
பாபாவை தரிசிக்க வந்த அப்துல் ரங்காரி பாபாவிடம் அனுமதி பெறாமல் சீரடியை விட்டு கிளம்பிச் சென்றார் அவதிக்குள்ளானார். பாபாவின் அனுமதி பெறாமல் சென்ற எவரும் சௌக்கியமாக சென்றதில்லை. நள்ளிரவில் சீரடியை விட்டு ரயில்வே ஸ்டேஷன் போகும் போது வெகு தூரம் சென்றவுடன் வண்டி சாலையிலே பழுதடைந்துவிட்டது. துணை ஏதுமே இல்லாமல் அப்துல் ரங்காரி, அவர் மனைவி குழந்தைகள் யாரும் நடுத்தெருவில் நிற்க வேண்டியதாயிற்று. ஆனால் உண்மையில் துணையற்றவரா அவர்? பாபாவின் அதிமானுட திருஷ்டியும் அதிமானுட நேசமும் அவர் மீது இருந்தது. சீரடியில் தமது வாசஸ்தலத்தில் இருந்தவாறே தமது வியத்தகு சக்திகளால் நடந்தது முழுவதையும் பாபா அறிந்தார். அவர் அந்த சாலையில் ஒரு ஜட்காவாலாவை அனுப்பி அவனை தானாவாலா, தானாவாலா என உரக்கக் கத்தும்படி கூறினார் ஏனெனில் தானாவாலா சென்ற வண்டி பழுதாகி நள்ளிரவில் அவரை நடுத்தெருவில் நிற்கும் படி செய்து விட்டது. டோங்காவாலா, தானாவாலா தானாவாலா எனக் கூறிக்கொண்டே ரங்காரி இருந்த இடத்திற்கே சென்று அவரிடம் பாபாவின் உத்தரவை தெரிவித்தான் பாபாவின் அபார ஞானம், நேயம் ஆகியவற்றை கண்ட ரங்காரி ஆச்சர்யத்தில் மூழ்கினார் அதிசயத்தக்க வகையில் பாபாவால் கனிவுடன் அனுப்பப்பட்ட வண்டியில் ஏறிக்கொண்டு அவர் பாபாவிடம் திரும்பினார். பாபா அவரை எதிர்நோக்கிக் காத்திருந்தார். இந்த அதிசயமானபிரேமையும் துணைபுரிதலையும் என்ன வென்பது !
http://www.shirdisaibabasayings.comhttp://www.facebook.com/shirdisaibabasayingsintamil