
அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Saturday, August 21, 2021
Tuesday, August 17, 2021
Saturday, August 14, 2021
Friday, August 13, 2021
SAIBABA TAMIL STORIES -1 / BABA NIGALTHIYA ARPUDHAM
SAIBABA TAMIL STORIES -1 / BABA NIGALTHIYA ARPUDHAM
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
Wednesday, March 17, 2021
எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்
பாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார். ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த்து வெள்ளையடிக்கும் வேலை நடைபெற்றது. அந்த சமயம் அவர் வேலை விசயமாக பம்பாய்க்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் அங்கு சென்றுவிட்டார்.
அன்று இரவு பாபா ஷாமாவின் கனவில் தோன்றி, "ஷாமா! நீ பாதுகாத்த என் உதிப்பொட்டலம் உன் வீட்டுக்கருகிலுள்ள குப்பைத் தொட்டியில் கிடக்கிறது. உடனே வீட்டுக்குச் சென்று அதை பாதுகாத்து வை !" என்றார்.
ஷாமா உடனடியாக பம்பாயிலிருந்து கிளம்பி வீட்டுக்குத் திரும்பினார். பூஜையறை பழுது பார்க்கப்பட்டு படங்களெல்லாம் மாட்டப்பட்டிருந்தன. பூஜைப் பொருட்களில் பலவும் இடம் மாற்றி வைக்கப்பட்டிருந்தன. ஆனால் பாபாவின் உதிப்பொட்டலத்தை மட்டும் காணவில்லை.
விரைந்து சென்று வீட்டுக்கு பக்கத்திலிருந்த குப்பைத் தொட்டி அருகே தேடினார். அதிர்ஷ்டவசமாக உதிப்பொட்டலம் கிடைத்தது. அதை பயபக்தியுடன் எடுத்து வந்து கண்களில் ஒற்றி, "எங்கள் தவறுகளின் அறியாமையை மன்னித்து விடுங்கள் பாபா !" என்று கூறி மீண்டும் பூஜையறையில் பாபாவின் படத்தின் முன் பத்திரமாக வைத்தார்.
"அயராத கண்காணிப்புடன் கூடிய எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்." என்ற பாபாவின் கூற்று இதன் மூலம் தெளிவாகிறது.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
Tuesday, March 16, 2021
உங்களுடைய பாவங்கள் அழிந்துவிடும்.
என்னுடைய கதைகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதைப்பற்றியே சிந்தனை செய்யுங்கள். பிறகு அதையே மறுபடியும் மறுபடியும் தியானம் செய்யுங்கள். அவ்வாறு என் கதைகளை தினமும் ஞாபகப்படுத்திக் கொண்டு, சிந்தனை செய்தால் உங்களுக்கு மிகுந்த ஆனந்தம் விளையும். இந்த முறையில் உங்களுடைய காதுகளால் கேட்டதை இதயத்தில் சேமித்து வைத்தால், உங்களுடைய மங்களம் எனும் சுரங்கத்தை நீங்களே திறந்து வைத்தவர் ஆவீர்கள். உங்களுடைய பாவங்களும் அழிந்துவிடும்.
- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
Monday, March 15, 2021
சாயி உங்கள் அருகிலேயே இரவும் பகலும் இருக்கிறார்
பாபாவிடம் பக்தி உடையவருக்குக் குறை ஏதும் உண்டோ? அவர் மனத்தால் என்ன வேண்டுமென்று விருப்பப்படுகிறாரோ, அது அவரிடம் உழைப்பு ஏதுமில்லாமலேயே வந்து சேரும். யாரை பாபா அரவணைக்கிறாரோ, அவர் தம்முடைய வீட்டிலிருந்தாலும் சரி, ஏதோ தீவிலிருந்தாலும் சரி, சர்வ நிச்சயமாக சாயி அவரருகில் இரவும் பகலும் இருக்கிறார். பக்தர் எங்கே சென்றாலும் எவ்விடத்தில் இருந்தாலும், சாயி அவருக்கு முன்னமேயே அங்கே சென்று சற்றும் எதிர்பாராத வகையில் தரிசனம் அளிக்கிறார்.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
Subscribe to:
Posts (Atom)
நானே உங்களைக் காப்பாற்றி, கவனித்துக் கொள்கிறேன் !
உங்களுக்கு நேரிடும் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுங்கள்! நானே தீர்ப்பவன் ! நானே காப்பவன் ! என்னையே எப்போதும் நினையுங்கள். நானே உங்களைக் காப...
