Wednesday, June 7, 2017

இறைவனின் அவதாரமே


பாபாவை பக்தியுடன் வணங்கும் பலரும், பாபாவை குரு என்ற ஸ்தானத்தில் மட்டுமே வைத்திருக்கிறார்கள். பாபாவே  இறைவன் என்று ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. குரு என்பவர் தெய்வத்துக்கு சமமானவர். எனவே பாபாவிடம் தெய்வீகத்தன்மை இருக்கிறது என்பது பலரது நம்பிக்கை. உண்மையில் இறைவனின் பல அவதாரங்களில் பாபாவும் ஒருவரே.
எந்த சூழ்நிலையிலும் மாறா நம்பிக்கையோடு பாபாவை நீங்கள் வணங்கினால், பாபா  தாம் இறைவனின் ஒரு அவதாரமே என்று வெளிப்படுத்துவார்.

ஸ்ரீ  சாயி எப்போதும் ஒரு சாதாரண பக்கிரி போலவும், இறைவனின் சேவகர் போலவுமே நடந்து கொண்டார். ஆனால், பல சமயங்களில், அவர் பேரருளைப் பெற யார் தகுதியானவர்களோ, அம்மாதிரியான ஒரு சில அடியவர்களுக்கு மட்டுமே தான் இறைவனே என்பதை வெளிபடுத்திக் கொண்டார். பாபா ஒரு அவதாரம் என்பதற்கான குணாதிசயங்கள், 'சர்வ வல்லமை', 'சர்வ வியாபித்துவம்' ( எங்கும் நிறைதன்மை ), 'சர்வ ஞானம்' (எல்லாம் அறியும் தன்மை ) ஆகியவைகளாகும். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் அனைத்தின் மீதும் அவருக்கு முழு கட்டுப்பாடு இருந்தது.

ஸ்ரீ சாயிநாத்தின்  வாழ்க்கை வரலாற்றைக் கூறும் புத்தகமான 'ஸ்ரீ சாய் சத் சரித்திரா' வில் விவரித்துள்ளபடி அவர் மழையையும், நெருப்பையும் எப்படி தன் கட்டுக்குள் அடக்கி ஆண்டார் என்பதையும் நாம் அறிவோம். எனவே சந்தேகமே வேண்டாம், ஸ்ரீ சாய்பாபா இறைவனின் அவதாரமே.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 6, 2017

ஷிர்டி சாய்பாபா


பாபா எப்போதும் தன் பக்தர்களுடனேயே இருக்கிறார்( நாயோ, பன்றியோ, பூனையோ, உங்களிடம் பிச்சை கேட்பவராகவோ, உங்கள் கற்பனைக்கும் எட்டாத ஒரு உருவமாகவோ அல்லது கண்ணுக்கு தெரியாமல் சூக்ஷம ரூபமாகவோ). இதை உணர்ந்த பக்தன் மிகவும் அதிர்ஷ்டசாலி என பாபாவே தெரிவித்துள்ளார். பாபா, உண்மையில் மும்மூர்த்தி (பிரம்மா,விஷ்ணு,சிவன்) அவதாரம். இந்த உண்மையை உணர்ந்த பக்தனின் பாக்கியத்தை என்னவென்று கூறுவது என்று பாபா குறிப்பிட்டுள்ளார். பிரேமை பொங்கும் பஜனையாலும், தொடர் நாமஜபத்தாலும், பாபாவின் இருப்பை பக்தர்களால் உணரமுடியும். நான் இந்த பெளதீக உடலுடன் ஷிரிடியில் மாத்திரம் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் எங்கும் வியாபித்துள்ளேன் என்று பாபா தெளிவாக கூறியுள்ளார். பாபா தன் பக்தர்களை எல்லா திசைகளிலும் சூழ்ந்து நின்று பாதுகாக்கிறார். வேறெதிலும் நாட்டமில்லாமல், பாபாவிடம் மட்டுமே தீவிர நம்பிக்கை ( சரணாகதி ) கொண்ட பக்தனின் காரியங்கள் யாவும் பாபாவால் பொம்மலாட்டத்தை போல் முன் நின்று நடத்த படுகின்றன. அத்தகைய பக்தர்கள் எதை பற்றியும் கவலை கொள்ள தேவையில்லை. லௌகீக தேவைகளுக்காகவே (வேலை, திருமணம், சம்பள உயர்வு குழந்தை பேறு போன்றவை )  பாபாவிடம்  செல்கிறோம். சில சமயங்களில் அது போன்ற வேண்டுதல்கள் நடக்காமல் போகலாம். உண்மையில் பாபா தன் பக்தர்களுக்கு எது நன்மையோ அதை மட்டுமே அளிப்பார். இது போன்ற சமயங்களில் மிகவும் நம்பிக்கையோடு பொறுமை காத்து எல்லாம் பாபாவின் விருப்பம் என்று விட்டுவிடுங்கள்.  அமைதியாக என்னிடம் இரு, மற்றவற்றை நான் பார்த்து கொள்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். நாம் கோரிக்கை வைத்தாலும், வைக்காவிட்டாலும், பாபா தன் பக்தர்களுக்கு எது நன்மை என்பதை நன்கு அறிவார்.                                                                
                                                                                              - தொடரும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 5, 2017

வேறு வழிபாடு வேண்டாம்



உங்கள் குருவிடம் அசைக்க முடியாத நம்பிக்கை, ஆழமான அன்பு கொள்ளுங்கள். இதைத் தவிர வேறு வழிபாடு வேண்டாம். குருவே கடவுள் என்பதில் உறுதியாக நில்லுங்கள். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 4, 2017

பாபா நமது அருகிலேயே இருக்கிறார்


பாபா எப்போதுமே வாழ்கின்றார். ஏனெனில் பிறப்பு இறப்பு என்ற இருமையையும் கடந்தவர் அவர். எவனொருவன் ஒருமுறை முழுமனத்துடன் அவரை நேசிக்கிறானோ, அவன் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான். நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் எடுத்துக் கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனைத் திருப்திப்படுத்துகிறார். - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 3, 2017

குழந்தை பாக்கியம்


பக்தர்களின் நலம் கருதி பாபா நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்று அவர் பக்தர்கள் வம்சம் விருத்தியாக அருளியது. ஏதாவது ஒரு பக்தைக்கு பிள்ளைப் பேறு  உண்டாகும் என் பாபா ஆசி வழங்கினால், அனேகமாக அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்குள் பாபாவின் வாக்கின்படி அப்பெண்மணி ஒரு ஆண் அல்லது பெண் குழந்தை பெறுவது உறுதி. ஜாதகத்தின் படி புத்திர ஸ்தானத்தில் ஒரு பாபி அல்லது பாபகிரகம் இருப்பதால் இப்பிறவியில் சந்ததி உண்டாக வாய்ப்பில்லை என சோதிடர்கள் கூறியும், பாபாவின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்ற பக்தர்கள் ஏராளம். பிராரப்த கர்மா அல்லது ஊழ்வினையின் நியதிகளை மாற்றி பாபா இன்றும் தனது பக்தர்களுக்கு குழந்தை செல்வம் அளித்துவருகிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 2, 2017

பாபா உன்னுடன் இருப்பார்.

சிருஷ்டியின் எந்த மூலைக்கு  வேண்டுமானாலும் செல்லுங்கள்.கிட்டவோ, எட்டவோ எழுகடல் தாண்டியோ செல்லுங்கள். எனது பக்தர்களின்மேல் உண்டான பிரேமை எல்லை அறியாதது. ஆகவே, கவலையின்றி எங்கும் செல்லுங்கள். நீங்கள் செல்லும் இடத்திற்கு உங்களுக்கு முன்பாகவே சென்று நான் அங்கு இருப்பேன். -ஸ்ரீ ஷீரடி சாய்பாபா. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 1, 2017

இறந்தவளைப் பிழைப்பித்தது



D.R. ஜோஷி தேவ்காங்கர் என்பவரது மகளான திருமதி மலன்பாய் என்பவள் காசநோயால் துன்புற்றுக் கொண்டிருந்தால். மருந்துகள் பலனளிக்கத் தவறவே அவளை பாபாவிடம் அழைத்துச்சென்றனர். பாபா அவளை ஒரு கம்பளியின் மேல் படுக்கும்படியும், நீரைத் தவிர, வேறெதுவும் உண்ணாமல்   இருக்கும்படியும் கூறினார். அவரது அறிவுரைப்படியே விழிப்புடன் நடந்து வந்த அப்பெண், ஒரு வார காலத்துக்குப்பின்  ஒரு நாள் விடிகாலை இறந்து போனால்.  பாபா அப்போது சாவடியில் இருந்தார். ஷீரடி வரலாற்றிலேயே பாபா முதன்முறையாக, பாபா காலை எட்டு மணி ஆகியும் சாவடியை விட்டு நகரவில்லை. அந்தப் பெண்ணின் பெற்றோர் அந்திமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது, மலன்பாய் மூச்சுவிடுவதைப் போலத் தோன்றியது. அவள் கண்களை விழித்துப்பார்த்தாள். பின்னர் தனது அனுபவத்தை விவரித்தால் :" ஒரு கரும் மனிதன் என்னைத் தூக்கிச் சென்றான். பெரும்பீதியுற்ற நான், பாபாவின் உதவியை நாடி கத்தினேன்.பாபா அங்கே தோன்றித் தமது தடியை எடுத்து அவனை அடித்து என்னை அவன் கைகளிலிருந்து பிடுங்கிச் சாவடிக்குத் தூக்கி வந்தார் " என்றாள். சாவடியைப் பார்த்திராத அவள், அதைப் பற்றி மிகச்சரியாக விவரித்தால். அவள் உயிர் பிழைத்த அக்கணமே பாபா சாவடியை விட்டுப் புறப்பட்டு, மோசமான வசவுகளை உரத்த குரலில் கூறிக்கொண்டும், தமது குச்சியால் பூமியை அடித்துக்கொண்டும், அந்தப் பெண் படுத்துக் கொண்டிருந்த தீக்ஷிதரின் வாடாவை அடைந்தார். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவால் அருளப்பட்ட அத்தனையும் நன்மைக்கே !

பாபாவால் நமக்கு அருளப்பட்ட அத்தனையும் நிச்சயமாக நன்மைக்காகவே ஆனது என்னும் உறுதியான நம்பிக்கையுடன் பாபா அருளிய யாவற்றையும் மகிழ்ந்து அனுபவிக்...