Monday, July 9, 2018

ஸாயீயின் ரூபம் கண்முன்னே தோன்றும்

No automatic alt text available.

ஸாயீயின் கதை நிர்மலமானது. பிரேமையுடன் இதை ஸத்ஜனங்கள் (நல்லோர்) செவிமடுக்கட்டும்; அவர்களுடைய பஞ்சமஹாபாபங்களும் வேரோடு எரித்து நாசமாக்கப்படும்.

 மனிதப்பிறவி என்னும் பந்தத்தில் நாம் இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கிறோம். இந்தக் கட்டுகளுள் நம்முடைய நிஜரூபம் மறைந்துகொண் டிருக்கிறது. ஸாயீயின் கதையைக் கேட்பது இக் கட்டுகளைத் தளர்த்தி "ஆத்மதரிசனம்" கிடைக்கச் செய்யும்.

ஆகவே,   இக் கதைகளை மரணபரியந்தம் நினைவில் வைப்போம்;    தினமும் இவற்றைப் பரிசீ­லிப்போம்.   உலக வாழ்வாலும் அதனுடைய துக்கங்களாலும் பொசுக்கப்படும் ஜீவன்களுக்கு சாந்தி கிடைக்கும்.

 பக்தியுடனும் விசுவாசத்துடனும் இக் காதைகளைப் படிப்பதாலும் கேட்பதாலும் ஸாயீ தியானம் ஸஹஜமாகவே (இயல்பாகவே) மலரும். ஸாயீயின் ரூபம் கண்முன்னே தோன்றி, பிறகு இதயத்தில் அமரும்.

இவ்வாறு ஸத்குருவின்மீது பக்தி செலுத்துவதால் உலகவாழ்க்கையில் பற்றற்ற மனப்பான்மை வளரட்டும். குருவைப்பற்றிய நினைவில் பிரீதியுண்டாகி, மனம் நிர்மலமாகட்டும். 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 8, 2018

பாபாவின் யுக்தி

Image may contain: 1 person


பாபாவின் யுக்திகளை அவரே அறிவார். எண்ணத்தால் கற்பனை செய்யமுடியாத அவருடைய மாயாசக்தி, ஊமையையும் பிருஹஸ்பதியைப் (தேவகுருவைப்) போன்று பேசவைக்கிறது; முடவனையும் மேருமலையைத் தாண்டவைக்கிறது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 7, 2018

குருவின் கிருபையில்லாது புத்தக ஞானம் பலனேதும் அளிக்காது.

Image may contain: 1 person, smiling, indoor

"கன்னட அப்பா உமக்குச் சொன்னது அனைத்தும் யதார்த்தமே (உண்மை நிலை). ஆனால், அவையனைத்தையும் செயல்முறையில் கொண்டுவந்தால்தான் உம்முடைய மனோரதங்கள் நிறைவேறும்."

- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா


குருசரித்திர பாராயணம் செய்து முடித்த பிறகு, அதை எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டுவருவது என்பது சிர்டீயில் கற்றுக் கொடுக்கப்பட்டது.

முத­லில் நூலைக் கற்க வேண்டும்; பிறகு அதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். ஆரம்பத்தி­லிருந்து முடிவுவரை அதன்படி நடக்க வேண்டும். திரும்பத் திரும்ப இம்மாதிரியே பாராயணம் செய்ய வேண்டும். கற்ற வழி நிற்க வேண்டும்.

வாசிப்பதே முடிவான காரியம் அன்று; அது நடைமுறைக்கு வரவேண்டும். இல்லையெனில், அது கவிழ்த்து வைக்கப்பட்ட பாத்திரத்தின்மேல் நீர் ஊற்றுவது போலாகும்.

அனுபவ ஞானம் அளிக்காத புத்தக ஞானம் வியர்த்தமாகும். பிரம்மஞானம் அடைந்த குருவின் கிருபையில்லாது, வெறும் புத்தக ஞானம் பலனேதும் அளிக்காது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 6, 2018

பொய் பேசவேண்டாம்

Image may contain: one or more people
"நான் கூறுவதைக் கேளுங்கள்.  இறைவனை மகிழ்விக்கத் தக்கவகையில் நடந்து கொள்ளுங்கள்.  ஒருபோதும் பொய் பேசவேண்டாம்.  எப்போதும் வாய்மையைக் கடைப்பிடியுங்கள்."

"ஒருபோதும் ஒருவரையும் வஞ்சிக்தாதீர்கள்.  உங்களிடமுள்ள பொருளை உங்கள் சக்திக்கேற்றவாறு நல்ல காரியங்களுக்காக செலவழியுங்கள்."

"இவ்வாறாக நீங்கள் பயனடைந்து, நிறைவாக ஸ்ரீ மந் நாராயணனை காண்பீர்கள்.  என் சொற்களை நினைவில் வைத்து தக்கவாறு நடந்துகொள்ளுங்கள்."

- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 5, 2018

பொய் பேசுபவன் ஒருபோதும் பகவானை அடையமாட்டான்

Image may contain: 1 person, smiling

"ஜனங்கள் பொய் பேசுகிறார்கள்,  தங்களையே இழிவுபடுத்திக் கொள்கிறார்கள்.  நாராயணனிடமிருந்து விலகிச் சென்று,  முடிவில் அவர்களுடையதேயான கர்மவினையின் பளுவால் வீழ்கிறார்கள்."

"பாபிகளில் மிகவும் மோசமானவன் பொய் பேசுபவன்.  அவன் ஒருபோதும் பகவானை அடையமாட்டான்."

"எப்போதும் உண்மையைப் பேசுபவன் பகவானை அடைகிறான்.  தபமும்,  ஜபமும் கூட அதற்கு ஈடாகமாட்டா."

"நற்பண்புகளின் சிகரம் வாய்மை.  முக்திக்கு வழிகாட்டுவது அதுவே.  அதுவே பேரின்பப்பெருக்கு.  ஒவ்வொருவரும் வாய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்."

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 2, 2018

இறைவனே சூத்ரதாரி

Image may contain: one or more people


"இறைவனின் லக்ஷணம் (சிறப்பியல்பு) எவ்வளவு விநோதமானது ! சந்தோஷமாக இருப்பவரால் ஒருகணங்கூட அவர் நினைக்கப்படுவதில்லை. அவருடைய லீலை ஆராய்ச்சிக்கப்பாற்பட்டது."

"மனிதர் அவ்வாறு   இருக்கும்போது, வரிசையாக இன்னல்களைத் தந்து மனிதனைத் தம்மை ஞாபகப்படுத்திக்கொள்ளளும்படி செய்து, துயரத்தில், ''ஓ பகவானே! நான் என்ன குற்றம் செய்தேன்? ஏன் எல்லா முயற்சிகளும் தோல்வியைத் தழுவிவிட்டன? இம்மாதிரி இன்னல்படுவதற்கு நான் எத்தகைய கொடிய பாவம் செய்திருக்க வேண்டும்? ''ஓ நாராயணா!  என்னைக் காப்பாற்றும்!  என்று கதறும்படி செய்கிறார்."

"காலச்சக்கரத்தின் சுழற்சியிலுங்கூட இறைவனின் திட்டம் இருக்கும்போலத் தெரிகிறது. ஆகவே, எவரும் வேறுவிதமான கற்பனைகள் செய்துகொண்டு வீண்பெருமை பேச வேண்டா."

"நற்செயல்களுக்கும் தீச்செயல்களுக்கும் இறைவனே சூத்ரதாரி. அவனே காப்பவன்; அவனே அழிப்பவன்; அவன் ஒருவனே செயலாளி."


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 1, 2018

முழுமையான பக்தி இல்லை, துன்பங்கள் தீரவில்லை

Image may contain: 1 person, smiling

இந்த உலகில் குருவின் வாக்கு ஒன்றுதான் மனிதனை காப்பாற்ற முடியும். குருவை நம்பியவர்களுக்குக் கேட்டதெல்லாம் கிடைக்கும். யார் யார் நினைவுகள் எப்படி இருக்குமோ, பயனும் அப்படி இருக்கும். குரு சொன்ன வார்த்தையில்  நம்பிக்கை வைத்தவனுக்கு நினைத்தது நடக்கும். பக்தவத்சலனான சத்குரு தன் கிருபையை எல்லா உயிர்களிடமும் எப்பொழுதும் பொழிவார் ! அவரைச் சேவித்தும் உன் துன்பங்கள் தீரவில்லை என்றால் உனக்கு அவரிடத்தில் முழுமையான பக்தி இல்லை. உன் மனதில் அவரை  சந்தேகிக்கிறாய். முழுமையான, உண்மையான பக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு குருவின் அருள் பூரணமாக கிடைக்கும். -  ஸ்ரீ குரு சரித்திரம்


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா  https://youtu.be/R528Bcsq50c http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaib...