Sunday, February 18, 2018

யாரும் இறப்பதில்லை

Image may contain: one or more people

யாரும் இறப்பதில்லை, நிச்சயமாக சாயி பாபா போன்ற, தன்னைக் கண்டறிந்த ஒரு மகாத்மா இறப்பதில்லை. பௌதீக உடலை விட்டு விடும்போது ஆத்மா ஞானிகள் அல்லது ஜீவன் முக்தர்கள், விதேக முக்தர்கள் அல்லது நிராகரபரப்பிரம்மம்  என் அழைக்கப்படுவார்கள். இவர்கள் தங்கள் சரீரங்களை விட்டபின் பரப்பிரம்மத்துடன் ஐக்கியமாகாமல் சூட்சும சரீரத்துடன் திகழ்ந்து, மனித சகத்திற்கு நன்மை பயத்தல் என்ற தெய்வீக சங்கல்பத்துடன் ஒத்துழைக்கின்றனர். இந்த சூட்சும சரீரத்தில் சஞ்சரிக்கும் போது  நினைத்த மாத்திரத்தில் அவர்கள் சரீரத்துடன் தோன்றி மறைய முடியும். இவர்கள் அபாந்தராத்மாக்கள் ஆவர். சாயி பாபா இப்போது ஒரு அபாந்தராத்மா. தமது பௌதீக உடலை விடுவதற்கு முன், தாம் தமது சதை எலும்புகளாலான போர்வையை விடப்போவதைக் கண்டு பக்தர்கள் பயப்படவோ, வருந்தவோ வேண்டாமென்றும், எந்த ஒரு பக்தன் எந்த இடத்திலும், எந்த ஒரு தருணத்திலும் தம்மை நினைத்தால், தாம் அங்கே தோன்றி அவனை கவனித்துக் கொள்வதாகவும் பாபா கூறினார். பாபா கூறியது எவ்வளவு சத்தியமானது என்பதை எண்ணற்ற பக்தர்கள் கண்டிருக்கின்றனர். தீவிர பக்தர்கள் இன்றும் பாபாவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து தங்களுடைய சொந்த அனுபவங்கள் வாயிலாகவே பாபா கூறியது எவ்வளவு சத்தியமானது  என்பதைக் காணலாம்.-பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, February 17, 2018

கடந்த பிறவிகளின் புண்ய பலன்

Image may contain: 1 person, smiling

கர்ம சூத்திரம் எல்லோருக்கும் பொருந்தும். வியாதிகளும், துயரங்களும், கர்மாவின்படியே பிராப்தித்தாலும் சில முறை கர்மா, அதிர்ஷ்டத்தை தந்து மகான்களிடம் கொண்டு செல்லும். ஒன்று மட்டும் வாஸ்தவம். கடந்த பிறவிகளின் புண்ய பலன் இருந்தாலொழிய பாபாவின் தரிசன பாக்கியம் கிடைக்காது. விதியின் லீலா விலாசங்களை நம்மால் கூற இயலுமா? பாபாவின் லீலைகள் அற்புதமானவை. எந்த நேரத்தில் பாபாவின்  தரிசனம் கிடைத்ததோ, அந்த நேரமே வாழ்க்கையின் பொன்னான நேரம். பாபாவை தரிசிக்க போகிறோம் என்பதை ஜீவர்கள் அறியமாட்டார்கள். ஆனால் அந்த ஜீவர்கள் தன்னை தரிசிப்பார்கள் என்று பாபா நன்கு அறிவார். ஏன்? காலத்தின் ஓட்டம் அவரின்  கண் விழிகளுக்கு நன்றாகத் தென்படும். காலத்தைக் கட்டுபடுத்துபவரும் அவரே. காலம் பாபாவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். தன்னை பூஜிப்பவர்களுக்கும் , தியானிப்பவர்களுக்கும்,   ஸ்மரிப்பவர்களுக்கும் கர்மாவை தாங்கும் சக்தியை அளிப்பதாகவும், அவரே மறைமுகமாக அதை அனுபவிப்பதுமாக பாபா கூறியுள்ளார்.

"உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும்.ஆனால் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால்,எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதை போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும்.
 கர்மா, எனது பக்தர்களிடம் சக்தியற்ற நிலையில் இருக்கும். ஆகையால்    மிக்க விஸ்வாசத்துடன் என்னையே நினைத்துக் கொண்டிருங்கள். காலத்தின் போக்கு கர்மா பற்றிய சிந்தனையின்றி இருங்கள். நான் இருக்கிறேன்! நம்புங்கள்." - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, February 16, 2018

தெய்வீக அவதாரம்

No automatic alt text available.

குன்றுகளும் மலைகளும் நடுவே தடையாக இருந்தபோதிலும் சாயிநாதரின் பார்வையிலிருந்து எதையும் மறைக்க முடியாது. பரம ரகசியமாக நாம் கருதும் விஷயமும் அவர் முன்னே திறந்து கிடக்கிறது. எப்போதோ வாழ்ந்த மகான் அல்ல அவர். தன்னை தவிர வேறெதிலும் நாட்டமில்லாமல், தன்னிடம் மட்டுமே பூரண சரணாகதி அடைந்த பக்தர்களுடன் எப்போதும் இருக்கின்ற தெய்வீக அவதாரம் அவர். http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, February 15, 2018

சாயி என்ற பரம்பொருள்

Image may contain: 1 person


பஞ்ச பூதங்களான இவ்வுடம்பு அழியக்கூடியது, நிலையற்றது.  ஆனால் அதனுள் இருக்கும் ஆன்மாவே பரம்பொருள்.  அதுவே அழியாததும், நிலையானதுமான பரிபூர்ண உண்மையாகும்.  இப்புனித மெய்மை, உணர்வுநிலை அல்லது பிரம்மமே மனத்திற்கும், புலன்களுக்கும் அதிபதியாகவும் ஆட்டுவிப்போராகவும் உள்ள சாயி என்ற பரம்பொருள். - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, February 14, 2018

கடுமையான பரீக்ஷை

Image may contain: food


சில சமயம் பாபா தனது பக்தர்களை எல்லைவரை இழுத்துவிடுகிறார். அவனுடைய பக்திக்கும் பிரேமைக்கும் கடுமையான பரீக்ஷை வைத்துவிடுகிறார். அதன்பிறகே அவனுக்கு உபதேசமளிக்கிறார். - ஸ்ரீ சாயி இராமாயணம்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, February 13, 2018

குருபாதங்களின் சக்தி

நான்கு புருஷார்த்தங்களில் (அறம், பொருள், இன்பம், மோட்சம்) கடைநிலை மோட்சம். ஆயினும் அதுவும் குருபாதங்களின் சக்திக்கு ஒப்பாகாது. அத்தகைய குருவின் பாததீர்த்ததை அருந்தியவனின் வீட்டைத் தேடிக்கொண்டு மோட்சம் சத்தம் செய்யாமல் வரும். குரு கருணாமூர்த்தியாக அமைந்துவிட்டால், சம்சார வாழ்க்கை சுகமாக இருக்கும், நடக்காததெல்லாம் நடக்கும். அரைக்கணத்தில் உம்மை அக்கறை சேர்ப்பார்.

Image may contain: 1 person, smiling, closeup

"இந்த பாதங்கள் புராதனமானவை. உம்முடைய கவலைகள் எல்லாம் தூக்கியடிக்கப்பட்டுவிட்டன. என்னிடம்  பூரணமான நம்பிக்கை வையும். சீக்கிரமே நீர் பேறுபெற்றவர் ஆவீர்" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

                                                               

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, February 12, 2018

போதுமென்ற மனத்துடன் குருபுத்திரனாக வாழுங்கள்

No automatic alt text available.

விதிக்கப்பட்ட, விதிக்கபடாத, செயல்களிடையே உள்ள வித்தியாசம்  தெரியாமல் எப்பொழுதும் பாவச்செயல்களிலேயே புரண்டு கொண்டிருப்பவன் எவ்வளவு புத்திசாலியாக இருப்பினும் என்ன நன்மையை அடைந்துவிட முடியும்? அதுபோலவே, அலைபாயும் புலன்களால் குழப்பப்பட்ட மனத்துடன், இதயத்தில் நிம்மதியின்றி எப்பொழுதும் சாந்தியற்ற நிலையில் இருப்பவன் ஞானத்தை எவ்விதம் அடைவான்? போதுமென்ற மனத்துடன், குருபுத்திரனாக வாழ்ந்து, ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்துத் தன்னையறியும் தேடலில் சலனமில்லாது நிற்பவன் ஞானத்தை அடைவான் - ஸ்ரீ சாயி இராமாயணம் .  http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்

பாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார்.  ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த...