Wednesday, July 17, 2019

வல்லமை வாய்ந்தவர் குரு


குரு அவர்கள் நினைத்தால் ஒரு நொடியில் ஏழையை பணக்காரராக மாற்றிவிடுவார். பிரம்மா எழுதியதைக்கூட  மாற்ற வல்லமை வாய்ந்தவர் குரு மட்டுமே.- ஸ்ரீ குரு சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, July 16, 2019

குருபாத பக்தி

guru poornima saibaba க்கான பட முடிவு

வாழ்க்கையில் "குருபக்தியே பிரதானம்" என்று எடுத்துக்காட்டும் ஸாயீயின் கதைகள் மிகப் புனிதமானது;   நமக்கு போதனையளிப்பது.  கவனமாகக் கேட்பவர்கள் உலக சுக நாட்டங்கள் படிப்படியாகக் குறைவதை உணர்வார்கள். 

எவ்வளவுக்கெவ்வளவு கதை கேட்பவர்களின் நம்பிக்கையும் விசுவாசமும் அதிகரிக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு "ஸாயீயின்  பொக்கிஷம்" அவர்களுக்குத் திறக்கும். குதர்க்கிகளுக்கும் தொந்தரவு கொடுப்பவர்களுக்கும் இந்த லாபம் கிடைக்காது.  "அன்பார்ந்த, நம்பிக்கையுள்ள பக்தனே" இதை அனுபவிக்க முடியும்.

இந்த ஜீவாத்மா (சரீரத்துள் அடங்கிய ஆத்மா) முக்குணங்களுக்கு (ஸத்துவம், இராஜஸம், தாமஸம் ஆகிய மூன்று குணங்கள்) அப்பாற்பட்டதே. ஆயினும், மாயையின் மோஹத்தால், தான் ஸச்சிதானந்த சொரூபம் என்பதை மறந்து, வெறும் தேஹமே என்று நினைத்துக்கொள்கிறது. 

இது நேர்ந்தபின், தேஹத்தின்மீது உண்டான அபிமானத்தினால் "நானே செயல்புரிபவன், நானே அனுபவிப்பவன்!" என்ற நம்பிக்கை பெருகுகிறது. ஒன்றின் பின் ஒன்றாகத் தொடர்ந்து வரும் துன்பங்களால் வாழ்க்கையில் வெறுப்பேற்பட்டுத் தப்பிக்க வழி தெரியாமல் விழிக்கிறது.

குருபாத பக்தியே இந்த ஈனமான நிலையி­ருந்து விடுபடும் மார்க்கமாகும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 15, 2019

மங்களங்கள் உண்டாகும்பாபா கடுமையும் கண்டிப்பும் மிகுந்தவராக துவக்கத்தில் தோன்றலாம். ஆயினும்,  அவருடைய அன்பு லாபம் எதையும் எதிர்பார்க்காதது.

பொறுமையாகவும் தைரியமாகவும் பாபாவிடம் உறவைத் தொடர்ந்தால் நமக்கு மங்களங்கள் உண்டாகும்.

சாபங்களும்,  தாபங்களும்,  சுயநல நோக்கத்துடன் ஏற்படும் ஆசாபாசங்களும், பாபாவின் ஸத்சங்க நிழலில் நாம் புகும்போது ஒவ்வொன்றாக மறைந்துவிடும். இதன் பொருட்டு நாம் பாபாவின் பாதங்களை வணங்க வேண்டும்.

அஹந்தையை விடுத்து விநயத்துடன் பாபாவை சரணாகதி அடைய வேண்டும். நம் மனத்தில் புதைந்து கிடக்கும் ரகசிய விருப்பத்தைப் பிரார்த்தனையாக அவரிடம் வெளிப்படுத்த வேண்டும்.  பாபா நம்முடைய மனதிற்கு பெரும் திருப்தி அளிப்பார்.

அற்பஞானம் விளைவிக்கும் அகந்தையால் சிலர் ஆரம்ப காலத்தில் பாபாவின் திருவாய்மொழியை மனக்கோணலுடன் அணுகி நஷ்டத்திற்கு ஆளாவார்கள்‌. ஆயினும்,  பின்னர் நம்பிக்கையான விசுவாசம் ஏற்பட்டால் அவர்களுக்கு மங்களங்கள் விளையும்.

பாபாவின் பாதங்களை கெட்டியாக பிடித்துக் கொள்பவர் தூயவரானாலும் சரி,  கபடரானாலும் சரி கடைசியில் கரையற்றப்படுவார் என்பது உறுதி.   பாபாவின் ஆற்றல் அளவிடற்கரியது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 13, 2019

'பாபா பாபாஎப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள். நீங்கள் சாயி சாயி என்று சொல்லும்போது, பாபா மிக ஆனந்தத்துடன் அதை கேட்டுக்கொண்டிருப்பார். அதில் சந்தேகமேயில்லை. உதாரணமாக, ரேகே என்ற பக்தர், ரயில் பயணத்தின் போது  இரவு முழுவதும் விழித்திருந்து பாபாவின் பஜனை செய்தார். அவர் ஷீரடிக்கு வந்தபோது பாபா கூறினார். "அவன் நேற்றிரவு முழுவதும் என்னைத் தூங்கவிடவில்லை. இரவு பூராவும் என் படுக்கையைச் சுற்றிலும் 'பாபா பாபா' என்று ஒலி கேட்டுக்கொண்டிருந்தது" என்றார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 12, 2019

தியானம் செய்யுங்கள்இதயத்தால் ஸத்குரு சிந்தனையைச் செய்யுங்கள் ! காதுகளால் அவருடைய சரித்திரத்தைக் கேளுங்கள் !  மனத்தால் இடைவிடாது அவருடைய உருவத்தை தியானம் செய்யுங்கள் ! நாக்கால் அவருடைய பெயரை நாமஸ்மரணம் செய்யுங்கள் !

ஸத்குருவின் கிராமத்திற்குக் கால்களால் நடந்து செல்லுங்கள் !  அர்ச்சனை செய்யப்பட்ட மலர்களின் நறுமணத்தை மூக்கால் நுகர்ந்து பாருங்கள் !   இரு கைகளையும் கூப்பி அவருடைய பாதங்களுக்கு வந்தனம் செய்யுங்கள் !   கண்களால் அவரை தரிசனம் செய்யுங்கள் !

"இவ்விதமாக ஐம்புலன்களின் நாட்டங்களும் பிரீதியுடன் அவரை நோக்கிச் செலுத்தப்படும்போது பக்தர்களின் நிலை பெரும்பேறு பெறுகிறது.  இது கடவுள்-பக்தி இல்லையெனில் வேறு எது கடவுள்-பக்தி !"
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 11, 2019

குரு பூர்ணிமாவில் குருநாமம் !!

saibaba க்கான பட முடிவு

உலகத்தில் உள்ள அனைவருக்கும் செல்வத்தின் மீது ஆசை. அழியக் கூடிய சொத்துக்கள் கிடைப்பதற்கே, பல பாடுகள் பட்டாக வேண்டி இருக்கிறது. ஆனால் அழியாத சொத்தான ஞானத்தை நமக்கு அளிக்க வேண்டுமென்றால், அது யாரால் முடியும்? குருவால் மட்டும்தான் முடியும். குரு வெளியில் உலகத்தினருக்குப் ஏழையாக, எளியவராக, சிறியவராக, பித்தனாக, தெரியலாம். ஆனால் குருவிடம் இருப்பதோ எப்போதும், யாராலும் அழிக்க முடியாத, அள்ள அள்ளக் குறையாத, ஆனந்தமயமான பேரின்பமாகிய ஞானப் பொக்கிஷம்.

எந்த விதமான காரணமும் இல்லாமல், எந்த விதமான பிரதியுபகாரங்களையும் எதிர்பாராமல், வெறும் கருணையினால் மட்டுமே, நமக்கு ஞானச் செல்வத்தை அள்ளித்தரும் குருநாதருக்கு , எமது அக வாழ்விற்கு வழிகாட்டி, தன்னையுணர வழிசெய்த அந்த தியாகத்தலைவனுக்கு நன்றிக்கடன் செலுத்தக்கூடியத் திருநாளே குருபூர்ணிமா. இவ்வாறான குரு பூர்ணிமா தினமாகிய வைகாசிப் பூரணை தினத்தில் ஒரு குருநாதரின் பாதங்களின் அருகில் இருப்பதே பூர்வ ஜென்ம புண்ணியமாகும்.

எனவே இவ்வாறான சிறப்பம்சங்கள் பொருந்திய, பூரணை தினத்தில், சர்வ வல்லமை பொருந்திய சப்தரிஷிகள் ஒன்று கூடும் தினத்தில், குரு பூர்ணிமா தினத்தில், குருவினை எண்ணியிருந்தாலே கோடி புண்ணியம், குரு நாமம் ஜெபித்தாலே வினைகள் எல்லாம் தீரும். அவ்வாறெனின், குருவினை சரணடைந்து, குருவுடனிருந்து தியான ஜெபங்களில் ஈடுபட்டு, குருவினால் ஆசீர்வதிக்கப்பட்டு, குரு உபதேசம் கேட்டு, குவினால் வழங்கப்படும் அன்னப் பிரசாதத்தினை உண்ன வாய்ப்புக் கிட்டுமெனின், அது சர்வநிற்சயமாக பூர்வ ஜென்ம புண்ணியங்களின் பலனேயாகும்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 10, 2019

திடமான நம்பிக்கை வேண்டும்"ஸாயீநாதருக்கு, பக்தனுடைய‌ வணக்கம் செய்யும் இரண்டு கைகளையும்,  தாழ்த்தி வணங்கும் ஒரு தலையையும், தன்மீதான திடமான நம்பிக்கையும்,  வேறு எதிலும் நாட்டம் கொள்ளாத  சிரத்தையையும் தவிர வேறென்ன வேண்டும் !  பக்தனின் நேர்மையான நன்றியுணர்வே அவருக்கு போதுமானது !"
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா  https://youtu.be/R528Bcsq50c http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaib...