Sunday, February 11, 2018

நம்முடைய மனமே நமக்கு விரோதி

Image may contain: 1 person

நம்முடைய மனமே நமக்கு விரோதி என்பதும், பரம விரோதியும் செய்ய நினைக்காத கெடுதல்களையும் உற்பத்தி செய்யும் என்பதும், எல்லோருக்கும் நிச்சயமாகத் தெரியும். மற்றவர்களுக்கு நமது எண்ணங்கள் தெரியாமல் இருக்கலாம். மகாராஜரான பாபாவுக்கு உடனே தெரிந்துவிடும். நம் மனத்தில் குதர்க்கமான எண்ணங்கள் எழலாம். அவற்றை அறவே விடுத்து, பாபாவின் பாதங்களின்மேல் மனத்தைச் செலுத்தினால், மனம் ஒருமுகப்படுத்தல் விருத்தியடையும். ஒருமுகப்பட்ட மனத்தில் சாயி சிந்தனை பின்தொடரும். இதைத்தான் சாயி நம்மைச் செய்யவைக்கிறார். எடுத்த காரியமும் தடங்கலின்றி நிறைவேறுகிறது.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, February 9, 2018

பணம், ஆரோக்கியம், குழந்தைகள்

Image may contain: 1 person

என்னிடம் வரும் எல்லா மனிதர்களும் பணம், ஆரோக்கியம், குழந்தைகள் இவைகளையே கேட்கிறார்கள். நான் என் பக்தர்களுக்குக் கொடுப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் அந்த மேன்மையான ஆத்மீக அனுபவத்தைத் தவிர, வேறு எதுவும் வேண்டாமென்று கேட்கும் மனிதன் கிடைப்பதே அரிது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, February 7, 2018

அனைத்து வசதிகளையும் எல்லாவகையான வளங்களையும் உனக்கு அளிக்கும்

Image may contain: 1 person, text

ஸ்ரீ குருவுக்கு பயபக்தியுடன் கவனமாக அளிக்கப்படும் அனைத்தும் நினைத்துப் பார்க்க இயலாத இடத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு விதையாக இருக்கும். காலப் போக்கில் அந்த விதையானது விருக்ஷமாகி தேவையான அனைத்து வசதிகளையும் எல்லாவகையான வளங்களையும் பக்தருக்கு அளிக்கும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, February 6, 2018

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் படிக்க இந்த லிங்க்'ஐ க்ளிக் செய்யவும்.

Image result for sai satcharitra


குரு வழிபாடு என்பது தானாக நிகழ்வது அல்ல. ஏதோ இந்த பிறப்பில் நடந்தது என்றும் கூற முடியாது. பல ஜென்ம தேடல், பூர்வ புண்ணியங்களின் குவியல்கள் மூட்டை மூட்டையாக இருந்தவருக்கே அது வாய்க்கும். அப்படிப்பட்ட குருபக்தியை மேலும் வலுப்படுத்த மிகச்சிறந்த சாதனை யாதெனில், குருவின் சரிதத்தை தினமும் பாராயணம் செய்வது. பாபாவின் மீது அதீத அன்பு கொள்ளும் பக்தர்கள், தினமும் ஒரு அத்தியாயம் , அல்லது ஒரு பக்கம், அல்லது ஒரு வரியாவது ஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்.. ஸ்ரீ சாய் சத்சரித்திரம் படிக்க கீழே உள்ள லிங்க்'ஐ  க்ளிக் செய்யவும். 

https://drive.google.com/folderview?id=0B7G8udmBMXCMMzliMmU2NTEtOGM1OS00YzgwLWE5NjEtODA0YzE4NDM4MDAw&usp=sharing


எந்த பக்தர் தமக்கு நன்மைகள் ஏற்படவேண்டுமென்ற ஆர்வத்தால் உந்தப்பட்டு பக்திபா(BHA)வத்துடனும் ஒருமுனைப்பட்ட மனத்துடனும் ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கிறாரோ, அவருடைய வழிபாடு என்றுமே வியர்த்தம் ஆகாது. சாயி அவருடைய வேண்டுகோள்களை நிறைவேற்றுகிறார். உலகியல் தேவைகளையும் ஆன்மீகத் தேவைகளையும் பூர்த்திசெய்கிறார். அவர் செய்யும் வழிபாடு என்றுமே வீண்போவதில்லை. கடைசியில் அவர் எல்லாப் பேறுகளையும் பெற்றவர் ஆகிறார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, February 5, 2018

சாயி நாமம் சொல்லுங்கள்

Image may contain: 1 person

மாயை மிகவும் பலமானது. ஆனால் இறைநாமமோ அதைவிட சக்தி வாய்ந்தது. இறை நாமம் ஒன்றே உய்யும் வழி. மாயையை வெல்ல இறைவனிடம் விஸ்வாசம் தவிர்த்து வேறொரு சாதனை இல்லை. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, February 2, 2018

சாய்பாபா வழிநடத்துகிறார்

No automatic alt text available.

சாய்பாபா என்னும் மகத்தான விளையாட்டுக்காரர் தமது அடியவர்களை வழிநடத்துகிறார், அவர்களை தாமாகவே, தமது பண்புருவாகவே மாற்றம் செய்து கொள்கிறார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, February 1, 2018

அசைக்க முடியாத நம்பிக்கை


Image may contain: 1 person
நடக்கப் போவதை தடுக்க முடியாதென்றால்,பாபாவிடம் போவதால் பிரயோஜனம் என்ன? தலையெழுத்துப்படி நடப்பது நடந்தே தீரும் என்றால் சாய்பாபா என்று ஒருவரை எதற்காக வைத்துக்கொள்ளவேண்டும்? சீரடிக்கு போவதால் என்ன லாபம்?கர்மவினையை பாபாவால் என்ன செய்துவிட முடியும்?

சாய்பாபாவின் பதில்;"உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும்.ஆனால் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால்,எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதை போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும்".
பாபாவிடம் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தால் மட்டுமே சாத்தியமாகும்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ஸாயீயின் திருவாய்மொழியே சத்தியப்பிரமாணம் !

பாபா எப்படிச் சொல்கிறாரோ அது அப்படியே நடக்கும் ; ஜோதிடமும் கைரேகையும் பொய்யாகும் ; ஸாயீயின் வார்த்தைகள் தப்பர்த்தம் செய்துகொள்ள முடியாதவை ; ...