Friday, January 8, 2021

உன் இடத்தில் எனக்கு ஒரு கோவில் எழுப்பு ! இனிமேல் இங்கு வராதே !மும்பைக்கருகில் அக்ரூல் என்னுமிடத்தில் வசித்த திரு.கேசவ்பிரதான் என்பவர் 1916-ல் தன் நண்பரோடு ஷீரடிக்கு பாபாவைத் தரிசிக்க வந்தார்.  அவர் பாபாவிடம், "பாபா! என்னிடம் அன்பு கொண்ட எல்லோரும் என் குழந்தைகளே என்கிறீர்கள்!  அப்படியானால் ஏன் நீங்கள் அக்ரூலுக்கு வரக்கூடாது?"  என்று கேட்டார்.

பாபா அவரிடம் தன் படம் ஒன்றைக் கொடுத்து,  "உன் இடத்தில் எனக்கு ஒரு கோவில் எழுப்பு !  இனிமேல் இங்கு வராதே !"  என்றார்.  பாபாவின் உத்தரவுக்கு உட்பட்டு , கேசவ்பிரதான் தனது சொந்த ஊரான அக்ரூலில் பாபாவுக்கு கோவில் கட்டினார்.  அந்த கோவிலில் பாபாவின் தரிசனம் வேண்டி வந்தவர்கள் பலரும் "கோவிலின் எல்லையில் பாபா சகஜமாக நடமாடுவதைப் பார்த்ததாகக் கூறினார்கள்" 

1940-ல் கேசவ் பிரதானின் காலம் முடிந்தது.  பாபா ஆலயத்தைப் புதுப்பிக்க குப்தா,  நாராயண் புரோஹித், தாபோல்கரின் மகன் ஏ.ஆர்.வேல்வால்கர் போன்ற பக்தர்கள் முயன்றனர்.  ஆனால் அதற்கான போதிய நிதி வசூலாகவில்லை. 

நிதி வசூலுக்கு வேறுவித முயற்சியாக,  கோவிலில் ஸ்ரீ சாயி சத்சரித்திரம் சப்தாக பாராயணம் செய்யப்பட்டது.  பாராயணத்தின் நான்காவது நாள் நாராயண் புரோஹித் கனவில் பாபா தோன்றி,  "என்னுடைய தூனி எங்கே?  தூனி இல்லாத ஆலயத்துக்கு எப்படி வசூலாகும்?" என்று பாபா கோபமாகக் கேட்டதாகவும், அதே சினத்துடன் அவர் மீது கற்களையும் வீசி எறிந்ததாகவும் நாராயண் புரோஹித் கூறினார்.

உடனடியாக  மற்ற கோவில் நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து அனுமதி பெற்று ,  கோவில் வளாகத்திலேயே 8"*4" சதுர அடிப்பரப்பில் தூனிக்கான கட்டிடம் எழுப்பி,  7-4-1949ல் காலை பத்து மணி சுபமுகூர்த்த வேளையில் தாபோல்கரின் மகன் ஏ.ஆர்.வால்வேல்கர் தூனியை ஏற்றினார்.

தூனியை நிறுவிய மறுநாள் அதிகாலை சுமார் மூன்று மணியளவில், "பாபா கோவிலின் கதவைத் திறந்து உள்ளே சென்று மீண்டும் கதவை மூடிக்கொண்டதைக் கண்கூடாகப் பார்த்ததாக" அந்த ஊர் மக்கள் பலரும் ஆச்சர்யத்தோடு கூறினர்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 7, 2021

அன்பு குழந்தையே, அன்பு மகளே


{ முழுவதும் படிக்கவும் }

ஸ்ரீ சாயி சத்சரித்திரம் படிக்கப்படும் வீடுகளில் திருமகள் நித்தியவாசம் செய்வாள். சப்தாஹமாகப் ( ஏழு நாள்களுக்குள் ஒரு சுற்று படித்து முடித்தல்) படிப்பவரின் தரித்திரம் பறந்தோடும். சகலமான நற்குணங்களின் சுரங்கமும் பக்தர்களுக்குக் கைவல்ய பதவியை (முக்தியை) அளிப்பவருமான சாயியின் கதையை பக்தர்கள் தினமும் கேட்கவேண்டும். அவருடைய கதைகள் கலியுகத்தின் பாவங்களை அழிக்கும். பக்தியோடும் முழுநம்பிக்கையோடும் சாயிபக்தர்கள் தினமும் சத்சரித்திர பாராயணம் செய்யவேண்டும். 
சாய் பக்தர்களாகிய நமக்கு சாய் சத்சரித்திரமே வேதம். சாய் சத்சரித்திரத்தின் மூலம் பாபா நம்முடன் பேசுவார். இது அனுபவ பூர்வமான உண்மை. தனது லீலைகள் படிக்கப்படும் இடத்தில் பாபா இருப்பதாக உறுதி அளித்துள்ளார். தினமும் ஒரு அத்தியாயம் படியுங்கள். நம்பிக்கையுடன் படிப்பதாலேயே உங்கள் வீடு பாபா வசிக்கும் துவாரகாமாயீ ஆக ஆகிவிடும். 
இன்று சமூக வலைத்தளங்களில் பாபாவே பேசுவது போல் "அன்பு குழந்தையே, அன்பு மகளே" அன்று ஆரம்பித்து அதிகமான கதைகள் பதிவிட்டு வருகிறார்கள். நானோ அல்லது நீங்களோ பாபா பேசுவது போல் ஆறுதலான நான்கு வார்த்தைகளை எழுதினால், அது பாபாவின் வாக்குறுதி ஆகிவிடுமா? பாபா தனது சிஷ்யனாக யாரையும் குறிப்பிடவில்லை. தக்க சமயத்தில் பாபா நேரடியாக பேசுவார். எல்லாம் வல்ல பாபா தனது பக்தனிடம் தனித்தன்மையான முறையில் வெளிப்படுத்திக்கொள்வார்.  தயவு செய்து சிந்தித்து இது போன்ற கதைகளை படிக்காமல், பாபாவால் அருளப்பட்ட ஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 6, 2021

sri sainatha sthavana manjari / sri sai sahasranamavalihttp://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நினைத்தது நிச்சயமாக நடக்கும்


பாபா தேகத்துடன் இல்லை. ஆயினும், அவரை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு, தேகத்துடன் இருந்தபோது செய்தது போலவே நன்மைகள் செய்து பாதுகாத்து வருகிறார். அவர் தேகத்தை விடுத்துவிட்டதால் அவரின் வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகள் என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் பாபாவின் திருவாய்மொழி பிரம்மதேவரின் எழுத்துக்கு (தலையெழுத்துக்கு) ஒப்பாகும். நம்பிக்கையுடன் அனுபவத்திற்காக காத்திருங்கள்.உடனே நடக்காவிட்டாலும் காலப்போக்கில்
நிச்சயமாக நடக்கும்.-ஸ்ரீ சாயி இராமாயணம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 5, 2021

உனது விருப்பம் நிறைவேறும்


பகவான் உங்களுக்கு இன்பமயமான இருப்பிடத்தை அளிப்பார். மிக்க வாத்சல்யத்துடன் உங்கள் விருப்பங்கள் யாவற்றையும் நிறைவேற்றுவார். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இவை எனது வாக்குகள்.

 - ஸ்ரீ சீரடி சாய்பாபா. (தாஸ்கணுவின் சாயி ஹரி கதா)

 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, January 4, 2021

sri sai sthavan manjari / sri sai sahasra namavali
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நூறு பங்குக்கு மேலேயே பாபா உனக்கு திரும்ப கொடுப்பார்


தர்மத்தை பற்றி பாபா, நம்பிக்கையுடன் கொடுங்கள், பணிவுடன் கொடுங்கள், பயபக்தியுடன் கொடுங்கள், இரக்கத்துடன் கொடுங்கள். தான தர்மத்தை அடியவர்களுக்கு போதிப்பதற்கும் பணத்தில் அவர்களுக்குள்ள பற்று குறைவதற்கும் அதன் மூலம் அவர்கள் மனது சுத்தமடையும்படி செய்வதற்கும் பாபா பக்தர்களிடமிருந்து தக்ஷிணையைக் கட்டாயமாகப் பெற்றார். அனால் அதில் ஒரு விசித்திரம் இருந்தது. அதாவது தாம் வாங்கியதைப் போன்று நூறு பங்குக்கு மேலேயே திரும்பக் கொடுத்தார். - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்

பாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார்.  ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த...