Thursday, September 27, 2018

ஸாயீயே ஸாயீபக்தர்களின் தியானம்

Image may contain: 1 person


ஸத்குருவின் பாதங்களில் மூழ்காமல், அவருடைய யதார்த்தமான சொரூபம் கைக்கு எட்டாது. ஆகவே, ஸ்ரீ ஹரியின் சொரூபமான ஞானிகளைக் கைகூப்பி, கிருபை செய்யும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். 

குருவின் பாதங்களில் ஒட்டிக்கொள்வதே நமக்கு எல்லாவற்றுக்கும் மேன்மையான லாபம். ஆகவே, நாம் ஞானிகளின் சகவாசத்திற்கும், பல கோணங்களில் உருவெடுக்கும் அவர்களுடைய அன்புக்கும் ஏங்கும் பண்பை அபிவிருத்தி செய்துகொள்வோமாக. 

முழுக்க முழுக்கத் தேஹாபிமானம் உள்ளவனுக்கு பக்தன் என்று சொல்­க்கொள்ளத் தகுதியில்லை. தேஹாபிமானத்தைப் பூரணமாகத் துறந்தவன்தான் உண்மையான பக்தன். 

எவனிடம் ஞானகர்வம் உள்ளதோ, எவனிடம், தான் சிறந்தவன் என்னும் தற்பெருமை உண்டோ, எவன் டம்பத்தின் வசிப்பிடமோ, அவனிடம் என்ன புகழ் சேரும்? 

தம் குருவின் கீர்த்தியைப் பாடாத அபாக்கியவான்களும், செவிப்புலனைப் பெற்றிருந்தபோதிலும் குருவின் பெருமையைக் கவனமாகக் கேட்காதவர்களும், மந்தமதியே உருவெடுத்து வந்தவர்கள் அல்லரோ 

தீர்த்த யாத்திரை, விரதம், யாகம், தானம் இவற்றைவிட மேன்மையானது தவம். அதனினும் மேன்மையானது ஹரிபஜனை. எல்லாவற்றையும்விட மேன்மையானது குருபாதங்களின்மீது தியானம். 

ஸாயீயே ஸாயீபக்தர்களின் தியானம். ஸாயீயே தேவர்களுக்கும் தேவிகளுக்கும் அவர்கள் செய்யும் அர்ச்சனை. ஸாயீயே அவர்களுடைய ரகசியப் பொக்கிஷமுங்கூட. இப்பொக்கிஷத்தை அவர்கள் ரட்சிக்கவேண்டும்; ஆனால் கஞ்சத்தனம் கூடாது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, September 19, 2018

ஸாயீயின் கதைகளை மனத்தில் ஓடச்செய்வோம்

Image may contain: one or more people


பாபா சொன்ன, ஞானத்தை அருளும் கதைகள் எத்தனையோ !   பக்தி மார்க்கத்தை வழியாகக் காட்டப்பட்ட பக்தர்கள் எத்தனையோ ! 

இக் கதைகளை பயபக்தியுடன் சொல்பவர்களும் கேட்பவர்களும் பூர்ணசாந்தியையும் விச்ராந்தியையும் அனுபவிப்பார்கள். 

பாபாவின் திருமுகத்தி­லிருந்து வெளிப்பட்ட இக் கதைகளைக் கேட்டால், பக்தர்கள் உடல் உபாதிகளை மறந்துவிடுவார்கள்; இடைவிடாது தியானம் செய்தால், உலகியல் தளைகளி­லிருந்து விடுபடுவார்கள். 

பாபாவின் திருமுகத்தி­லிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் தேவாமிருதம் போன்று இனிப்பவை;  கேட்டால் பரமானந்தம் விளையும்; நான் எவ்விதம் இவ்வார்த்தைகளின் மதுரத்தை (இனிமையை) விவரிப்பேன்? 

வித்துவான் போலவும் பேரொழுக்கமுடையவர் போன்றும் நடிக்காமல், இக்கதைகளை யாராவது ஒருவர் பிரவசனம் செய்தால்  (விரிவாக மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல்) ,  அவருடைய பாததூளிகளில் விழுந்து புரண்டாலே எனக்கு மோக்ஷம் நெருங்கும் என்பதை உணர்கிறேன். 

இக் கதைகள் சொல்லப்படும் அசாதாரணமான பாணியும் கற்பனை வளத்துடன் பிரயோகிக்கப்பட்ட வார்த்தைகளும் சொற்றொடர்களும் கேட்பவர்களை மெய்மறக்க வைத்து எல்லாருக்கும் மிகுந்த ஆனந்தத்தை அளிக்கும். 

காதுகள் அவருடைய கதைகளைக் கேட்கவும் கண்கள் அவரை தரிசனம் செய்யவும் ஏங்குவதுபோல, மனம் தெய்வீகமான தியானத்தில் மூழ்கி, பிரக்ஞையை இழந்துவிடும். 

அன்பான குருவே என் அன்னை. அவருடைய கதைகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வாய்மொழிச் செய்தியாகப் பரவும் போது,  நாம் பயபக்தியுடன் அவற்றைக் காதுகளால் கேட்டுச் சேமித்து வைத்துக்கொள்வோம். 

ஸாயீயின் கதைகளை நாம் திரும்பத் திரும்ப மனத்தில் ஓடச்செய்வோம். அன்பெனும் கயிற்றால் கட்டி எத்தனை முடியுமோ அத்தனையையும் சேமிப்போம்.  பிறகு இப் புதையலைப் பரஸ்பரம் ஸமிருத்தியாகப் (தேவைக்கு மேலாகவே) பகிர்ந்துகொள்வோம்.

- கோவிந்த ரகுநாத தாபோல்கர்

Image may contain: one or more peoplehttp://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, September 17, 2018

ஞானிகளின் உறவை நாடுங்கள்


Image may contain: 1 person
மிக சங்கடமான நிலைமை வரும்போது தன்னுடைய கஷ்டத்தைத் தாங்க முடியாமல் மனிதனுக்கு இறைவனின் ஞாபகம் வருகிறது. முழுத்தீவிரத்துடன் பக்திசெய்து இறைவனைக் கூவி அழைக்கிறான். 

கெடுசெயல்களைத் தங்குதடையின்றித் தொடரும்வரை, இறைவனுடைய நாமம் தொண்டைக்கு வருவதில்லை. ஆயினும் முதன்முறையாக இது நிகழ்ந்தவுடன், அவனை ஒரு ஞானியை சந்திக்கும்படி இறைவன் ஏற்பாடு செய்கிறான்.

உலகவாழ்க்கையின் வழிகாட்டி குரு. க்ஷேத்திராடனத்திற்கும் (புனிதப் பயணத்திற்கும்) விரதங்களுக்கும் தர்மம் எது, அதர்மம் எது, என்று அறிந்துகொள்வதற்கும் பற்றறுப்பதற்கும் குருவே வழிகாட்டி. வேதங்களையும் உபநிஷதங்களையும் நமக்குப் பிரவசனம் செய்பவரும் அவரே. 

புத்தியின் கண்ணைத் திறந்துவிட்டு, மனிதனை அவனுடைய நிஜரூபத்தைக் காணும்படி செய்கிறார். மஹா காருண்யமூர்த்தியான குரு, சிஷ்யனின் பக்தியால் விளைந்த ஆவல்களையும் ஏக்கங்களையும் நிறைவுறச் செய்கிறார். 

இதன் பிறகு புலனின்ப ஆசைகள் க்ஷீணமடைந்து (அழிவடைந்து), சிஷ்யன் தூக்கத்திலும் ஞானத்தைப்பற்றிப் பேசுகிறான் !   குருவின் அருளால் விவேகம், வைராக்கியம் என்னும் இரட்டைப் பழங்கள் கைக்கு வந்துசேர்கின்றன. 

ஞானிகள் அடியவர்களுக்குக் கற்பகத்தரு ஆவர். அவர்களுடைய புனிதமான ஸந்நிதியில் இருந்துகொண்டு பிரேமையுடன் அவர்களுக்கு ஸேவை செய்தால், சிரமமான முயற்சிகள் எதுவும் தேவையில்லாது செய்துவிடுவர். 

ஆகவே, எப்பொழுதும் ஞானிகளின் உறவை நாடுங்கள். அவர்கள் சொல்லும் கதைகளைக் கேளுங்கள். எல்லாப் பாவங்களும் ஒழிய அவர்களுடைய பாதங்களை வழிபடுங்கள்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, September 16, 2018

குருவின் கிருபை

Image may contain: 1 person, sitting and text

ஸத்குருவின் பாதங்களைப் பற்றிக்கொள்ளும்போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பாதங்களையே நாம் வணங்குகிறோம்; கண்கூடாகப் பரப்பிரம்மத்தையே வந்தனம் செய்கிறோம்; பரமானந்தம் அடைகிறோம்.

ஸமுத்திரத்தில் ஒருமுறை முழுகிவிட்டால், எல்லாப் புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணியம் கிடைக்கிறதன்றோ ! அதுபோலவே, ஸத்குருவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டால், சகல தேவதைகளையும் அங்கு அடையலாம். 

சாதகப்பட்சி மேகத்தி­லிருந்து விழும் நீர்த்துளிக்காகக் காத்திருப்பதுபோல, ஆன்மீக நாட்டமுள்ள பக்தர்கள் ஸாயீயின் இந்த  அமிருதமயமான கதைக்காகக் காத்திருக்கின்றனர். சகலமான பாபா பக்தர்களும் இந்த அமிருதத்தை அருந்தி எக்காலத்திலும் சுகத்தை அனுபவிப்பார்களாக !

ஸாயீயினுடைய நிர்மலமான கதையைக் கேட்பதால் அவர்களுக்கு உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டட்டும்; பிரேமையால் விழிகளில் கண்ணீர் ததும்பட்டும்; பிராணன் ஸாயீயின் பாதாரவிந்தங்களில் லயிக்கட்டும்;

அபரிமிதமான அன்பினால் மனம் கனியட்டும்; பெருமகிழ்ச்சியால் திரும்பத் திரும்ப மெய்சி­ர்க்கட்டும். குடும்பத்துடன் கதை கேட்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு விம்மிவிம்மி ஆனந்தக்கண்ணீர் பெருக்கட்டும்;

ஸத்குரு ஸாயீயின் கதை கேட்பவர்களுடைய பரஸ்பர விரோதங்கள் ஒழியட்டும்; பேதங்கள் ந­லியட்டும்.   "தமக்குள்ளே சோதனை செய்து பார்த்தால், இதுதான் குருவின் கிருபை உண்டாக்கும் எழுச்சியும் விழிப்பும் என்று அவர்கள் நன்கு அறிவர்." 

குருவின் கிருபையால் ஏற்படும் எழுச்சியும் விழிப்பும் கண்களுக்குப் புலப்படாது. ஏனெனில், அது எல்லா இந்திரியங்களுக்கும் அப்பாற்பட்டது. மூவுலகங்களிலும் தேடினாலும் ஸத்குருவைத் தவிர இதை அளிக்கக்கூடியவர் வேறெவரையும் காணமுடியாது.


           பகவான் ரமணர் மகரிஷி


                     à®¤à¯Šà®Ÿà®°à¯à®ªà¯à®Ÿà¯ˆà®¯ படம்


பக்தர்களால் பகவான் என்றும் மஹர்ஷி என்றும் அன்போடு போற்றப்படும் ரமணர், மதுரையை அடுத்த திருச்சுழியில் வாழ்ந்த சுந்தரம் அய்யர் – அழகம்மை தம்பதியினருக்கு 30-12-1879ல் மகவாகத் தோன்றினார். பெற்றோர்கள் அவருக்கிட்ட பெயர் வேங்கடராமன். அரசு பதிவு பெற்ற வக்கீல் மணியமாகப் பணியாற்றி வந்த தந்தை சுந்தரம் அய்யர் குழந்தைகள் மீது கவனம் செலுத்தி மிக்க அன்புடன் வளர்த்து வந்தார்.  திருச்சுழியில் பாலர் வகுப்பில் பயின்ற வேங்கடராமன் பின்னர் திண்டுக்கல்லில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றான். அதன் பின்னர் மதுரை ஸ்காட் இடைநிலைப்பள்ளியில் இடைநிலை வகுப்பு பயின்றான். மூத்த சகோதரன் நாகசாமியும் வேங்கடராமன் படித்த அதே பள்ளியில் பயின்று வந்தான்.
வேங்கடராமனுக்கு 12 வயது நடந்து கொண்டிருக்கும் போது திடீரென தந்தையார் சுந்தரமய்யர் காலமானார். அவர் மறைவால் குடும்பம் நிலைகுலைந்தது. சுந்தரம்மய்யரின் இளைய சகோதாரர்கள் சுப்பய்யரும், நெல்லையப்பய்யரும் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். வேங்கடராமன் மதுரை அமெரிக்கன் மிஷன் ஹைஸ்கூலில் உயர்கல்விக்காகச் சேர்க்கப்பட்டான். ஆனாலும் படிப்பை விட சக மாணவத்தோழர்களுடன் விளையாடுவதும், நீந்துவதும், குஸ்தி போடுவதும் ஆடிப்பாடுவதும் அவனுக்குப் பிடித்தமானதாக இருந்தது.

அண்ணாமலை

ஒருநாள் உறவினர் ஒருவர் வேங்கடராமனின் வீட்டிற்கு வந்தார். அவரை அதற்கு முன் கண்டதாக வேங்கடராமனுக்கு நினைவில்லை. அதனால் நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்டான். அதற்கு அவர் ‘அருணாசலத்திலிருந்து வருகிறேன்’ என்றார். ’அருணாசலம்’ என்ற வார்த்தையைக் கேட்டதுமே சிறுவனுக்கு ஓர் வியப்பு உண்டானது. உள்ளத்தில் அதுவரை இல்லாத ஓர் ஆனந்தப் பரவசம் ஏற்பட்டது. ஆனாலும் அதை இன்னதென்று அறிய இயலாத வேங்கட ராமன், ‘அது எங்குள்ளது?’ என்று கேட்டான் அதே ஆர்வத்துடன். ‘அடடா, பத்தாம் வகுப்பு படிக்கும் பையன் நீ. உனக்கு அருணாசலத்தைத் தெரியாதா? திருவண்ணாமலை என்ற ஷேத்திரத்தின் இன்னொரு பெயர்தான் அருணாசலம்’ என்றார் உறவினர்.

அருணாசலம்

 ”அருணாசலம்” என்ற அந்தப் பெயரைக் கேட்டது முதல் இன்னதென்று விளக்க இயலாத ஒரு ஆனந்த அதிர்வு நிலை அடிக்கடி ஏற்படத் துவங்கியது. பாடங்களில் மனம் ஒப்ப மறுத்தது. பெரிய புராணத்தை விரும்பிப் படித்தான். ஆன்மீக உணர்வு தலை தூக்கியது. அடிக்கடி மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குச் செல்வதும், அம்மையையும், அப்பனையும் அருள் வேண்டி வழிபடுவதும் அவன் வழக்கமானது.
           
    ஒருநாள்… இரவுநேரம்… சிற்றப்பாவின் வீட்டின் மாடியறையில் வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்த வேங்கட ராமனுக்கு, திடீரென ‘சாகப் போகிறோம்’ என்ற எண்ணம் தோன்றியது. உடல் வியர்த்தது. கை, கால் நடுங்கியது. ’சாவு என்றால் என்ன, அது எப்படி இருக்கும்’ என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்படியே கை, கால்களை நீட்டி, விறைத்த கட்டை போலப் படுத்துக் கொண்டான். கண்களை இறுக மூடிக் கொண்டான். மூச்சை முயன்று அடிக்கினான். ”இந்த உடல் செத்து விட்டது. ஆனால் இந்த உடலையும் மீறி ஓர் உணர்வு உயிர்ப்போடு இருக்கிறதே, அது என்ன? நான் என்பது இந்த உடலன்று; நான் என்பது இந்த மூச்சன்று; நான் என்பது இந்த நினைவுமன்று. இவற்றையெல்லாம் தாண்டிய தனிப்பொருள் ஒன்று என்னுள் ஒளிர்கிறதே, அதுவே நான். ஆம் அதுவே என்றும் அழிவற்ற நித்ய வஸ்துவாகிய ஆன்மா. அது பிறப்பதுமில்லை. இறப்பதுமில்லை. எங்கும் வியாபித்திருக்கும் பிரம்மமே அது. அதுவே நான்.” – இந்த எண்ணம் உறுதிப்பட்டவுடன், தான் யார் என்ற உண்மை தெரியவந்தது. அத்துடன் அவனது வாழ்வே மாறிப் போயிற்று.
           
                  நாளாக நாளாக படிப்பின் மேல் நாட்டம் குறைந்தது. விளையாட்டிலும் ஈடுபாடு போய் விட்டது. தன்னுள் ஆழ்ந்து கண்களை மூடி அமர்ந்திருப்பதும், அல்லது எங்கோ வெறித்து நோக்கியவாறு பிரம்மத்தில் தோய்ந்திருப்பதும் வழக்கமானது. ஒருநாள் வீட்டுப்பாடங்கள் செய்து கொண்டிருந்தவன் அதில் திடீரென சலிப்பும், வெறுப்பும் தோன்ற கண்களை மூடி அமர்ந்தான். அதைக் கண்ட அண்ணன் நாக்சுந்தரம், ”இப்படியெல்லாம் இருக்கிறவனுக்கு இதெல்லாம் என்னத்துக்கு” என்றார் கோபத்துடன். ”ஆமாம், இவர் சொல்வது உண்மைதானே! இப்படியெல்ல்லாம் இருக்க நினைக்கும் எனக்கு இங்கே என்ன வேலை இருக்கிறது. என் தந்தை அருணாசலம் இருக்கும் இடத்தில் அல்லவா நான் இருக்க வேண்டும்’ என்ற எண்ணம் தோன்றியது.
          
        ”எனக்கு பள்ளியில் சிறப்பு வகுப்பு இருக்கிறது. ஆகவே நான் போக வேண்டும்” என்றான் அண்ணனிடம். அண்ணனும் ”அப்படியானால் கீழே பெட்டியில் ஐந்து ரூபாய் இருக்கிறது. போகும் வழியில் என் கல்லூரியில் எனக்கான மாதக் கட்டணத்தைச் செலுத்தி விட்டுச் செல்” என்று கூறினார். வீட்டினுள் சென்றான். வேக வேகமாக உணவருந்தினான். சித்தி ஐந்து ரூபாயை அவனிடம் கொடுத்தாள்.  தன வழிச்செலவுக்கு மூன்று ரூபாய் மட்டும் போதும் என்று நினைத்தான் வேங்கடராமன். தன் நோட்டுப் புத்தகத்தில் இருந்து ஒரு காகிதத்தைக் கிழித்தான்.
          
        “ நான் என்னுடைய தகப்பனாரைத் தேடிக் கொண்டு, அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பி விட்டேன். இது நல்ல காரியத்தில் தான் பிரவேசித்திருக்கிறது. ஆகையால் இதற்காக யாரொருவரும் விசனப்பட வேண்டாம். இதைப் பார்ப்பதற்காக பணமும் செலவு செய்ய வேண்டாம். உன் சம்பளத்தை இன்னும் செலுத்தவில்லை. ரூ. 2 இதோடு கூட இருக்கிறது.
இப்படிக்கு
—————

         - என்று எழுதி வைத்து விட்டுக் கிளம்பி விட்டான். ’நான்’ என்று ஆரம்பித்து ‘இது’வாகி கடைசியில் ’—–’ என்று கடிதத்தை முடித்து தனக்குள்ளே தான் ஒடுங்கி, பேரும், ஊரும் அற்றிருப்பதை சூட்சுமமாக பகவான் பால ரமணர் உலகுக்கு அன்றே உணர்த்தி விட்டார். ஆனால் அதை அப்போதே உணர்வார்கள் யாருமில்லை.

பால ரமணர்
            
                    ரயிலில் ஏறி விழுப்புரத்தில் இறங்கி மாம்பழப்பட்டு வரை சென்று பின்னர் அங்கிருந்து கால்நடையாகவே நடந்து அண்ணாமலையை அடைந்தார் பால ரமணர். பின் அதுவே அவரது நிரந்தர வாசஸ்தலமாயிற்று. பாதாள லிங்கக் குகை, மாமரத்துக் குகை, பவழக்குன்று, விருபாக்ஷிக் குகை, ஸ்கந்தாச்ரமம் என பல இடங்களிலும் மாறி மாறி வசித்தவர், பின்னர் தாயை சமாதி செய்வித்த அடிவாரைத்தையே தமது நிரந்தர வாசஸ்தலமாகக் கொண்டார். அதுவே பின்னர் ரமணாச்ரமம் ஆயிற்று. அவரது அருள் ஒளி தரிசனம் பெற பலரும் திரண்டு வந்தனர். ஆன்மீக சூரியனாய் அவர் தகிக்க அவரது ஒளி தரிசனத்தைப் பெற உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டில் இருந்தும் பல அறிஞர்கள் வந்தனர். பகவானின் அருளமுதம் பருகினர். அவர் புகழைப் பரப்பினர்.ரமணர் செய்த அற்புதம்

                ரமணர் விருபாஷிக் குகையில் தங்கி இருந்த காலம். ஒரு நாள் மாலை வேலையில் திரளாக பக்தர்கள் கூட்டம் வந்திருந்தது. வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக ஸ்ரீ பகவானை தரிசித்துக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் திடீரென மழை பொழியத் துவங்கியது. மெதுவாக ஆரம்பித்த மழை பேய் மழையாகக் கொட்டித் தீர்த்தது. தரிசிக்க வந்தவர்கள் யாரும் கீழே இறங்கிச் செல்ல முடியாத நிலை. மாலை கடந்து இரவும் வந்து விட்டிருந்தது. இரவு எட்டு மணியைக் கடந்து விட்டதால் ஒவ்வொருவருக்கும் நல்ல பசி ஏற்பட்டது. ஆனால் அத்தனை பேருக்கும் போதுமான உணவு கையிருப்பில் இல்லை. பகவானின் அடியவரான பழனிசாமிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பகவானின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
          
               பகவானும், ‘சரி, சரி மழை விடுவதாகத் தெரியவில்லை. இவர்களோ பாவம் பசிக்களைப்பில் இருக்கிறார்கள். அதனால் இருக்கும் உணவை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடு’ என்றார்.
           
                   உடனே பழனிசாமி உணவை  சிறு சிறு உருண்டையாக உருட்டி வந்திருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் அளிக்கத் தொடங்கினார். அவர்களும் அந்தச் சிறு கவளங்களை ரமணப் பிரசாதமாக நினைத்து வாங்கி உண்டனர். மூன்று பேருக்கு மட்டுமே வைத்திருந்த அந்த உணவு கிட்டத்தட்ட முப்பது பேர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. சற்று நேரத்தில் அனைவருக்கும் வயிறு நிறைந்து விட்டதுடன் அறுசுவை உணவு உண்ட திருப்தியும்  ஏற்பட்டது. தண்ணீர் கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு வயிறு நிறைந்திருப்பதைக் கண்டு ‘எல்லாம் ரமணரருள்’ என்று எண்ணித் தொழுதனர் பக்தர்கள். எல்லாவற்றிற்கும் காரண சூத்ரதாரியான ரமணரோ ஒன்றும் பேசாமல் எங்கோ மௌனமாய் நோக்கிக் கொண்டிருந்தார்.

      
                 இவ்வாறு பற்பல அற்புதங்கள் புரிந்த மனிதர் மனிதர்கள் மட்டுமல்லாது காகம், பசு, மயில், குரங்கு, நாய், அணில் என மிருகங்கள் மீதும் அளவற்ற அன்பு பூண்டு ஒழுகினார். காகத்திற்கும், பசு லக்ஷ்மிக்கும் முக்தி அளித்தார். தம்மை நாடி வந்தவர்களுக்கு ஆன்மீக உணர்வைத் தூண்டி உள்ளொளி எழுப்பினார். அவர்கள் தம்மைத் தாமே உணர்ந்து உயர வழிகாட்டினார்.


              நாளடைவில் பகவானை புற்றுநோய் தாக்கிற்று. பகவான் தம்மை உடல் என்று நினைக்காததால் அந்த நோய் தாக்குதல் குறித்து கவலைப்படவில்லை என்றாலும் அதனால் கடும் வேதனையைச் சந்தித்தார். பல மருத்துவச் சிகிச்சைகளுக்கும் கட்டுப்படாத அது, அவரைப் பெரிதும் வருத்தியது. படுத்த படுக்கையாகவும் சில நாட்கள் இருக்க வேண்டி வந்தது. 14-04-1950 இரவு 8.47 மணிக்கு பகவான் மகா சமாதி அடைந்தார். இவர் உயிர் பிரிந்த தருணத்தில், ஆசிரமத்திலிருந்து மிகப் பெரிய பேரொளி ஒன்று தோன்றி, தெற்கிலிருந்து வடக்காகப் புறப்பட்டு, அருணாசல மலைக்குள் சென்று கலந்தது. இதன் மூலம் அருணாசலரே, பூவுலக மக்களின் துயர் துடைக்க ரமணராய் அவதரித்தார் என்பது உண்மையானது.


அவரது இறப்பிற்கு தாயாரின் சமாதியை ஒட்டி அவரது உடல் திருமந்திர முறைப்படி சமாதி செய்விக்கப் பெற்றது. இன்றும் ரமணாச்ரமத்திலிருந்து தம்மை நாடி வரும் அன்பர்களுக்கு சூட்சும ரீதியில் பகவான் உதவிக் கொண்டுதான் இருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, September 12, 2018

பாபாவின் ஓரே போதனை

Image may contain: one or more people

பாபா யோகாசனத்தையோ, பிராணாயாமத்தையோ, இந்திரியங்களைப் பலவந்தமாக அடக்குவதையோ, மந்திரத்தையோ, தந்திரத்தையோ, யந்திர பூஜையையோ, யாருக்கும் போதிக்கவோ, விதிக்கவோ இல்லை. பாபாவின்  ஓரே போதனை பொறுமை, நம்பிக்கை - ஸ்ரீ சாயி சத்சரித்ரா - 10. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, September 10, 2018

குருவே ஸத்தியமான பிரம்மம்.


உலகியல் வாழ்க்கைக்கே ஸஹாயம் (உதவி) செய்யமுடியாதவர்களால் பரமார்த்த (ஆன்மீக) வாழ்வுக்கு எப்படி உதவி செய்யமுடியும்? சம்பந்தியானாலும் சரி, மாப்பிள்ளையானாலும் சரி, மனைவியேயானாலும் சரி, நம்முடன் சேர்ந்து பாரம் சுமப்பார்கள் என்று யாரையுமே எதிர்பார்ப்பதற்கில்லை. 

அன்னையும் தந்தையும் 'இவன் என் மகன்' என்று சொந்தம் கொண்டாடுவர். புத்திரனோ சொத்தின்மேல் கண்வைப்பான். கணவன் நெடுங்காலம் வாழவேண்டுமென்று மனைவி கண்ணீர் சிந்தி பிரார்த்தனை செய்வாள். ஆனால், பரமார்த்த வாழ்வில் கூட்டுச் சேர்ந்து செயல்பட யாருமே இல்லை !

பரமார்த்த வாழ்வில் உதவுவதற்கு இன்னும் வேறு யார் இருக்கிறார் என்று நிதானமாகச் சிந்தனை செய்து பார்த்தீரானால், கடைசியில் கிடைப்பது "நீங்களே, நீங்கள் ஒருவரே !"

நித்தியம் எது, அநித்தியம் எது என்பதை அறிந்து, இவ்வுலக சம்பந்தமாகவும் மேலுலக சம்பந்தமாகவும் செய்யும் செயல்களுக்குப் பலன் நாடுவதைத் துறந்தபின், அஷ்டாங்க யோகம் பயின்று மோக்ஷம் அடைபவர் பாக்கியசா­யாவார். 

வேறொருவர்மேல் சார்ந்து இருப்பதை விடுத்துத் "தம்மிலேயே பலமான நம்பிக்கை வைத்துக் கச்சைக்கட்டிக்கொண்டு எவர் செய­ல் இறங்குகிறாரோ," அவரே பரமார்த்த வாழ்வில் வெற்றி பெறுகிறார் (மோக்ஷம் அடைகிறார்). 

பிரம்மம் நித்தியம்; உலகவாழ்வு அநித்தியம். குருவே ஸத்தியமான பிரம்மம். அநித்தியமான விஷயங்களைத் துறந்துவிடுங்கள்; "குருவைப்பற்றியே சிந்தியுங்கள். இந்த பா(BHA)வனையே ஆன்மீக சாதனை மார்க்கம்."


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, September 8, 2018

ஸாயீபாதங்களில் வணங்கி தஞ்சமடைந்தனர்

No automatic alt text available.

சிர்டீயைப்பற்றிச் சிலர் சிலவிதமாகவும், வேறு சிலர் வேறுவிதமாகவும், பலர் பலவிதமாகப் பேசினார்கள். ஆனால், அவை எல்லாவற்றையுமே நாம் விழுங்கிவிட முடியாது. 


சிலர் சொன்னார்கள், ''தரிசனத்திற்குப் போனால் ஸாயீபாபா தக்ஷிணை கேட்கிறார். சாதுக்கள் திரவியத்தை சம்பாதிக்க முயலும்போது அவர்களுடைய சாதுத்துவம் அடிபட்டுவிடுகிறதன்றோ !

''குருட்டு நம்பிக்கை நல்லதன்று. பிரத்யக்ஷமாக அனுபவம் கிடைத்த பிறகே நான் என்னுடைய மனத்தில் எவ்வழி செல்வதென்று முடிவுசெய்வேன்." 

''பணத்தின் மீது நாட்டம் கொண்டவரின் ஞானித்துவத்தை என்னால் மெச்ச முடியவில்லை. நான் தக்ஷிணை கொடுக்கமாட்டேன். நம்முடைய வணக்கத்திற்கு அவர் தகுதியுள்ள பாத்திரமல்லர்."

''எது எப்படியிருப்பினும், நான் சிர்டீக்குச் சென்று அவரைப் பேட்டி காண்பேன். ஆனால், பாதங்களுக்கு வந்தனம் செய்யமாட்டேன்; தக்ஷிணை கொடுக்கவும் மாட்டேன்."

எவரெவரெல்லாம் மனத்தில் இந்தக் குதர்க்க வாதத்தை திடப்படுத்திக்கொண்டு கிளம்பினரோ, அவரவரெல்லாம் தரிசனயோகம் கிடைத்தபின் ஸாயீயை சரணடைந்தார்கள். 

எவரெவரெல்லாம் ஸாயீயைக் கண்ணால் கண்டார்களோ, அவரவரெல்லாம் தங்களுடைய நிலையில் உறுதியாக நின்றனர். மறுபடியும் சந்தேகங்கொண்டு திரும்பிப்  பார்க்கவேயில்லை.  ஸாயீபாதங்களில் மூழ்கிவிட்டனர் !

அவர்கள் தீர்மானம் செய்துகொண்டு வந்ததை அறவே மறந்து குற்றவுணர்ச்சியால் பாதிக்கப்பட்டு ஸாயீபாதங்களில் வணங்கி தஞ்சமடைந்தனர்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவால் அருளப்பட்ட அத்தனையும் நன்மைக்கே !

பாபாவால் நமக்கு அருளப்பட்ட அத்தனையும் நிச்சயமாக நன்மைக்காகவே ஆனது என்னும் உறுதியான நம்பிக்கையுடன் பாபா அருளிய யாவற்றையும் மகிழ்ந்து அனுபவிக்...