட ஆலயத்தில் மட்டுமே மிகவும் விசேஷமான சக்திகள் கொண்டவராக உருவகப்படுத்துவது, மேலும் பக்தர்களின் பிரார்த்தனைகளை பாபாவிடம் எடுத்துக்கூறும் பிரதிநிதிகள் போன்ற மனப்போக்கில்  பலர் ஈடுபடுகிறார்கள். உண்மை அதுவல்ல, எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் எல்லோருடைய வேண்டுதல்களும், துயரங்களுக்கும் பாபா செவிசாய்க்கிறார். பக்தர்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, பாபா தமது பக்தர்களை தமது சொந்தக் குழந்தைகள், சிசுக்கள் போலவே நேசித்தார், நேசித்தும் வருகிறார்.
ஒருசமயம், பாபா  ஒரு குழந்தையைச் சுட்டிக் காட்டி, ' இக் குழந்தை தூங்கும் போது நாம் அருகிலிருக்க வேண்டும். விழித்திருந்து, கவனித்து, சிரமம் ஏற்கவேண்டும்' எனக் கூறினார். பக்தர்களின்பால் பாபாவின் அக்கறை அத்தகையது. எப்போதுமே பாபா, தமது பக்தர்களின் பின்னாலேயே இருந்து பக்தர்களை தாங்கி வருகிறார். இதுவே உண்மை. இதில் முழுநம்பிக்கை கொள்ளுங்கள். இந்த உண்மையை கிரகித்து கொள்ளும்போது உங்களது மனதில் அச்சம், கவலை எதுவுமில்லாமல் போகும்.
  
  " நான் எங்கும் இருக்கிறேன் - நீரிலும், நிலத்திலும், காய்ந்துபோன    கொம்பிலும், மனிதர்களிடையேயும், வனத்திலும், இந்த தேசத்திலும்,  வெளிதேசங்களிலும் எங்கும் இருக்கிறேன். நான் எந்த தேசத்தின்  எல்லைகளுக்கும் உட்பட்டவன் அல்லன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா."  http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, December 1, 2016

வெளிப்படையானவைஓர் பக்தன் எவ்வளவு தூரம் நெஞ்சுரங் கொண்டவனாகவும் தீர்மானமுள்ளவனாகவும் இருக்கிறானோ, அங்ஙனமே பாபாவின் உடனடியான பிரதிச் செயலும் இருக்கிறது. அவரது முறை திரையிடப்பட்டதோ இரகசியமானதோ அல்ல. ஆனால் முற்றிலும் வெளிப்படையானவை. - ஸ்ரீ சாய் சத்சரித்திரம். 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நானே உங்களைக் காப்பாற்றி, கவனித்துக் கொள்கிறேன் !

உங்களுக்கு நேரிடும் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுங்கள்!   நானே தீர்ப்பவன் ! நானே காப்பவன் ! என்னையே எப்போதும் நினையுங்கள். நானே உங்களைக் காப...