Thursday, May 31, 2018

அஞ்சாதே

Image may contain: 1 person


அஞ்சாதே, கருணை மிகுந்த பக்கீர் உன்னை காப்பாற்றுவார். என் மேல் நம்பிக்கைகொண்டு  பயமற்றவனாக இரு. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, May 17, 2018

ஸத்குருவின் உதவி

              Image may contain: 1 person, sitting

சாயிபாபாவைப் போன்ற ஸத்குருக்கள் நமது அறிவாற்றல் என்னும் கண்களைத் திறந்துவிட்டு,  ஆத்மாவின் தெய்வீக அழகுகளை நமக்குப் புலப்படுத்துகிறார்கள்.   பக்தியின் நுட்பநயம் வாய்ந்த அவாக்களை (விருப்பங்களை) நிறைவேற்றி வைக்கிறார்கள்.  இது செய்யப்படும்போது புலன் உணர்வுப் பொருள்களில் நமக்குள்ள ஆசை மறைந்துவிடுகிறது.  விவேகம் (பகுத்துணர்தல்),    வைராக்கியம் (பற்றறுத்தல்) என்னும் இரட்டைக் கனிகள் நமது கைகளுக்கு கிட்டுகின்றன.   ஞானமென்பது தூக்கத்தில்கூட துளிர்விடுகின்றது.
ஸத்குருவின் தொடர்பைப்  பெறும்போதும்,  அவர்களுக்கு சேவை செய்யும்போதும், ‌அவர்களின் அன்பைப் பெறும்போதும்,  இவைகள் அனைத்தினையும் நாம் எய்துகிறோம்.  தமது அடியவர்களின் அவாக்களைப் பூர்த்தி செய்யும் ஆண்டவன் நமது உதவிக்கு வருகிறார்.   நமது தொல்லைகளையும்  கஷ்டங்களையும் நீக்கி நம்மை மகிழ்வெய்தச் செய்கிறார்.
ஆண்டவனாகவே கருதப்படும் ஸத்குருவின்  உதவியே இம்முன்னேற்றத்திற்கு முழுவதுமான காரணமாகும்.
எனவே நாம் எப்பொழுதும் ஸத்குருவைப் பின்பற்றியே இருந்து அவர்தம் கதைகளை செவிமடுத்து அவரின் பாதத்தில் வீழ்ந்து வணங்கி அவருக்கே சேவை செய்யவேண்டும்.

- ஸ்ரீ ஸாயி சத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, May 16, 2018

நான் அல்லாவின் மிகப் பணிவான அடிமை.

Image may contain: Shirdi Saibaba

நடப்பது எல்லாம் மறைந்து வேலைசெய்யும் கர்மவினைகளின் வானளாவிய ஓட்டம்.  நான் செய்பவனுமல்லேன், செய்ய வைப்பவனுமல்லேன் என்பதை உறுதியாக அறிந்துகொள்.  ஆனாலும்,  செய்யக்கூடிய சக்தி என் வாயிற்படியில் படுத்துக்கிடக்கிறது !

விதியின் வலிமையால் என்னென்ன நிகழ்ச்சிகள் நேர்கின்றனவோ அவற்றிற்கு நான் சாட்சி மாத்திரமே.  செயல்புரிபவனும் செயல்புரியவைப்பவனும்  இறைவன் ஒருவனே;  அவனொருவனே கிருபை செய்யக்கூடியவன்.

நான் தேவனுமல்லேன்; ஈசுவரனுமல்லேன்.  நான் 'அனல் ஹக்'குமல்லேன் (கடவுளுமல்லேன்);  பரமேசுவரனுமல்லேன்.  நான் 'யாதே ஹக்' (இறைவனை எப்பொழுதும் மனத்தில் இருத்தியவன்).  நான் அல்லாவின் மிகப் பணிவான அடிமை.

எவன் அஹங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் இறைவன்மீது தன் பாரத்தைப் போடுகிறானோ,  அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்.

- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, May 15, 2018

ஸாயீ நாமத்தின் சக்தி

Image may contain: 1 person, closeup


பாபா காட்டிய வழியில் நடந்தால் ஆரம்பகாலத்தில் எல்லாமே சுகமாக இருக்கும்.  ஆனால்,  போகப்போக பாதை புதர் மூடிப்போய் எங்கே பார்த்தாலும் முள்ளாக இருக்கும்.
 
அப்பொழுது நம்பிக்கை ஆட்டம் காணும்.  மனம் சுலபமாக சந்தேகங்களால் அலைபாய்ந்து,  ஸாயீ ஏன் இந்தக் காட்டுவழிப் பாதைக்கு நம்மைக் கொண்டுவந்தார் என்று நினைக்கும்.
 
அந்த சூழ்நிலையில்தான் சிரத்தை நிலையாக நிற்கவேண்டும்.  அதுமாதிரி சங்கடங்கள்தான் உண்மையான சோதனைகள்.  ஸாயீ மீதான அசைக்க முடியாத திடமான சிரத்தை வேரூன்றும் வழி இதுவே.

ஸாயீ நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு, சங்கடங்களை தைரியமாக நேருக்குநேராக சந்தித்தால்,  எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும்.  "ஸாயீ நாமத்தின் சக்தி" அவ்வளவு பிரம்மாண்டமானது.

சங்கடங்களினுள்ளே மறைந்திருக்கும் பிரயோஜனம் இதுவே.  ஏனெனில்,  சங்கடங்களும் ஸாயீயால் விளைவிக்கப்படுவனவே.   சங்கடம் வரும்போதுதான் ஸாயீயின் ஞாபகம் வருகிறது !  சங்கடங்களும் அப்பொழுது விலகிவிடுகின்றன.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, May 14, 2018

சாயினுடைய கிருபை

Image may contain: 1 person

பாபாவின் தரிசனமே ஒழுக்கத்திலும் நடத்தையிலும் முழுமையான மாற்றத்தைக் கொண்டுவர வல்லது. மிச்சம்மீதி இருக்கும் பூர்வஜென்மவினை துடைக்கப்பட்டு, இந்திரிய சுகங்களின் மீது விருப்பமின்மை படிப்படியாகப் படரும். சாயினுடைய கிருபைமிகுந்த பார்வை பல ஜென்மங்களாக நாம் சேமித்த பாவங்களை அளித்து, அவருடைய பாதங்கள் அழியாத ஆனந்தத்தை நமக்கு அளிக்கும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, May 13, 2018

இறைவன் மகழ்ச்சியடைவான்

Image may contain: 1 person, smiling


குருவினுடைய புனிதமான சரித்திரத்தைப்  படிப்பதால் பக்தர்கள் நிர்மலமாக (தூய்மையானவர்களாக) ஆகிவிடுகின்றனர்.
"இந்தப் போதியை (பாராயண நூல்) படிப்பதால் பக்தர்களுக்கு மங்களமுண்டாகும் ;  இறைவன் மகழ்ச்சியடைவான் ; உலக பந்தங்களிலிருந்து விடுதலை கிடைக்கும்." - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, May 12, 2018

என்னுடைய கஜானா நிரம்பி வழிகிறது

Image may contain: 1 person, closeup

என் சர்க்கார் (இறைவன்) கொடுப்பதே கொடுப்பது.  மற்றவர்கள் கொடுப்பதை இதனுடன் எப்படி ஒப்பிட முடியும்?   மரியாதைத்கு அவமரியாதையை அணிகலன் ஆக்க முடியுமோ?
"என் சர்க்கார், 'எடுத்துச் செல்லுங்கள்; எடுத்துச் செல்லுங்கள்!' என்று சொல்கிறார்.   ஆனால் எல்லோரும்,  'கொடுங்கள்;  எனக்கு மட்டும் கொடுங்கள் !'  என்று கேட்கின்றனர்.   ஆயினும்,  யாரும் நான் சொல்வதைக் கேட்பதில்லை;  என்னுடைய வார்த்தைகளை லட்சியம் செய்யவதில்லை.
"என்னுடைய கஜானா நிரம்பி வழிகிறது;  ஆனால்,  யாருக்குமே வண்டிகளைக் கொண்டுவரும் சிரத்தை இல்லை.  தோண்டு என்று சொன்னால் யாரும் தோண்டுவதில்லை;  ஒருவரும் பிரயத்தனம் செய்வதில்லை."
"அந்தச் செல்வத்தைத் தோண்டியெடுத்து,  வண்டி வண்டியாக எடுத்துச் என்று நான் சொல்கிறேன்.  ஆயினும்,  *தன் தாயின் சொக்கப் பொன்னான மைந்தனே இந்தக் கஜானாவை எடுத்துச் செல்வான்.
பார்க்கப் போனால்,  நம்முடைய உடலின் கதியும் விதியும் என்ன?  மண் மண்ணோடு சேரும்.  காற்று காற்றோடு கலந்துவிடும். "இந்த நல்வாய்ப்பை நழுவவிட்டுவிட்டால்,  மறுபடியும் கிடைக்காது !"
ஆயினும் என் பக்கீரின் கலைகளும் என் பகவானின் லீலைகளும் என் சர்க்காரின் லயமான செயல்பாடுகளும் ஒப்பற்றவை;  தனித்தன்மை வாய்ந்தவை"
"வினை விதைத்தவன் வினை அறுப்பான்;  தினை விதைத்தவன் தினை அறுப்பான்.  என்னுடைய வார்த்தைகளை நினைவில் ஏற்றிக் கொண்டு செயல்படுபவன் விலைமதிப்பற்ற மகிழ்ச்சியை அனுபவிப்பான்."

- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா  https://youtu.be/R528Bcsq50c http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaib...