Tuesday, October 30, 2018

பாபாவின் மிகவும் விசேஷமான சக்திகள் கொண்ட ஆலயம்


Image may contain: one or more people and closeup

பாபாவை, குறிப்பிட்ட ஆலயத்தில் மட்டுமே மிகவும் விசேஷமான சக்திகள் கொண்டவராக உருவகப்படுத்துவது, மேலும் பக்தர்களின் பிரார்த்தனைகளை பாபாவிடம் எடுத்துக்கூறும் பிரதிநிதிகள் போன்ற மனப்போக்கில்  பலர் ஈடுபடுகிறார்கள். உண்மை அதுவல்ல, எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் எல்லோருடைய வேண்டுதல்களும், துயரங்களுக்கும் பாபா செவிசாய்க்கிறார். பக்தர்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, பாபா தமது பக்தர்களை தமது சொந்தக் குழந்தைகள், சிசுக்கள் போலவே நேசித்தார், நேசித்தும் வருகிறார்.
ஒருசமயம், பாபா  ஒரு குழந்தையைச் சுட்டிக் காட்டி, " இக் குழந்தை தூங்கும் போது நாம் அருகிலிருக்க வேண்டும். விழித்திருந்து, கவனித்து, சிரமம் ஏற்கவேண்டும் " எனக் கூறினார். பக்தர்களின்பால் பாபாவின் அக்கறை அத்தகையது. எப்போதுமே பாபா, தமது பக்தர்களின் பின்னாலேயே இருந்து பக்தர்களை தாங்கி வருகிறார். இதுவே உண்மை. இதில் முழுநம்பிக்கை கொள்ளுங்கள். இந்த உண்மையை கிரகித்து கொள்ளும்போது உங்களது மனதில் அச்சம், கவலை எதுவுமில்லாமல் போகும்.
  
  " நான் எங்கும் இருக்கிறேன் - நீரிலும், நிலத்திலும், காய்ந்துபோன    கொம்பிலும், மனிதர்களிடையேயும், வனத்திலும், இந்த தேசத்திலும்,  வெளிதேசங்களிலும் எங்கும் இருக்கிறேன். நான் எந்த தேசத்தின்  எல்லைகளுக்கும் உட்பட்டவன் அல்லன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா."   

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, October 29, 2018

பாபா உன்னுடனேயே இருக்கிறார்





1918 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பாபுஜி சாஸ்திரி என்பவர் ஒருவர், கங்கை நீரை கொண்டுவந்து பாபாவின் திருவடிகளுக்கு அபிஷேகம் செய்து, பிறகு தாஸ நவமிக்காக ஸஜ்ஜன்காட்டுக்கு போக அனுமதி கேட்டார். பாபா 
' நான் இங்கிருக்கிறேன். அங்கும் கூட இருக்கிறேன் ' என்றார். பின்னர் பாபுஜி ஸஜ்ஜன்காடுக்குச் சென்றார். புனித தாஸ நவமியன்று விடிகாலை 5 மணிக்கு பாபுஜியின் முன் பாபா நேரில் தோன்றினார். பாபா எங்கும் உள்ளார். ஒரு குரு, தமது பக்தர்களின் ஆத்மீக, லௌகீக சம்பந்தமான நலன்களைக் காப்பதற்கு, தமது குரு தமக்கு எந்தவிதமான வழிகளைக் கையாண்டாரோ அவற்றையே தாமும் மேற்கொள்வது வழக்கம். சாயிபாபாவின் கூற்றுப்படி, அவருடைய குரு, பாபா எங்கிருந்தாலும் அவருடன் தாம் இருப்பதாக வாக்களித்துள்ளார். சாயிபாபாவும் அம்முறையையே தம் பக்தர்களிடம் கடைபிடித்தார். அவர் கூறியுள்ளார்: " எப்பொழுது எங்கே நீ என்னை நினைத்தாலும் நான் உன்னுடன் இருப்பேன்."
நம்பிக்கை இல்லாதவர்களுக்கு பாபா தெரிவது இல்லை. நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவர் எங்கிருந்தாலும் தரிசனம் தருவார். மக்களுடைய
மனச்சாய்வு எப்படியோ அப்படியே நேரிடை அனுபவம் ஏற்படுகிறது.-(அத் 43).
மேலும்  பாபாவுடன் சமகாலத்தில் வாழ்ந்த சந்திரா பாய் என்ற அம்மையார் தமது அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார். "1918-ம் ஆண்டு தசராவுக்கு முன்று மாதங்களுக்கு முன்பு தாம் உடலை விட்டபிறகும் என் நல்வாழ்வைப் பற்றி எண்ணியிருந்தார். "பாய்!(அவர் என்னை அப்படித்தான் அழைப்பார்) நீ என்னைக் காண இனி இங்கே வந்து சிரமப் பட வேண்டாம். நீ எங்கிருந்தாலும், உன்னுடனேயே நான் இருக்கிறேன்" என அவர் என்னிடம் உறுதி அளித்தார் .

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, October 28, 2018

நீங்கள் பாபாவின் உண்மையான பக்தனா ?

                         SHIRDI SAIBABA SAYINGS YOUTUBE CHANNEL
             https://www.youtube.com/user/saimaharajkijai/featured?disable_polymer=1

Image may contain: 1 person

எந்த வித சம்பிரதாயமான பூஜை முறைகளையோ, விரதங்களையோ எனது பக்தனிடமிருந்து நான் எதிர்பார்ப்பது இல்லை.எந்த சூழ்நிலையிலும் என்மீது மாறாத நம்பிக்கை வைத்திருப்பவனையே மிகவும் நேசிக்கிறேன்.- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

அதாவது, சம்பிரதாய பூஜை முறைகளையோ, உடலை வருத்தும் விரத முறைகளையோ செய்து பாபாவிடமுள்ள பக்தியை மெய்ப்பிக்க முயற்சி செய்ய வேண்டாம். வாழ்க்கை சூழலில் நிச்சயமாக எந்த ஒரு மனிதனும் பிரச்சனையை சந்தித்தே தீருவான். அந்த சமயத்தில், தீர்வு நாடி வேறு எங்கும் செல்லாமல், பாபாவை விட்டு விலகாமல், எவ்வளவு துன்பத்திலும் மாறா நம்பிக்கையோடு  பாபாவின் அண்மையில் இருப்பதே உண்மையான பக்தனுக்கு அழகு, அத்தகைய பக்தனையே பாபா மிகவும் நேசிப்பதாக கூறியுள்ளார்..  * ஓம் சாயிராம் *

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, October 27, 2018

ஸமர்த்த ஸாயீயின் தரிசனம்

                  click here;  samadhi mandhir bajan


      Image may contain: 5 people, people standing and outdoor




ஸமர்த்த ஸாயீயின் தரிசனம் சுவாமியின் மனத்தை உருக்கியது. அன்பு, விழிகளைக் கண்ணீரால் நிரப்பியது. பொங்கிவந்த உணர்ச்சி தொண்டையை அடைத்தது. 

சித்தம் மகிழ்ந்தது. கண்கள் உல்லாசத்தால் மலர்ந்தன. பாபாவின் பாததூளியில் ஸ்நானம் செய்வதற்கு மனம் துடித்தது. 

அந்த அழகிய திருவுருவத்தைப் பார்த்த சுவாமியின் இதயமும் கண்களும் நிலைக்குத்தி நின்றன. மோஹத்தால் ஆட்கொள்ளப்பட்டு பாபாவையே பார்த்துக்கொண் டிருந்தார். 

குதர்க்கம் மனத்தை விட்டு ஒழிந்தது. தரிசனம் தந்த ஆனந்தத்தால் இதயம் பொங்கிவழிந்தது. பாபாவின் ஸகுணரூபம் கண்களில் பதிந்தது. புவா (சுவாமி) ஆனந்தக்கட­லில் மிதந்தார் 

கண்களால் மஹானுபாவரைப் பார்த்த சோமதேவ சுவாமி பெருங்களிப்பு அடைந்தார். தம்முள்ளேயே மூழ்கி பரமசாந்தி நிலையை எய்தினார். அவ்விடத்திலேயே வாழ்நாள் முழுவதும் வசிக்கலாம் என்றும் நினைத்தார். 

தரிசனம் ஒன்றே விகற்பங்களை அகற்றியது. புத்தி அசைவற்று நின்றது. வேற்றுமை உணர்வு விலகியது. ஐக்கிய உணர்வு மேலோங்கியது. 

வார்த்தைகள் வெளிவர மறுத்ததால், வாய் மௌனம் சாதித்தது. கண்கள் இமைக்க மறந்தன. அகத்திலும் புறத்திலும் பிரபஞ்சப் பேருணர்வு நிரம்பி வழிந்தது. விளக்கமுடியாத ஓர் அமைதி அவரை விழுங்கியது 

ஆரம்பத்தில், கொடியைக் கண்டு அவர் திரும்பிவிட முயன்றார். ஆனால், பிறகோ, பிரேமையால் விளைந்த கண்ணீரால் விழிகள் நிரம்பின. அஷ்டபா(BHA)வம் அவரை ஆட்கொண்டது. பாபாவின் மீதான பிரேமையில் மூழ்கினார். 

"எவ்விடத்தில் உன் மனம் பூரணமாக ஒருமைப்படுகிறதோ, அவ்விடமே உன் இடம் என அறிவாயாக !"  தம் குருவின் இந்த உபதேசம் அவருக்கு ஞாபகத்திற்கு வந்தது. புவா பிரேமையால் தாக்குண்டார்.


- சோமதேவ சுவாமியின் ஸாயீதரிசன அனுபவம்


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, October 26, 2018

பாவ கணக்கை தீர்க்கும் வழி

Image may contain: 1 person

ஸ்ரீ கிருஷ்ணர், "ஒருவர் அவரது கர்ம பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று கூறியுள்ளாரே ஒழிய அதை விழிப்பு நிலையில்தான் அனுபவிக்க வேண்டும் என்று கூறவில்லை."  அவற்றை கனவு நிலைகளிலும் கூட அனுபவித்து கழிக்கலாம் என்று கூறியுள்ளார்."

ஒரு மனித உடலில் பத்து வருடங்கள் கஷ்டப்பட்டு அனுபவித்துத் தீர்க்க வேண்டிய கர்மாவை மனம் ஒன்றி மனதால் வருந்தி மானசீகமாகவோ அல்லது மன உளைச்சலாகவோ கனவில் சில மணி நேரங்களில் அனுபவித்துத் தீர்த்துவிடலாம்.  இந்த மாதிரி செயலால் கர்ம வினைகளின் பாதிப்பைப் போக்கிவிடலாம்.

சேவை செய்வதாலும் நம் பாவச் செயல்களின் (பலன்கள் கேடுகள்) குறைந்துவிடும்.  தெய்வங்களின் படங்கள் திருஉருவங்கள் புனிதமானவை.  அவற்றிற்கு நாம் சேவை செய்யும்போது நம் பாவங்கள் அவற்றிற்கு சென்றுவிடும்.  அந்த புண்ணிய பலன்கள் நமக்கு வந்து சேர்ந்துவிடும்.

நாம் ஸத்புருஷர்களுக்கும் சரியான யோக்யதை உள்ளவர்களுக்கும் தானம் செய்யும்பொழுதும் இது போன்ற பரிமாற்றம் நடைபெறுகிறது.

ஸமர்த்த ஸத்குருவை நாம் தியானம் செய்யும்பொழுது இது போன்ற பரிமாற்றம்,  தியானம் என்ற ஊடகம் மூலமாக நடைபெறுகிறது.

ஒரு ஸத்குருவானவர்,  ஒரு சேவகன் செய்யும் சேவைகளை ஏற்றுக்கொண்டு அந்த சேவையை ஒரு ஊடகமாகக் (கருவியாக) கொண்டு அந்த பக்தனிடமுள்ள பாவங்களைப் போக்கி "தன் தவப்பயனை" அந்த சேவகனுக்கு வழங்குகிறார்.

யாரேனும் ஒருவர் அவரது பாவச் செயல்களின் பயனை அனுபவித்தே தீர வேண்டும்.  ஆனால் தெய்வங்களும், தெய்வீக அவதாரங்களும் (ஸத்குருக்களும்) அபரிமிதமான சாந்தியும் தெய்வீக ஒளியும் பிரகாசமும் அக்னி மாதிரி தீவிர சக்தியும் கொண்டிருப்பதால் பக்தனின் கர்மவினைகளை பொசுக்கி சாம்பலாக்கி விடுவார்கள்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, October 24, 2018

நாயும் பாபாவே

Image may contain: 2 people, closeup

பாபா ஷீரடியில் ஐந்து வீடுகளிலிருந்து தம் உணவை பிச்சை எடுத்தார். அதைக் கொண்டு வந்து மசூதியில் உண்பார். ஷீரடியில் அதிகமாகத் தங்கிவந்த திருமதி ஜி. எஸ். கபர்டே என்னும் பெண்மணி, பாபாவுக்குத் தினமும் மசூதியில் உணவை நைவேத்தியமாக அளித்து வந்தாள்.  ஒருமுறை பாபாவைத் தன் விடுதிக்குச் சாப்பிட வரும்படி அழைத்தாள். சிறுது காலம் இவ்வாறே தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவரை அழைத்தாள். ஒருநாள் பாபா, அவளது வீட்டிற்கு வருவதாக உறுதியளித்தார்; ஆனால் வரவில்லை. மற்றொரு நாளும் அவள் பாபாவை அழைத்தபோது, அவர் வருவதாக உறுதி அளித்தார்.
அன்றைய தினம் அவள் விதவிதமான பதார்த்தங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும்போது, அந்த வாசனையால் தூண்டப்பட்ட ஒரு நாய் அங்கு வந்தது. பாபாவுக்காகத் தூய்மையாகத் தயாரிக்கும் பண்டங்களை அது தூய்மைகெடச் செய்து விடுமோ என்று திருமதி கபர்டே பயந்தாள். அதை விரட்டுவதற்குக் கைக்கு எளிதாக எதுவும் கிடைக்காமற் போகவே, அடுப்பிலிருந்து எரிந்து கொண்டிருக்கும் விறகு ஒன்றை எடுத்து நாயின் மேல் ஏறிய ,அது ஓடிவிட்டது. அன்றும்கூடப் பாபா வரவில்லை. எனவே அவள், நைவேத்தியத்தை மசூதிக்கு எடுத்துச் சென்றாள். அவளைப் பார்த்தவுடன், பாபா  " நான் உன் வீட்டிற்க்கு வந்த போது, எரிந்து கொண்டிருக்கும் விறகுக் கட்டையை என்மேல் எறிந்தாய் " என்றார்.திருமதி கபர்டே அவர் கூறியதன் பொருளை உணர்ந்து, தனது அறியாமைக்காக வருந்தினாள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, October 22, 2018

ஸ்ரீ ஸாயீ ஸத்சரித்திரம் எல்லாருக்கும் ஆனந்தம் அளிக்கும்

Image may contain: 1 person, text



பாமரனாகிய என்னுடைய சக்தி எம்மாத்திரம்? அவருடைய கீர்த்தியை என்னால் எப்படிப் பாடமுடியும்? பக்தர்களின்மீது உண்டான பிரீதியால் அவரே இந்தப் போதியைக் கிருபையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அந்த ஸாயீயின் பாதங்களில் நான் விழுந்து வணங்குகின்றேன். கதை கேட்பவர்களுக்கு வந்தனம் செய்கிறேன். ஞானியரையும் சாதுக்களையும் சான்றோர்களையும் வணங்குகின்றேன். அவர்கள் அனைவரையும் பிரேமையுடன் ஆ­லிங்கனம் செய்கிறேன் (தழுவுகிறேன்).

ஸாயீ ஸஹஜமாகவும் வேடிக்கையாகவும் பேசுவார். ஆனால், அந்த வார்த்தைகளின் கர்ப்பத்தில் பூரணமான நீதிநெறிகள் நிறைந்திருக்கும். எவர் நித்தியசாந்தியில் மூழ்கியிருந்தாரோ, அவரை தியானம் செய்பவர்கள் மஹத்தான அனுபவங்களைப் பெறுகின்றனர்.

அவரை சூரியனுக்கு உபமானமாகக் கூறமுடியாது. ஏனெனில், சூரியன் மாலையில் மறைந்துவிடுகிறான். சந்திரனுக்கும் ஒப்பிடமுடியாது. ஏனெனில், சந்திரன் தேய்ந்து வளர்பவன். ஸாயீ எப்பொழுதும் ஸம்பூர்ணமானவர் அல்லரோ !

ஹேமாட் பந்தை விட்டுத்தள்ளுங்கள்; காரணம், ஸத் சரித்திரத்தை இயற்றியவர் அவர் அல்லர். பக்தர்களின் நன்மைக்காக ஸாயீயால் உபயோகப்படுத்தப்பட்ட ஒரு கருவி மாத்திரமே அவர்.

தெய்வாதீனமாகக் கண்டெடுத்த முத்துச்சிப்பியைத் தூக்கியெறிபவர் அதனுள் இருக்கும் முத்தையும் இழந்துவிடுகிறார். நன்மை பயக்கக்கூடிய விஷயங்களில் எவரும் உதாசீனம் காட்டக்கூடாது. அரசமரம் எப்படி உற்பத்தியாகியிருந்தால் நமக்கென்ன? நிழலை அனுபவித்தால் போதுமே !

இங்கே, சொல்­லின் மாத்திரையை (எழுத்தொ­லியை) நிர்ணயிப்பவர் ஸாயீயைத் தவிர வேறெவரும் அல்லர். கேட்கப்படும் விஷயமும் கேட்பவரும் கேட்கும் செய்கையும் அவரே ஆவார். இம்மூன்றும் ஒன்றுபட்டவையே என்பதை மறந்துவிடக்கூடாது.

காதுகள் பயபக்தியுடன் உஷாராக இல்லாமலோ, மனம் லயிக்காமலோ படிப்பது பாராயணம் ஆகுமோ? சொற்களின் பொருளை எப்படி அறிந்துகொள்ள முடியும்?

ஸாயீயின் கதைகளைத் தற்பெருமையுடன் கேட்கக்கூடாது. கேட்பவர்கள் தங்களை மனத்தால் ஸாயீயாகவே பா(BHA)வித்துக்கொள்ள வேண்டும். அந் நிலையில்தான் கேட்பவர்கள் பயன் பெறுவர். அந்த அகண்டமான (இடையறாத) அத்துவைத உணர்வைக் கட்டிக் காப்பாற்றுங்கள்.

அந்நிலையில்தான் இந்திரியங்களின் இயல்பான நாட்டங்கள் ஸாயீயின் ரூபத்தில் நிச்சயமாக ஒன்றிவிடும்.   அந்நிலையில்தான்  நீரி­லிருந்து எழும் அலைகள் நீரிலேயே ஒடுங்கிவிடுகின்றன அல்லவோ? அவ்வாறே இந்திரியங்களின் கொட்டங்களும் ஒடுங்கும் !

அந்நிலையில்தான் ஞானத்தை நாடுபவர்கள் ஆன்மீக போதனை பெறுவர்;  நகைச்சுவையை நாடுபவர்கள் விநோதத்தால் விளையும் மகிழ்ச்சியையும் உல்லாசத்தையும் பெறுவர்;  கவிதை விரும்பிகள் பாடல்களிலுள்ள சொற்பொ­லிவையும் ஒ­லிநயத்தையும் பொருட்சுவையையும் ரசிப்பர்.  இவ்வாறாக, இக்காவியம் (ஸ்ரீ ஸாயீ ஸத்சரித்திரம்) எல்லாருக்கும் ஆனந்தம் அளிக்கும் !


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நானே உங்களைக் காப்பாற்றி, கவனித்துக் கொள்கிறேன் !

உங்களுக்கு நேரிடும் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுங்கள்!   நானே தீர்ப்பவன் ! நானே காப்பவன் ! என்னையே எப்போதும் நினையுங்கள். நானே உங்களைக் காப...