Wednesday, January 31, 2018

புலன்கள் விருப்பம் வலுவிழந்துவிடும்

Image may contain: one or more people

இவ்வுலகம் அழியும்வரை புலன்கள் அவற்றுக்குரிய நாட்டங்களால் ஈர்க்கப்பட்டே தீரும்; இதைத் தடுக்க இயலாது. ஆனால், அந்த நாட்டங்களை பாபாவின் பாதங்களில் சமர்ப்பித்துவிட்டால் அவை இயற்கையாகவே  வலுவிழந்துவிடும்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 30, 2018

எதாவது ஒரு ரூபத்தில் பாபா உனக்கு துணை இருப்பார்

Image may contain: 1 person

ஒரு அடியவரை பாபா ஏற்றுக் கொண்டால், அவரை அவர் தொடர்கிறார். இரவும், பகலும், வீட்டிலும் வெளியிலும் அவருடனேயே இருக்கிறார். அவர் விரும்பியவாறு  எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். அறிவுக்கெட்டாத வகையில்  எதாவது  ஒரு ரூபத்தில் அவருக்கு முன்பாகவே சென்று பாபா அங்கு இருக்கிறார்.- ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, January 29, 2018

பயமென்பதே இல்லை

Image may contain: 1 person, smiling

எல்லாவற்றையும் குரு(பாபா)வின் பாதங்களில் சமர்ப்பித்துவிட்டவருக்கு பயமென்பதே இல்லை. - ஸ்ரீ சாயி சத்சரித்திரம்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, January 28, 2018

பாபாவை போன்ற சத்குரு"பாபாவின் கிருபையால் ஏற்படும் எழுச்சியும் விழிப்பும் கண்களுக்குப் புலப்படாது, அது எல்லா இந்திரியங்களுக்கும் அப்பாற்பட்டது. மூவுலகங்களிலும் தேடினாலும் பாபாவை போன்ற சத்குருவைத் தவிர இதை அளிக்கக்கூடியவர் வேறெவரையும் காணமுடியாது"

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, January 27, 2018

சந்தேகங்கள், கவலைகள், பயங்கள்

No automatic alt text available.

பூரண நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பாபாவைச் சரண் புகுவதைத் தவிர ஒருவர் செய்யக்கூடியது வேறெதுவுமில்லை. அப்படிச் சரண்புகின், வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும், சூழலிலும் அகப்பட்டுத் தவிக்காமல் பத்திரமாகச் செல்ல துணைபுரியவும் ஒவ்வொரு சிறு விஷயத்திலும் தேவைகளைக் கவனித்துக் கொள்ளவும் பாபா இருக்கிறார். கடவுள் என்றோ ஸத்புருஷர் என்றோ, அல்லது எப்படி வேண்டுமானாலும் அவரைச் சொல்லிக்கொள்ளுங்கள். அவர் அந்தர்யாமியாக உள்ளே விளங்குபவர்; ஆனால் எல்லோரையும் ஆட்கொள்ளக் கூடிய அபார சக்திவாய்ந்த உருவத்துடன் காணப்பட்டார். அவர் சன்னிதியில் சந்தேகங்கள், கவலைகள், பயங்கள் ஒன்றுக்கும் இடம் கிடையாது. பாபாவிடம் பூரணமாகத் தஞ்சம் புகுபவர், அதுவே சிறந்ததும், பத்திரமானதுமான ஓரே வழி என்பதை உணர்ந்து விடுகின்றனர்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 25, 2018

இன்று நாடெங்கிலும் பெரிய நகரங்கள் மட்டுமல்லாது கிராமங்களில் கூட எண்ணற்ற சாயி ஆலயங்கள் உள்ளன. ஆனால் பாபா வாழ்ந்த காலத்திலேயே அவருக்கான கோவில் எழுப்பப்பட்டது. இதுவே சாயிபாபாவிற்க்காக கட்டப்பட்ட முதல் கோவிலாகும். இந்த கோவில் உருவான விதம் பாபாவின் அற்புதங்களில் ஒன்றாகவும் நம்மை போன்ற பாபாவின் குழந்தைகளுக்கு மிகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் இருக்கும்.

ஸ்ரீ கேஷவ் ராமச்சந்திர பிரதான், ஒரு நாத்திகவாதி. கடவுள் மீதோ, மகான்கள் மீதோ நம்பிக்கை இல்லாதவர். மஹாராஷ்டிரா மாநிலம் பிவ்புரியில் வசித்து வந்தார். மும்பையில் ஒரு பார்சீ மனிதருக்காக கடன் வசூல் செய்யும் வேலையை செய்து வந்தார். தினமும் பிவ்பூரியில் இருந்து மும்பைக்கு ரயிலில் சென்று வருவது வழக்கம். பிரதானிற்கு நெருங்கிய நண்பர்  ஒருவர் இருந்தார், அவர் தீவிர சாயி பக்தர். அடிக்கடி ஷீரடி சென்றுவருபவர். ஒருமுறை பிரதான் தனது நண்பரை பார்க்க சென்றபோது, அவர் ஷீரடிக்கு செல்ல ஆயத்தமாகியிருந்தார். எனவே தன்னுடன் ஷீரடிக்கு வருமாறு பிரதானையும் அழைத்தார். நாத்திகவாதியான பிரதான், தான் ஷீரடிக்கு வருவதாகவும், ஆனால் மசூதிக்கு  வரமாட்டேன் என்று கூறினார்.

நண்பர்கள் இருவரும் ஷீரடியை அடைந்து வாடாவில் வந்து தங்கினர். அப்பொழுது ஆரத்தி சமயம், பிரதானின் நண்பர் மசூதிக்கு சென்றார். வாடாவிலேயே தங்கிவிட்டார் பிரதான் . ஆராத்தியின் போது மசூதியில் எழுப்பப்படும் மணியின் ஓசை பிரதானிற்குள் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. பிரதான்  மசூதியை நோக்கி நடக்கலானார். மசூதியின் ஒரு ஓரத்தில் அமர்ந்து பாபாவையே பார்த்தவண்ணம் பரவச நிலையில் இருந்தார். ஆரத்தி முடிந்து எல்லோரும் பாபாவிடம் உதியை வாங்கி விடைபெற்றனர். ஆனால் பிரதான் பாபாவையே பார்த்துக்கொண்டிருந்தார். பாபா பிரதானை அருகில் அழைத்து தக்ஷனை கொடுக்கும்படி கேட்டார். பிரதான் தன்னிடம் இருந்த 2000 ரூபாய் ( ஆண்டு 1916 )  பாபாவிடம் கொடுத்தார். சிறிது நேரம் கழித்தே பிரதான் நினைவு திரும்பியவராய், தான் வசூல் செய்த மொத்த பணத்தையும் பாபாவிடம் கொடுத்துவிட்டதை உணர்ந்தார். தன்னுடைய முதலாளிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் குழம்பியவர்க்கு, பாபா பார்த்துக்கொள்வார், கைவிடமாட்டார் என்று நண்பர் ஆறுதல் கூறினார்.

பிறகு ஷிரடியிலிருந்து கோபெர்கோனிற்கு குதிரைவண்டியில் வந்தார். தன்னிடம் குதிரைவண்டிக்காரனுக்கு கொடுக்க கூட காசு இல்லை என்பதை பின்னர் உணர்ந்தார். வாடகை பணத்திற்காக தன்னுடைய மோதிரத்தை வைத்துக்கொள்ளுமாறும் வண்டி வாடகை போக மீதி பணத்தை திருப்பி தருமாறு கேட்டுக்கொண்டார். அந்த சமயத்தில் ஒரு ஆள் வந்து என்ன நடக்கிறது என்று விசாரித்து வண்டிக்கான வாடகை காசை தாமே கொடுத்துவிட்டு பிரதானிற்கு மும்பைக்கு செல்வதற்கு ரயில் டிக்கெட்டும் வாங்கிக்கொடுத்து அங்கிருந்து மறைந்தார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 24, 2018

பிறன் மனைவியிடம் காமம் கொள்ளாதே.

Image may contain: 1 person, smiling, closeup

ஸ்ரீ சாயிபாபா, தன்னிடம் முழுமையாக சரணடைந்த பக்தர்களை, எப்போதும் கண்காணித்து வரும் காவல் தெய்வம்.
பாபாவின் பக்தரான ஸாடே என்பவர், தவறுதலாலும், அஜாக்கிரதையாலும்  நடத்தை சரியில்லாத பெண் ஒருவள் வீட்டிற்குப் போய்விட்டார். அங்கே அவளுடன் தனியாக இருந்து தன் நடத்தை சீரழிந்து போய்விடக் கூடிய நிலமையை நெருங்கிவிட்டார். கதவு சாத்தப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அது திறந்தது. நிலைப்படியில் பாபா நிற்கிறார், ஸாடேக்கு ஏதோ சமிக்ஞகள் செய்கிறார். "என்ன! இவ்வளவு தூரம் என்னிடம் வந்துவிட்டு, நரகத்தில் விழப்பார்க்கிறாயே ! நல்ல செயல்தான்!" எனக் கண்டிப்பது போலிருந்தது. அகப்பட்டுக் கொண்ட திருடனைப் போல ஸாடே மிகவும் வெட்கிப் போய், மீண்டும் வருவதில்லை என்ற சங்கல்பத்துடன் அந்த பெண்ணின் வீட்டை விட்டு வெளியேறினார்.

"உன் மனைவியிடம் உள்ள காமத்தை ஓர் அளவிற்குள் அடக்கி வை. பிறன் மனைவியிடம் காமம் கொள்ளாதே. இல்லற இன்பம் தோஷமில்லை. ஆனால் அதில் அடிமையாகக் கூடாது. காமத்தில் மூழ்கி இருப்பவருக்கு முக்தி கிடைக்காது. காமம் உள்ளத்தின் சமநிலையையும், பலத்தையும், உறுதியையும் அழிக்கிறது. கற்றோரையும் கசக்கிவிடும்." -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா  https://youtu.be/R528Bcsq50c http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaib...