Monday, August 31, 2020

குரு சேவையில் உன் வாழ்வை கழித்திடு

Hindu Cosmos | Krishna hindu, Guru wallpaper, Lord vishnu wallpapers

'குரு' மும்மூர்த்திகளின் அவதாரம். ஆகையால் 'குரு' திருப்தி அடைந்தால் மும்மூர்த்திகள் சந்தோஷமடைவார்கள். குரு  கோபித்தால் மும்மூர்த்திகளில் யாரும் காப்பாற்றமுடியாது. குருவின் கருணையினால் மனிதன் முக்தி அடைவான். குரு தன் சீடனுக்கு நல்லது, கேட்டதை தெரிவித்து நன்மார்கத்தில் செல்வதற்கு வழி காட்டுவார். அவர் ஞானஜோதி சொரூபம். அப்படிப்பட்ட குருவின் சேவையினால் மனிதனுக்கு எல்லா வளமும் கிடைத்து சத்கதி அடைவான். எவனொருவன் மிக்க பக்தியுடன், சிரத்தையுடன் குருவை சேவிக்கிறானோ அவனுக்கு சகல தேவதைகள் வசமாகும். ஆகையால் குரு சேவையில் உன் வாழ்வை கழித்திடு -ஸ்ரீ குரு சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, August 30, 2020

உன் குடும்பத்தின் எல்லா பொறுப்பும் பாபாவின் தெய்வீக தோள்களால் தாங்கப்படுகிறது

              

"காகா துலா கால்ஜி கஸ்லி மலா சாரா கல்ஜி ஆஹே " , அதாவது, " காகா, உமக்கு ஏன் கவலையும் பொறுப்பும் ? எல்லா பொறுப்புகளும் என்னுடையவை " - ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா

 ( பாபா தனது பக்தரான எச்.எஸ். தீக்ஷித்திடம் கூறியது. திரு. தீக்ஷீத் பாபாவிடம் வைத்திருந்த திடமான விஸ்வாசத்திற்காக பாபா விசேஷமாக அருளிய வாக்கு இது. மானுட சக்திகளைக் கொண்ட எந்த ஒரு சாதாரண மனிதனும் அத்தகைய சாஸனத்தை அளிக்கமுடியாது. ஆனால், அதை அருளியது தெய்வீக அவதாரமான பாபா.)
பாபாவிடம் பூரண சரணாகதி அடைந்த எல்லா பக்தர்களுக்கும், பாபாவின் இந்த வாக்குறுதி பொருந்தும். அத்தகைய  பக்தன் மற்றும் அவனது குடும்பத்தினரின் எல்லா பொறுப்பும் பாபாவின் தெய்வீக தோள்களால் தாங்கப்படுகிறது, எந்த வித தீங்கு நேரும் என நினைக்கவும் அவசியமில்லை.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, August 29, 2020

உங்கள் வீடே துவாரகாமாயீ தான்

               

"நீ என்னைக் காண இனி இங்கே வந்து சிரமப்படவேண்டாம். நீ எங்கிருந்தாலும், உன்னுடனேயே நான் இருக்கிறேன்" - ஸ்ரீ ஷிர்டி  சாய்பாபா ( பாபா தனது பக்தை சந்திரபாயிடம் கூறியவை {1918} ).
பாபாவின் திருவுருவத்தை அடிக்கடி பார்க்கவேண்டும், அவரை எப்போதும் நினைக்க அது உதவும், என்ற நோக்கத்துடன் பாபாவை போட்டோ எடுப்பதற்கு பம்பாயிலிருந்து சில  மாணவர்கள் காமரா ஒன்றுடன் வந்திருந்தனர். அவர்களுடைய நோக்கம் நிறைவேற போட்டோ எடுப்பது சரியான வழியல்ல, மாறாக அவர்கள் தம்மைக் காண முடியாதவாறு மறைந்து நிற்கும் சுவரை தகர்த்தெறிய வேண்டும் என பாபா அறிவுரை வழங்கினார். அவ்வாறு தடையான சுவர் அகற்றுபட்டு விட்டால் அவர்களும் பாபாவும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் தெளிவாக பார்த்துக் கொள்ள முடியும். தகர்த்தெறிவது என்பது எதிர்மறையான சாதனை. பாபாவின் சூசகமான பேச்சின் உட்பொருள் என்ன?
அந்த வாலிபர்கள் தாங்கள் என்பது தங்கள் உடல்கள் தான் எனக் கருதியது போல், பாபா என்பதும் பாபாவின் சரீரம் தான் எனக் கருதினர். அந்த மாதிரி அனுமானங்களை விடாமல் பாபாவின் உடலை மட்டும் போட்டோ எடுக்க முயற்சி செய்யும் வரை, தங்களை பற்றியும் பாபாவைப் பற்றியதுமான ஸ்வரூபம் சம்பந்தமான அவர்களது தவறான நோக்கங்களிலிருந்து விடுபட முடியாது. 'ஷீரடியிலுள்ள இவ்வுடலைப் பார்த்துவிட்டு சாயி பாபாவைக் கண்டுவிட்டதாக ஒருவன் எண்ணுவானேயாகில் அவன் எண்ணம் தவறானது. நான் இங்கே இல்லை' என சில சமயங்களில் பாபா கூறுவார். 

மேலும் இது போன்று பல நிகழ்வுகளை நம்முடைய தளத்தில் பதிவிட்டு இருக்கிறோம். இனியும் பதிவு செய்வோம். ஷீரடியில் மட்டும் தான் பாபா இருக்கிறார் என்ற எண்ணம் வேண்டாம். பாபாவே கூறியுள்ளபடி தன்  பக்தன் உடன் எப்போதும் இருக்கிறார். பாபாவை ஷீரடியிலோ அல்லது வேறு ஒரு கோவிலுக்கோ கட்டுப்படுத்த வேண்டாம். பாபா மீது அன்பு கொண்டிருக்கும் உங்கள் வீடே துவாரகாமாயீ தான். அவர் இன்றி வேறு யார் உங்களை பாதுகாக்க முடியும்?                                                               ------ சாயி -சாயி-சாயி------

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, August 28, 2020

பாபாவிடம் சரணடையுங்கள்


எனக்கு தெரிந்தது ஒன்றே, என் குரு போதித்த சத்யம். பற்பல சாதனைகளும், புத்தகங்களும் தேவையில்லை. தேவையானது குருவிடம் பூரண சரண், பூரண பிரேமை.  - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 27, 2020

அன்னதானம் செய்யுங்கள்

Shirdi Saibaba Framed Art Prints | Fine Art America

உணவு சமயத்தில் பசியோடு எந்த ஜீவன் வருகிறதோ, மனிதனோ, பறவையோ, மிருகமோ, புழுபூச்சியோ எது வருகிறதோ அதுவே அதிதி. இவை யாவும் உணவை நாடுகின்றன. உன்னிடம் வரும் உண்மையான அதிதியை, நீ அதிதியாகக் கருதுவதில்லை. காக்கைக்கு உணவு அளிக்கும் சமயத்தில், சமைத்த சாதத்தை நிறைந்த அளவில் எடுத்துக்கொண்டு போய்  வீட்டுக்கு வெளியே வை. எந்தப் பிராணியையும் கூவி அழைக்காதே. வந்த எந்தப் பிராணியையும் விரட்டாதே. எந்தப் பிராணி உணவுகொள்ள வந்தாலும் அதைப்பற்றி மனதை அலட்டிக்கொள்ளாதே. இவ்வாறாக இலட்சம்  விருந்தினர்களுக்கு உணவளித்த புண்ணியத்தை நீ பெறுகிறாய்.  "பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாயாக!" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, August 26, 2020

பாபா எப்போதும் உன்னிடம் இருப்பார்

"இங்கு வந்தால் உன்னை அடிப்பேன். வராதே! நீ ஏன் அடிக்கடி ஷீரடி வரவேண்டும்? நான் உன்னிடமிருந்து விலகியா இருக்கிறேன். முட்டாளாக நடந்து கொள்ளாதே!" 


ஒரு சமயம் புரந்தரே என்ற பக்தரின் மனைவி காலராவால் பாதிக்கப்பட்டு மிகவும் வேதனைக்கு உள்ளானால். வைத்தியர்கள் பரிசோதித்து நிலைமை மோசமடைந்ததையடுத்து கைவிட்டு சென்றனர். சாயி பக்தரான புரந்தரே அப்படி நம்பிக்கை இழந்துவிடுவாரா? தம்முடைய தெய்வமான சாயிநாதனிடம் பூரண நம்பிக்கையுடன் வீட்டிற்கு எதிரில் இருந்த மாருதி ஆலயத்திற்கு வந்தார். என்ன ஆச்சர்யம்! அங்கு அவர் முன் சாயிநாதன் தோற்றமளித்து, "அஞ்சேல்! உன் மனைவிக்கு ஊதியும், தீர்த்தமும் கொடு" என்று அபயமளித்து மறைந்தார். அவ்வாறே புரந்தரே தம் மனைவிக்கு உதியை நீரில் கலந்து அளித்தார். ஒரு மணி நேரத்தில் அவர் மனைவி நன்றாக மூச்சுவிட ஆரம்பித்தார். பின்னர் வந்த வைத்தியர் நோயாளியை பரிசோதித்து, "இனி பயமில்லை" என்றார்.
மற்றொரு சமயம் புரந்தரே ஷீரடிக்கு உடனே ஓடிச் செல்ல எண்ணினார். ஆனால் பாபா அவர் கனவில் தோன்றி, "இங்கு வந்தால் உன்னை அடிப்பேன். வராதே! நீ ஏன் அடிக்கடி ஷீரடி வரவேண்டும்? நான் உன்னிடமிருந்து விலகியா இருக்கிறேன். முட்டாளாக நடந்து கொள்ளாதே!" என்று எச்சரித்தார்.   (பாபாவிடம் பூரண சரணாகதி அடைந்த பக்தர்கள் எங்கிருந்தாலும் அவர்களுடன் பாபா எப்போதும் இருக்கிறார். இக்கட்டாண சூழ்நிலைகளில் நேரிலோ சூக்ஷம ரூபத்திலோ தோன்றி தனது பக்தனை காப்பாற்றுகிறார். பாபாவை நம்புங்கள்.ஓம் சாய்ராம் ) 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 24, 2020

ஸ்வாமி சமர்த்தர்

                 Swami Samarth | Swami Akkalkot | Sri Samarth Swami & Akkalkot Maharaj

அக்கல்கோட்டில், அன்று ஒரு விசேஷ தினம். பலரும் ஸ்வாமி சமர்த்தரை  தரிசனம் செய்ய வந்து இருந்தார்கள். அவரவர்கள் பலவிதமான பிரசாதங்களையும் கொண்டு வந்து ஸ்வாமிகளுக்கு தந்தவண்ணம் இருந்தார்கள். சிலர் கொண்டு வந்ததை தொட்டு ஆசிர்வதித்தார். சிலரது பிரசாதத்தில் ஒரு கை விரல் நுனியளவு எடுத்து சாப்பிட்டு அவர்களை திருப்தி  படித்தியபடி அனுப்பியவாறு இருந்தார். அலை மோதும் வண்ணம் அளவு கூட்டம் அங்கு இருந்தது. ஒருவர் பின் ஒருவராக ஸ்வாமிகளை அருகில் சென்று தரிசித்து விட்டு சென்று கொண்டு இருந்தார்கள்.
அந்தக் கூட்டத்தில் ஒரு ஏழைப் பெண்மணியும் வந்து இருந்தாள். சாயம் போன சேலை…ஆனால் ஸ்வாமிகளைக் காண வேண்டும் என்ற உறுதி… தன் வீட்டில் இருந்து தான் கொண்டு வந்திருந்த எளிய பிரசாதத்தை கொடுக்க வேண்டும் என்ற ஆவல். ஆனால் அவள் மனதில் பயம். தானோ பரம ஏழை. ஆகவே அதை ஸ்வாமிகள் அதை தீண்டுவாரோ மாட்டாரோ. அவரை நெருங்கக் கூட அங்கிருந்தவர்கள் தன்னை அனுமதிக்க மறுக்கின்றார்களே என வருந்தியவாறு ஒரு மூலையில் அமர்ந்து ஸ்வாமிகளை பார்த்தபடி இருந்தாள்.  சிறிது நேரம் ஆயிற்று. கூட்டம் கலையவில்லை. அமர்ந்து இருந்த ஸ்வாமிகள் எழுந்து நின்றார்.
மூலையில்  அமர்ந்து இருந்த அந்த ஏழைப் பெண்மணியை தன் அருகில் வருமாறு அழைத்தார். ஸ்வாமிகள் யாரை அழைக்கின்றார் எனத் தெரியாமல் அங்கு இருந்த  பணக்காரர்களும், வசதியாக இருந்த  மனிதர்களும்  நானா….நானா…..என ஒவ்வொருவராக கேட்க, ஸ்வாமிகளும்  அவர்களிடம் நீ இல்லை….நீ இல்லை எனக் கூறிவிட்டு, மீண்டும் மீண்டும் அந்த ஏழைப் பெண்மணியை நோக்கி தன் கையைக்  காட்ட அனைவரும்  ஒரே வியப்பு. எதற்க்காக அந்த ஏழைப் பெண்மணியை அவர் அழைக்கின்றார்?
ஸ்வாமிகள் அழைத்ததினால் அவர் அருகில் சென்று அவரை வணங்கினாள் அந்தப் பெண்மணி. அவள் எதுவுமே கூறும் முன் அவர் ‘ நீ கொண்டு வந்துள்ள பிரசாதத்தைக் கொடு’ என்றார். வெட்கத்துடன் தான் கொண்டு வந்திருந்த சிறிதளவு பிரசாத பாத்திரத்தை சுவாமிகளிடம் அவள் காட்ட அவர் அந்த பாத்திரத்தை வாங்கிக் கொண்டு அமர்ந்து கொண்டார். அதில் இருந்த சாப்பாட்டை எடுத்து உண்ணத் துவங்கினார்.  அதில் இரண்டு    கவளம் எடுத்து உண்டப்பின் மீதி இருந்த இரண்டு கவளத்துடன் அதை அவளிடம் திருப்பித் தந்தார். ‘விரைவில் உனக்கு நல்ல குறும்புக்காரப் பிள்ளைப் பிறப்பான்’ என அவளை ஆசிர்வதித்தார்.

நாற்பத்தி ஐந்து வயதான அந்தப் பெண்மணி திகைத்து நின்றாள். தனக்கு  குழந்தை இல்லை என்ற மனவருத்தம் இவருக்கு எப்படித் தெரிந்தது?  தான் ஏழை என்பதையும் பார்க்காமல் அத்தனைக் கூட்டத்திலும்  தன்னை அழைத்து தான் கொண்டு வந்து இருந்த மிக சாதாரமான பிரசாதத்தை ஆசையுடன் அனைவர் முன்னிலையிலும் உண்டாரே….ஸ்வாமிகளின் அன்புதான் என்னே…… கண்களில் கண்ணீர் வழிந்தோட அவள் ஸ்வாமிகளின் காலடியில் விழுந்து சிறிது நேரம் அழுது  புலம்பினாள்.  அங்கு நடந்தவற்றை  பார்த்தபடி நின்று இருந்த அனைவரும் அதிர்ந்து போனார்கள்.  ஒவ்வொருவரும் தான்தான் ஸ்வாமிகளின் உண்மையான பக்தர் என எண்ணிக் கொண்டு  பெருமையுடன்  பலவிதமானா திரவியங்கள் போட்ட மணக்கும்  பிரசாதத்தை ஸ்வாமிகளிடம் தந்தாலும் ஒரு ஏழையின் எளிய பிரசாதத்தை வாங்கிக் கொண்டு  அதை ஆசையுடன் அவர் உண்டது அவர் ஏழை – பணக்கார பந்தங்களைக் கடந்த உண்மையான தெய்வமே  என்பதை அல்லவா காட்டியது! ஸ்வாமிகளின் ஆசிகளைப் பெற்ற அந்தப் பெண்மணிக்கு அடுத்த ஆண்டே அழகிய குழந்தை பிறந்தது.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா  https://youtu.be/R528Bcsq50c http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaib...