Monday, January 1, 2018

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Related image

                                   "நானிருக்க பயமேன்" 

                   சாய் பக்தர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, December 31, 2017

நாயும் பாபாவே

Image may contain: 1 person, smiling

பாபா ஷீரடியில் ஐந்து வீடுகளிலிருந்து தம் உணவை பிச்சை எடுத்தார். அதைக் கொண்டு வந்து மசூதியில் உண்பார். ஷீரடியில் அதிகமாகத் தங்கிவந்த திருமதி ஜி. எஸ். கபர்டே என்னும் பெண்மணி, பாபாவுக்குத் தினமும் மசூதியில் உணவை நைவேத்தியமாக அளித்து வந்தாள்.  ஒருமுறை பாபாவைத் தன் விடுதிக்குச் சாப்பிட வரும்படி அழைத்தாள். சிறுது காலம் இவ்வாறே தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவரை அழைத்தாள். ஒருநாள் பாபா, அவளது வீட்டிற்கு வருவதாக உறுதியளித்தார்; ஆனால் வரவில்லை. மற்றொரு நாளும் அவள் பாபாவை அழைத்தபோது, அவர் வருவதாக உறுதி அளித்தார்.
அன்றைய தினம் அவள் விதவிதமான பதார்த்தங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும்போது, அந்த வாசனையால் தூண்டப்பட்ட ஒரு நாய் அங்கு வந்தது. பாபாவுக்காகத் தூய்மையாகத் தயாரிக்கும் பண்டங்களை அது தூய்மைகெடச் செய்து விடுமோ என்று திருமதி கபர்டே பயந்தாள். அதை விரட்டுவதற்குக் கைக்கு எளிதாக எதுவும் கிடைக்காமற் போகவே, அடுப்பிலிருந்து எரிந்து கொண்டிருக்கும் விறகு ஒன்றை எடுத்து நாயின் மேல் ஏறிய ,அது ஓடிவிட்டது. அன்றும்கூடப் பாபா வரவில்லை. எனவே அவள், நைவேத்தியத்தை மசூதிக்கு எடுத்துச் சென்றாள். அவளைப் பார்த்தவுடன், பாபா  " நான் உன் வீட்டிற்க்கு வந்த போது, எரிந்து கொண்டிருக்கும் விறகுக் கட்டையை என்மேல் எறிந்தாய் " என்றார்.திருமதி கபர்டே அவர் கூறியதன் பொருளை உணர்ந்து, தனது அறியாமைக்காக வருந்தினாள்.



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, December 30, 2017

உதி விதியை மாற்றும்


துகாராம் பார்க்கு, இவர் ஷீரடியில் விவசாயம் செய்துவந்தார். 1912-ல்  ஷீரடியிலிருந்து இருபது கி.மீ. தொலைவில் கரஞ்சிகாவோன் என்ற கிராமத்திற்குச் சென்று வேலை செய்து சம்பாதிக்கப் புறப்பட்டு விட்டார்.
அப்போதுதான் கோதாவரியைச் சுற்றியுள்ள வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்துவிட்டார்கள். அதனால் வேலை கிடைக்கும் என புறப்பட்டார்.

கோபர்கான்  சாலையில் செல்லும்போது பாபா அவரது கழுத்தில் தன்  கையைப் போட்டு, 'போகதே' என்றார். ஆனால் துகாராம்  பாபாவின் வார்த்தையை கண்டுகொள்ளவில்லை. கரஞ்சிகாவோன் வந்தார். வந்த மறுநாளே அவருக்கு காய்ச்சல் வந்தது.காய்ச்சல் நிற்கவே இல்லை.

தன் சாப்பாட்டிற்காக சம்பாதிக்க வந்தவர், தற்போது சொந்தகாரர்களை சார்ந்திருக்க வேண்டி வந்தது. பதினைந்து நாட்கள் கழித்து ஷீரடிக்கு திரும்பிவிட  நினைத்தார்.காய்ச்சல் நிற்கவில்லை. நாற்பத்தைந்து நாட்கள் தொடர்ந்து, உடனே தன் அம்மாவிடம் சொல்லி பாபாவின் உதியை  அனுப்பச் சொன்னார். உதியை  இட்டுக் கொண்ட மறுநாளே காய்ச்சல் முற்றிலும் நின்றுவிட்டது. தினமும் குளித்து பின் உதியை நெற்றியில் இட்டுக்கொண்டு, கொஞ்சம் நீரில் கலந்து சாப்பிட்டால் மன உடல் நோய் நிவாரணம் தரும்.



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, December 29, 2017

பாபா உங்கள் வீட்டில் வாசம் செய்கிறார்.

Image may contain: 1 person, smiling

சாய்பாபா,  தாம் தமது கல்லறைக்குள்ளிருந்தும் கூடச் செயல் புரிவார்  என்று, நமக்கு உறுதியளித்திருந்தார். பகவான் ரமண மஹரிஷி கூறியபடி, ஆத்மானுபூதியடைந்த  மஹானான  ஒரு சத்குருவிடம் கொள்ளும் தொடர்பு, அவரது பூத உடல் மறைந்த பின்னும் தொடர்கிறது. இன்று, இந்நாட்டில் சாயிபாபா பக்தி இவ்வளுவு தூரம் பரவி இருக்கிறதென்றால், அதற்குப் பேசியும் நடமாடியும் வரும் அவரது கல்லறையின் செயலே காரணம். 


பாபாவின் பக்தர் பந்காராவின் அனுபவம்.

திரு. பங்காரா என்ற டெல்லிவாசி, எல்லா மகான்களிடமும் பக்தி செலுத்தும் பண்பைப் பெற்றிருந்தார். ஆனால் மிகவும் பழைய பழக்க வழக்கங்களில் ஊறிய அவரது மனைவிக்கு அத்தகைய நம்பிக்கை இல்லை. 1956ஆம் ஆண்டு அவருக்குச் சாய்பாபாவின் படமுள்ள ஒரு காலண்டர் கிடைத்தது. பாபாவின் மேல் விசேஷ பக்தி என்று எதுவும் இல்லாமல், அதை அவர்கள் தங்கள் படுக்கை அறையில் மாட்டி வைத்தனர். ஒருநாள் அவர் படுக்கை அறையிலிருந்து வெளியே வரும்போது, காலண்டரில் இருந்த மகானை வணங்கி, அவரது பாதங்களைத் தொடும்படி திடீரென்று ஒரு உந்துதல் ஏற்பட்டது. அதைப்பற்றி தம் மனைவியிடம் தெரிவித்தால், வீணாக விவாதம் வளரும் என்று அஞ்சியவராக, அவர் அதைத் தம் மனைவியிடம் தெரிவிக்கவில்லை. மறுநாள் காலை, அந்தப் படத்திற்கு மாலை அணிவிக்கப் பட்டிருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தார். அவரது மனைவி, தான் வீட்டில் இருந்த படங்களை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, படுக்கை அறையிலிருந்து ஒரு மர்மமான குரல், "குழந்தாய், எனக்குத்  தவறாமல் மாலை அணிவிப்பாய், உனக்கு நன்மை உண்டாகும் " என்று கூறுவதைக் கேட்டதாகவும் , இருமுறை இச்சொற்களைக் கேட்ட அவள், தன்னை அறியாமலேயே, அதன்படி செய்ததாகவும் கூறினாள். திரு.பந்காராவின் நண்பர் ஒருவர், அவரது அனுபவங்களைக் கேட்டு, பாபாவின் படத்துக்குச் சட்டம் (FRAME) இட்டு, ஒரு வியாழக்கிழமையன்று, அவர்களது பூஜையறையில் வைத்துக் கொள்ளும்படி கூறினார். அவர் அவ்வாறே செய்ய, அவரது மனைவி அதற்கு நாள்தோறும் மாலையிடுவது வழக்கமாயிற்று.
                                ஒரு நாள் பாபாவின் படத்திலிருந்து, அவளது ஆசை என்ன என்று கேட்கும் குரலை அவள் கேட்டாள். தன்  கணவன் நலமாயிருக்க வேண்டும் என்ற தன் முதல் ஆசையையும், பின்னர் தனக்கு ஒரு மகன் வேண்டும் என்ற இரண்டாவது ஆசையையும் தெரியபடுத்தினாள். சாயியின் பூஜை தொடங்கிய ஒரு வாரத்தில் வீட்டின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் கண்டது.  திரு.பந்காராவிற்கு ஊதிய உயர்வும் கிடைத்தது. 1957ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்  திரு.பந்காராவுக்கு ஒரு மகன் பிறந்தான்.  
 பங்காரா குடும்பத்தினருக்கு எந்தவிதப் பிரச்சினை ஏற்பட்டாலும், அவர்கள் பாபாவிடம் பிரார்த்தனை செய்தவுடன்,பொருத்தமான தீர்வு அவர்கள் மனதில் உதிக்கும். பாபாவின் அருளால் அவர்கள் எண்ணியதெல்லாம் நிறைவேறி வந்தது.
எங்கெல்லாம் பாபாவின் படம் இருக்கிறதோ, அங்கே பாபா வாசம் செய்கிறார்.
பாபாவை நேரிலே தரிசிப்பதற்கும் அவரின் படத்தை தரிசிப்பதற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. 



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, December 28, 2017

சாய்பாபாவின் தோற்றமும் நடையுடை பாவனை

No automatic alt text available.

சாயிபாபா ஏறக்குறைய ஐந்தரையடி உயரம் இருந்தார். அவர் பருமனுமல்ல, மெலிந்தும் இருக்கவில்லை. அவர் தங்கத்தைப் போன்ற மஞ்சள் நிறமுடையவராயிருந்தார். அவரது கண்கள் நீலநிரமானவை. அவை இருட்டில் கூட ஒளிரும். உண்மையில் அவைகளே பக்தர்களின் வியப்பைத் தூண்டுபவை. ஸ்ரீ சாயி சரனானாந்தாஜி பாபாவைப் பார்த்த சமயத்தில், பாபாவின் சில பற்கள் விழுந்திருந்தன. மற்றவை தூய வெண்மையாய் இருக்கவில்லை. பாபா ஒருபோதும் பல் தேய்த்ததே இல்லை. காலைவேளைகளில் சிறிது நீரைக்கொண்டு வாயைக் கொப்பளிப்பார். அவ்வளவே. அவர் காப்பியோ தேநீரோ அருந்தியதே இல்லை. புகைக்குழாயில் புகை பிடிக்கும் வழக்கத்தை எப்படி ஆரம்பித்தார் என்று அவர் ஒருபோதும் ஒருவரிடமும் கூறியதில்லை.
 பாபா எப்போதும் முரட்டு வெள்ளைத் துணியிலான உடைகளையே அணிந்தார். தமது தலையைச் சுற்றி எதற்க்காக துணியைக் கட்டிக் கொண்டிருந்தார் என்று எவருக்கும் அவர் கூறியதில்லை. அவர் தினந்தோறும் குளித்ததே இல்லை. அவருக்கு தோன்றும்போது குளிப்பார். சில சமயங்களில் ஆறு வாரங்கள் கூட அவர் குளிக்காமல் இருந்திருக்கிறார்.
அவர் போக்கில் விடப்பட்டால், பாபா மிகவும் குறைவாகவே பேசுவார். மிக அவசியமானால்தான் பேசுவார். அவர் ஒருபோதும் உரக்கச் சிரித்ததில்லை. மென்மையாக புன்னகை செய்வார். பெரும்பான்மையான நேரம் அவர் கண்களை மூடியவாறு இருப்பார்.
 மிக வியப்பிற்குரிய விஷயம் யாதெனில், பாபா ஒருபோதும் மசூதியிலுள்ள சுவரில் சாய்ந்து அமர்ந்ததே இல்லை. அவர் கால்களை நீட்டிக் கொண்டு அமர்ந்தபோது கூட, சுவரிலிருந்து சில அங்குலங்கள் தள்ளியே அமர்வார். பகல் வேளைகளில் அவர் ஒருபோதும் படுத்ததே இல்லை. ஷீரடியில் உள்ள கோவில்கள் எதற்கும் அவர் சென்றதில்லை.
பாபாவுக்கேயுரிய சில குறிப்பிட்ட செய்கைகள் உண்டு. ஒவ்வொருநாள் காலையிலும் பாபா வேப்பமரத்துக்கு முன்னாலுள்ள குருஸ்தான் என்று அழைக்கப்படும்   இடத்துக்கு நடப்பார். பின்னர் அவர் மசூதிக்கு முன்னாள் நின்று, நான்கு முக்கிய  திசைகளிலும் தமது கைகளைத் திரும்பத் திரும்ப அசைப்பார். கண்ணுக்குத் தெரியாத ஜீவன்களுக்கு ஏதோ சைகை செய்வதுபோல் இருக்கும் அது. பிறகு மசூதியிலுள்ள தமது இருக்கைக்குத் திரும்புவார்.



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 27, 2017

பாபாவே உன்னை அழைத்தார்.

Image may contain: one or more people and closeup

என்னைச் சேர்ந்தவர்களை தொலை தூரத்தில் இருந்தெல்லாம் பல்வேறுவித முகாந்திரமாக இங்கே வரவழைக்கிறேன். நானேதான் அவர்களை என்னிடம் வரவழைக்கிறேன். அவர்கள் தம் இச்சைப்படி தாமே வருவதில்லை. நான் அவர்களை என்னிடம் இழுத்துக்கொள்கிறேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.





http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, December 26, 2017

உன்னுடனேயே நான் இருக்கிறேன்



"நீ என்னைக் காண இனி இங்கே வந்து சிரமப்படவேண்டாம். நீ எங்கிருந்தாலும், உன்னுடனேயே நான் இருக்கிறேன்" - ஸ்ரீ ஷிர்டி  சாய்பாபா ( பாபா தனது பக்தை சந்திரபாயிடம் கூறியவை {1918} ).



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா  https://youtu.be/R528Bcsq50c http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaib...