Sunday, January 7, 2018

சாயி சிந்தனை

No automatic alt text available.


நம்முடைய மனமே நமக்கு விரோதி என்பதும், பரம விரோதியும் செய்ய நினைக்காத கெடுதல்களையும் உற்பத்தி செய்யும் என்பதும், எல்லோருக்கும் நிச்சயமாகத் தெரியும். மற்றவர்களுக்கு நமது எண்ணங்கள் தெரியாமல் இருக்கலாம். மகாராஜரான பாபாவுக்கு உடனே தெரிந்துவிடும்.    
நம் மனத்தில் குதர்க்கமான எண்ணங்கள் எழலாம். அவற்றை அறவே விடுத்து, பாபாவின் பாதங்களின்மேல் மனத்தைச் செலுத்தினால், மனம் ஒருமுகப்படுத்தல் விருத்தியடையும். ஒருமுகப்பட்ட மனத்தில் சாயி சிந்தனை பின்தொடரும்.



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, January 6, 2018

குருவே வழிகாட்டி

Image may contain: 1 person, indoor

"உன் குறிக்கோளை அடைய குருவே நேரடியாக அழைத்துச் செல்வார். வழிகாட்டி இல்லையென்றால் நீ காணாமல் போகலாம்." 
                                                          - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, January 5, 2018

குருவருள் செய்யும் அற்புதம்

Image may contain: one or more people

"ஒரு துளி ஈரமும் இல்லாது உலர்ந்து காய்ந்துபோன மரமாயினும், ஏதும் செய்யாமலேயே பூத்துக் காய்த்துப் பழுத்துக் குலுங்கச் செய்வதே குருவருள் செய்யும் அற்புதம்."

                                                                                 -    ஸ்ரீமத்ஸாயிராமாயணம்.

                                                                                           
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 4, 2018

பாபா உங்கள் அண்மையில் இருப்பதை உணர்வீர்கள்

Image may contain: 1 person, text

சிலருக்கு பாபாவின் தரிசனம் தொடர்ந்து கிடைக்கிறது ( ஷீரடியிலோ அல்லது வேறு பாபாவின் ஆலயங்களிலோ). ஆனால் பாபாவின் மீது அதிகமான அன்பு வைத்தும் பாபாவின் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு அமைவதில்லை. பாபா என்னை ஒதுக்கி வைத்திருக்கிறாரா? 

பாபாவின் குழந்தைகளான நம்மை எப்போதும் அவரது கண்காணிப்பிலேயே வைத்துள்ளார். எப்போது ஒதுக்கி வைத்ததில்லை. பாபாவின் கோவிலுக்கு செல்ல முடியாததற்கு வருத்தமும் பட தேவையில்லை. தன்னை  பக்தர்களுக்குப் புரியவைப்பதற்கு  பாபா கையாண்ட உபாயங்கள் எத்தனை எத்தனையோ! அவரவர்களுடைய ஆன்மீகத் தகுதிக்கும் திறமைக்குமேற்ப  பக்தர்களைத் தனித்தனியாக நிர்வகித்தார். பல சந்தர்ப்பங்களில் தரிசனம் தரவும் மறுத்தார்.  ஒருவரை ஷிர்டியிலிருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பிவிடுவார். மற்றவரை ஷிர்டியிலேயே தனிமையில் வாழச் செய்வார். மற்றொருவரை வாடாவை விட்டு வெளிவராமலேயே இருக்கச்செய்து, தாம் நியமித்தவாறு புராணங்களைப் பாராயணம் செய்யச் சொல்வார். பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாஸங்களில் ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின்மேல் ஏக்கம் அதிகமாகி, உட்கார்ந்து கொண்டிருக்கும் போதும், உறங்கும்போதும் எந்நேரமும் பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள் உணர்வார்கள் ! இச்செயல்களின் நோக்கம் இதுவே... எல்லாமே பாபாவின் செயல்.



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 3, 2018

என் வயது லக்ஷக்கணக்கான ஆண்டுகள்.

                   Image may contain: 1 person, sitting and beard

நான் பர்வர்திகார் ( கடவுள் ). நான் வசிப்பது ஷீரடி மற்றும் எங்கும். என் வயது லக்ஷக்கணக்கான ஆண்டுகள். ஆசிகள் வழங்குவதே என் தொழில். எல்லா பொருட்களும் என்னுடையவை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றையும் நான் அளிக்கிறேன். கங்காபூர், பண்டரிபுரம், மற்ற எல்லா இடங்களிலும் நான் இருக்கிறேன். இவ்வுலகின் ஒவ்வொரு துகளிலும் நான் உள்ளேன். இவ்வையகம் முழுவதும் என்னுள் அடக்கம். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 2, 2018

வாழ்நாள் முழுவதும் குருசேவை செய்வோம்

Image may contain: 1 person


ஸத்குருவின் அனுக்கிரகமின்றி பிரம்மத்தை அறிய முடியாது.
குருவினுடைய பாதகமலங்களில் ஐந்து பிராணன்களையும் பரிபூரணமாக சரணாகதி செய்துவிட வேண்டும்.
குருவின் (பாபாவின்) சந்நிதியில்
நம்...
தலை வணங்கட்டும்;
கைகள் அவருடைய பாதங்களை மெதுவாய் பிடித்துவிடட்டும்;
கண்கள் அவருடைய முகத்தையே விழுங்கட்டும்;
மூக்கு அவருடைய பாதங்களை கழுவிய நீரின் நறுமணத்தை நுகரட்டும்;
காதுகள் ஸாயீயின் கீர்த்தியை கேட்கட்டும்;
சித்தம் மனக்கண்ணில் ஸாயீயின் உருவத்தைக் கொணர்ந்து நிறுத்தி
அகண்டமாக (இடைவிடாமல்) தியானம் செய்யட்டும்;
உடல், மனம், செல்வம் அனைத்தையும் ஸத்குருவின் பாதகமலங்களில் ஸமர்ப்பணம் செய்துவிட்டு வாழ்நாள் முழுவதும் குருசேவை செய்வோம்.

                                                                                               - ஸ்ரீமத்ஸாயிராமாயணம்



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, January 1, 2018

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Related image

                                   "நானிருக்க பயமேன்" 

                   சாய் பக்தர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா  https://youtu.be/R528Bcsq50c http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaib...