Thursday, June 16, 2022

நீங்கள் என்னை புரிந்துகொண்டால் வீணாக கஷ்டப்பட மாட்டீர்கள் !எதை எதையோ சாதிக்க வேண்டுமென்ற உத்தேசத்தால்,  வீணான முயற்சிகள் செய்யவேண்டாம். விரதங்கள், தீட்சைகள்,  ஹடயோகங்கள், உபவாச தீட்சைகள், உடலை வருத்தும் யாத்திரைகள்  போன்ற முயற்சிகளைச் செய்து களைத்துப் போகாதீர்கள்.  உங்கள் தேவைகளை நிறைவேற்றவே நான் அவதரித்துள்ளேன். உங்களுடனேயே நான் எப்பொழுதும் இருக்கிறேன். உங்களுடன் நான் இவ்விதமாக இருக்கையில், நீங்கள் எதைத் தேடுகிறீர்கள்? எதற்காகத் தேடுகிறீர்கள்? என்பது எனக்கு புரியவில்லை.  நீங்கள் என்னை புரிந்துகொண்டால் வீணாக கஷ்டப்பட மாட்டீர்கள். என் வார்த்தைகளை நம்புங்கள் !


- ஸ்ரீஸாயீ திருவாய்மொழி

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 15, 2022

எனது கதைகள் உங்களுக்கு உண்மையான வழியைக்காட்டி ஆசீர்வதிக்கும் !எனது கதைகளை உங்களது உள்ளத்தில் பதிவேற்றுங்கள்.  ஒவ்வொரு கதையும் தரும் குறிப்பு நுட்பத்தை நன்றாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அதனால் உங்களது மனத்தின் பதைபதைப்பு மறைந்தொழியும். உங்களுக்கு உண்மையான சாந்தியும் அமைதியும் கிடைக்கும்.  எனது கதைகள் உங்களுக்கு உண்மையான வழியைக்காட்டி ஆசீர்வதிக்கும்.


- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 14, 2022

மனத்தூய்மை, வாக்குத்தூய்மை, செயல்தூய்மை கொண்டிருங்கள் !


ஒரு மனிதன் வறுமையின் பிடியிலிருந்தும் பாவச் செயல்களிலிருந்தும் விடுபடவேண்டும் என்றால் அவன் "மனத்தூய்மை", "வாக்குத்தூய்மை", மற்றும் "செயல்தூய்மை" பெற்றிருக்க வேண்டும்.  இதற்கு "திரிகரண சுத்தி" என்று பெயர்.  மனதில் என்ன எண்ணம் தோன்றுகிறதோ அதுவே பேச்சாக வரவேண்டும்.  எது பேச்சாக வெளிப்படுத்தப்படுகிறதோ அதுவே செயலிலும் காணப்படவேண்டும்.  ஒரு "திரிகரண சுத்தி"  அடைந்த மனிதன் மஹாபுருஷன் ஆகிறான்.


- ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 13, 2022

ஆசையைத் துறந்தவனே அமைதியைப் பெறமுடியும் !பணத்தாசையை வெல்வது மிகக் கடினம். அது துக்கமும், இன்னல்களும் நிரம்பிய ஆழமான நதியைப் போன்றது. அந்த நதியில் பல பேராசைச் சுழல்களும், திமிர், ஆணவம், பொய், களவு, பொறாமை,  அஹம்பாவம் போன்ற எதிர்த்துப் போராட முடியாத பல முதலைகளும் இருக்கின்றன. ஆசையைத் துறந்தவனே அந்த ஆபத்தான நதிச் சுழலிலிருந்து தப்பிக்க முடியும் ; அமைதியைப் பெறமுடியும் ! பிரம்மத்தை அடைய முடியும் !.


- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 12, 2022

மண்ணிறங்கி வந்த தெய்வம் ஸாயீபாபா !"மனித உருவமேற்காமல் ஸாயீ விட்டுவிட்டிருந்தால், கலியுக மாயையிலிருந்துக் காப்பாற்றி, உலக மக்களுக்கு நல்வழி காட்டுவதும், துஷ்டர்களையும் கெடுமதியாளர்களையும் தண்டித்துச் சீர்திருத்துவதும், பக்தர்களுக்கு அநுக்கிரஹம் செய்வதும் எப்படி சாத்தியம்?"


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 11, 2022

ஸாயீயின் கிருபையால் நாம் தூயவராக ஆக்கப்படுவோம் !பாபாவின் பாதங்களில் மகிழ்ந்து மூழ்கிவிட்டால், ஸாயீயின் கிருபையால் நாம் தூயவராக ஆக்கப்படுவோம். பாபாவின் சேவடிகளில் நிரந்தரமாகத் தங்கிவிடுவோம்.  ஸாயீபக்தியின் பிரபாவமும் வீரியமும், நமக்குள் இருக்கும் பொறாமையையும், 
தீய இயல்புகளையும் விரட்டியடித்துவிடும். சாந்தியையும் செல்வச் செழிப்பையும் தைரியத்தையும் ஓங்கி வளரச் செய்யும்.


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 10, 2022

உங்கள் பூஜையின் பலன் மீண்டும் உங்களுக்கே திருப்பி அளிக்கப்படும் !இறைவனின் செயல்களை புரிந்து கொள்ள முடியாமல் போனாலும், அது பொருளற்றது என்று கூற இயலாது. செயல் ஓரிடத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும், பலன் மற்றோரிடத்தில் கிடைத்துக் கொண்டிருக்கும்.  ஆகையால் நீங்கள் எங்கு இருந்து கொண்டு ஆராதனை செய்தாலும், அது இறைவனுக்கு தெரிந்து கொண்டுதான் இருக்கும்.  உங்கள் பூஜைகள் அவரை அடைந்து கொண்டேதான் இருக்கும்.  அந்த பூஜையின் பலன் மீண்டும் உங்களுக்கே திருப்பி அளிக்கப்படும். அனைவரையும் கடைத்தேற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடுதான் இறைவன் இருப்பார் என்பதை மறந்துவிடாதீர்கள்!


- ஸ்ரீஸாயீ திருவாய்மொழி

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...